அண்மையில் நடிகர் விவேக் காலமானதை ஒட்டி மன்சூர் அலிகான் அளித்த ஆவேசப் பேட்டியை பார்த்திருப்பீர்கள். தடுப்பூசிக்கும், கொரோனா நோய்த்தொற்று மீதான அச்சத்துக்கும் எதிராக அவர் வைத்த குற்றச்சாட்டுகள், சதித்திட்ட கற்பனைகள் தவறாக பலருக்கும் பட்டது. கடுமையான கண்டனங்கள் எழுந்தன. இருந்தாலும், அவர் சொன்னதில் சிறிது உண்மை உள்ளதாகவே எனக்குத் தோன்றியது. இது நான் ஆரம்பத்தில் இருந்தே சொல்லி வருவது தான் - இதுவரை கொரோனாவால் நேரடியாக மரணமுற்றவர்களில் இளைஞர்கள், 60 வயதுக்குக் குறைவானவர்கள் சொற்பமே. Worldometer இணையதளத்தில் இருந்து புள்ளிவிபரத்தை தருகிறேன்: கொரோனாவால் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள்: 15, 061, 919. குணமானவர்கள்: 12, 953, 821 இறந்தவர்கள்: 1, 78, 793 அதாவது 80% பிழைத்து விடுகிறார்கள். 20% பேர் மட்டுமே மரணமடைகிறார்கள். இருந்தும் நாம் ஏன் கொரோனா வந்தால் அடுத்த நிமிடமே மக்கள் விழுந்து துடிதுடித்து இறந்து விடுவார்கள் என அஞ்சுகிறோம்? விபத்திலும், பல்வேறு நோய்களாலும் இதை விட அதிகமானோர் தினசரி இறக்கும் போது ஏன் கொரோனாவுக்கு மட்டும் இவ்வளவு அஞ்சுகிறோம்? 1. அரசு இதற்கு தனி ...