முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

The Inscrutable Americans

நகைச்சுவையில் எழுத்தில் ஆளை மட்டம் தட்டும் மட்டமான ரகத்தில் உயர்வான முறையில் எழுதுபவர்கள் இருக்கிறார்கள். தமிழில் சாருவை சுட்டலாம். அனுராக் மாத்தூரின் நகைச்சுவை இப்படிப் பட்டது.

சமூகம் எனும் மலைப்பாம்பு

எனக்குக் கூட சிலவேளை ஒரு தீவிரவாதியாகவோ சைக்கோ கொலைகாரனாகவோ ஆனால் என்ன எனத் தோன்றும். அப்போதெல்லாம் இன்னொரு எண்ணமும் வரும்: இந்த சமூக விரோதிகள் உண்மையில் தீவிர சமூக அக்கறை கொண்டவர்கள் என்று. என்ன தம் அக்கறையை எதிர்மறையாக காண்பிக்கிறார்கள். அழிப்பதன் மூலம் நானும் உங்களில் ஒரு பகுதி என பொது சமூகத்திடம் சொல்ல தலைப்படுகிறார்கள். அப்படிப் பார்த்தால், சமூக விரோதிகள் நீட்சேயியவாதிகளாக இருக்க முடியாது. அவர்களுக்கு சமூகத்திடம் மரியாதையும் தொடர்புறுத்தும் விருப்பமும் உண்டு. சமூகம் தமக்கு இணை என நம்புகிறார்கள். இல்லை என்றால் இவ்வளவு பிரயத்தனித்து சமூகத்தை திருத்தவோ அல்லது பழிவாங்கவோ முயல்கிறார்கள்?

ராஜூமுருகனின் “வட்டியும் முதலும்”: சுரண்டல் எழுத்து

ராஜூ முருகனின் “வட்டியும் முதலும்” படித்து விட்டு படத்தயாரிப்பாளர்கள் சாக்கு மூட்டை நிறைய பணத்துடன் அவரது வரவுக்காக காத்திருப்பதாக ஒரு இயக்குநர் சன் நியூஸின் “திரைப்படமும் இலக்கியமும்” என்கிற விவாதத்தின் போது குறிப்பிட்டார். உடனே அதன் ஒருங்கிணைப்பாளர் குறுக்கிட்டு அந்த பத்தியை அவர் ஏதாவது சிறுபத்திரிகையில் எழுதியிருந்தால் கவனித்திருப்பார்களா என்றார்.

கொடுத்து வைத்த வாழ்க்கை!

என் கூடப்படித்த நண்பன் ஒருவனின் அப்பா சில மாதங்களுக்கு முன் காலமானார் . அவன் படுமக்கு . அவர் தான் பெருந்தொகை லஞ்சம் கொடுத்து பையனுக்கு அரசு வேலை வாங்கித் தந்தார் . ஆனால் அப்பாவுக்கு மகன் மீது அப்படி ஒரு பெருமை . சதா புகழ்ந்து கொண்டே இருப்பார் . இன்னொரு பக்கம் பல புத்திசாலியான திறமைசாலியான மகன்களை மட்டம் தட்டும் தகப்பன்களை பார்த்திருக்கிறேன் . இந்த முரண்பாட்டுக்கு ஏதோ ஒரு பொது நியதி இருக்கிறது .

குருதி சொரியும் ஒரு கையின் சுவை

ஒரு நீண்ட சுயமைதுனத்தின் முடிவு ஒரு நீண்ட வெந்நீர் மழையில் படிகத்துளிகளிடையே ஆயிரமாயிரம் சிதறல்களாய் நகர்ந்து ஒரு அரையிருள் கடற்கரையை வந்தடைவதைப் போன்று உள்ளது.

பித்தி மொஹந்தி – நம் காலத்தின் நாயகன்

ஜான் டேவிட் ஜாமீனில் இருந்த போது வேளச்சேரி பி.பி.ஓ ஒன்றில் போலி சான்றிதழ் அளித்து போலி பெயரில் வேலை செய்ததை அறிவோம். இப்போது ஜெர்மன் மாணவியை கற்பழித்த பித்தி மொஹந்தி, ஏழு வருடம் தலைமறையாய் இருந்ததாய் சொல்லப்படுகிற காலத்தில் இந்திய ஸ்டேட் பேங்கில் துணை மேலாளர் பதவியில் வேலை பார்த்து இருந்திருக்கிறார். அவரும் போலி பெயர், போலி சான்றிதழ் தான் பயன்படுத்தி இருக்கிறார். இதை விட முக்கியமாய், அவர் 2006இல் ஐ.ஏ.எஸ் பரீட்சையின் முதல் கட்டத்தில் தேர்வாகி விட்டதாகவும் தெரியவருகிறது. அவர் முழுப்பரீட்சையிலும் வென்று இதே போலி பெயரில் ஒரு ஆட்சியராக வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் எனத் தோன்றுகிறது. உண்மையில் அப்படி நடந்திருந்தால் நமது அரசு அமைப்புகளில் உள்ள ஊழல்கள் இன்னும் பிரம்மாண்டமான முறையில் வெளிப்பட்டிருக்கும்.

இந்து, இஸ்லாம், கிறுத்துவம்: குட்டையும் மட்டையும்

என்னுடைய ஒரு நண்பருடன் இந்துப்பத்திரிகை பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் போது அவர் தனக்கு சமீபமாக அப்பத்திரிகை பிடிக்காமல் போய் விட்டது என்றார். அது இந்து மதத்தை அவமானிக்கும் வகையில் செயல்படுவதாக காரணம் குறிப்பிட்டார்.