முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கருத்துக் கணிப்பு

நண்பர்களே

இது ஒரு சிறு கருத்துக் கணிப்பு.

எதைக் குறித்து?

அதிகபட்சமாய் நாலு மணி நேரம் ஒப்பித்து விட்டு நம் கல்லூரி ஆசிரியர்கள் பலர் இன்று ஐம்பதாயிரத்துக்கு மேல் ஈட்டுகிறார்கள். நம் சமூகத்தில் கல்லூரி ஆசிரியர்கள் அளவுக்கு குறைந்த உழைப்பும் மிகுந்த சொகுசுமாக வாழும் மற்றொரு தொழில் வர்க்கம் இல்லை என்று நினைக்கிறேன். இது உண்மை என்று நம்புகிறீர்களா?

நம்பும் பட்சத்தில் நம் வரிப்பணம் அல்லவா வீணாகிறது. கல்லூரி ஆசிரியர்களின் வேலைப்பளுவை அதிகரித்து அதன் மூலம் அதிக சமூக பங்களிப்பு செய்ய வைக்கலாமா?

உங்கள் கருத்தை ஆம் அல்லது இல்லை என்று சுருக்கமாகவோ விரிவாகவோ எழுதலாம்.

இந்த கருத்துக் கணிப்பின் நோக்கம் என்ன?
கல்லூரி ஆசிரியர்களின் வேலைப்பளுவை அதிகரிப்பது பற்றி ஒரு கட்டுரை எழுத உள்ளேன். உங்கள் கருத்துக்கள் ஒரு தூண்டுதலாகவும், வலு சேர்ப்பதாகவும் அமையும். உங்கள் அனுமதியுடன் அவற்றை என் கட்டுரையில் குறிப்பிடவும் திட்டமிட்டுள்ளேன்.

இந்த கருத்துக் கணிப்பின் பயன் என்ன?

ஒரு சமூக அநீதிக்கு எதிரான அறிவார்ந்த சமூகத்தின் குரலாக அமையும். ஒரு மாற்றத்துக்கான துவக்கமாக, மௌனித்த குளத்தில் சிறு கல்லாக உங்கள் கருத்து அமையும்.

நன்றி!

abilashchandran70@gmail.com

கருத்துகள்

Shan Nalliah / GANDHIYIST இவ்வாறு கூறியுள்ளார்…
I have new idea! Join & start a branch in your village or town! http://worldtamilvolunteersforum.blogspot.com
All who have freetime including teachers or professors or pentionists can join and do some volunteer work! ex teaching poor children/adults from slum!
please start NOW!JOIN! TAMIL UNITY & PROGRESS!
....comment in my blog too!....
மகா இவ்வாறு கூறியுள்ளார்…
nice post
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
சார்

கருத்து கணிப்புக்கு கருத்துக் கூற சொல்ல சொல்லியுள்ளீர்கள். ஒருவனும் கருத்து சொல்லவே இல்லை. ஏதோ 2 பேர் என்னமோ சொல்லி உள்ளார்கள். உங்கள் நிலைமை எந்த நிலையில் உள்ளது?வாசகர்களே உங்களுக்கு கிடையாதா? உங்களை மதிக்க எத்தனை பேர் உள்ளார்கள்?

வாசகர்களின் எண்ணிக்கையை வைத்துதான் பொதுவாய் மனிதர்கள் உங்களை எடை போடுவார்கள். அதுவே ஈசி. ஹோட்டலுக்குள் நுழையும் போது கூட கூட்டம் இருந்தால் மட்டும் தானே நுழைவார்கள். அதுதானே ஈசி?

கூகிள் ரீடரில் உங்கள் பிளாகை 320 பேர் subscribe செய்துள்ளார்கள். அவர்களில் பலர் தன் தகுதி என்ன என்றே தெரியாமல் அடையாளத் தேடலுக்காக பிளாகில் எழுதுகின்ற லூசுகளாய் இருக்க வேண்டும்.

நான் கண்டிப்பாக உங்கள் வாசகர்களின் எண்ணிக்கையை வைத்து உங்களை எடை போடவில்லை.

எழுத்தாளர் ஞாநிக்கு மட்டும் கருத்து சொல்ல எப்படி ஒரு கூட்டம் உள்ளது?

murphy law சொல்லியுள்ளது இது:

நீங்கள் எவ்வளவுதான் விலாவரியாக விளக்கினாலும் கேட்பதற்குதான் ஒருவரும் இருக்க மாட்டார்கள்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...