முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சாதியை ஏன் திராவிட கழகங்கள் ஒழிக்கவில்லை? (2)


சாதி ஏன் ஒழிக்கப்படவில்லை என வினவும் ஜி. முருகனின் பதிவுக்கு நான் கீழ்கண்டவாறு எதிர்வினை ஆற்றினேன்:

Image result for martin luther king

சமூகத்தை கட்சி மற்றும் அதன் கொள்கை திருத்தி வழிநடத்தும் என்பது ஒரு நடைமுறை சாத்தியமற்ற மார்க்ஸிய பார்வை. அது வெறும் லட்சியம். சமூகத்தின் பல சிக்கலான, பகுத்தறிவுக்கு அப்பாலான விசைகளுக்கு முகம் கொடுப்பதே அரசியல் செயல்பாடு. ஆகையால் சாதியை அப்படி யாரும் பதாகை உயர்த்தி நடவடிக்கை எடுத்து ஒழிக்க இயலாது. வரலாற்றின் பாய்ச்சலில் அதுவாக சாதி அழிய வேண்டும். யாரையும் பழித்து அர்த்தமில்லை.

 மக்கள் தான் அரசியல். அரசியல் தான் மக்கள். அவ்வள்வு பெரிய மகானான, ஆளுமையான காந்தியையே சுதந்திரத்துக்குப் பிறகு தேசம் கைவிட்டது. அவருக்கான வரலாற்று அவகாசம் முடிந்த பின் அவரது லட்சியவாதத்துக்கு, மகத்தான நம்பிக்கைகளுக்கு தேவையில்லாமல் போனது. அவர் படுகொலை செய்யப்பட்டார் – அரசு எந்திரங்கள் அதை ஆவலாய் எதிர்பார்த்தது போல் வேடிக்கை பார்த்தனர். காந்தி சுலபத்தில் தூக்கி கடாசப்பட்டார். தேசத்தை இந்தளவுக்கு வழிநடத்தி செதுக்கியவர் அவர் எனில் எப்படி அவர் ஒரேயடியாய் தனக்கான அரசியல் இடத்தை இழந்திருக்க முடியும்? ஏன் அவரது அஹிம்சாவாதத்தை பிரிவினைக்கு பின்பான இந்தியாவால் ஏற்க முடியவில்லை? இதெல்லாம் ஒன்றைக் காட்டுகின்றன – தனிமனிதன் அவன் மாபெரும் தலைவனே ஆனாலும் வெறும் பொம்மை தான்; அவனை ஆட்டும் கைகள் திரைக்கு பின்னே இருக்கின்றன.
 இதுவரை வரலாற்றில் எந்த அமைப்பும் தலைவரும் சமூகத் தீங்குகளை ஒழித்ததில்லை. அதுவாகத் தான் காணாமல் போக வேண்டும், அதற்கான சமூக பொருளாதார சூழல் அமையும் போது. உதா. அமெரிக்காவில் நவீனமாக்கலுக்கும், கார்ப்பரேட் பொருளாதாரம் நோக்கி அவர்கள் நடை போட்டதற்கும் மார்ட்டின் லூதர் "ஏற்படுத்திய" கறுப்பினத்தோர் எழுச்சிக்கும் ஒரு தொடர்புள்ளது. சந்தைக்கான பயனாளர்களை விரிவுபடுத்த சமூகத்தில் சமத்துவம் பேண வேண்டி உள்ளது. அப்போது கருப்பர்களும் பெண்களும் விடுதலை பெற்றார்கள். அதே போராட்டம் இருநூறு வருடங்களுக்கு முன் சாத்தியப்பட்டிருக்குமா? ம்ஹும். சாதி இனவெறியை விட நுணுக்கமானது. ஆகையால் சாதி ஒழிவது இன்னும் இன்னும் கடினம்!
சரி, ஏன் தமிழகத்தில் இன்னும் சாதி இருக்கிறது?
ஏனெனில் இன்னும் முழுக்க சாதியற்ற சமூக வாழ்வுக்கு தமிழகம் தயாராகவில்லை. அத்தகைய நிர்பந்தத்தை நம் பொருளாதார கலாச்சார வாழ்வு ஏற்படுத்தவில்லை. தமிழ் வரலாறு இன்னும் சாதி ஒழிப்புக்கான முனைப்பை பெறவில்லை.
 நடைமுறையில் சாதி இன்னும் தமிழர்களுக்கு ஏற்புடையதே; நிறைய வசதிகளும் ஆறுதலும் வலுவான அடையாளத்தையும் சாதி நம் மக்களுக்கு அளிக்கிறது; ஒரு குழந்தை பிறந்த மறுநொடி சமூகத்தில் பண்பாட்டில் அதன் இடத்தை சாதி உறுதி செய்கிறது – குழந்தைகள் வளர்ந்த பின் அவர்களாய் அடையாளத்தை தேடி லோல்பட தேவையில்லை. தலித்துகளை பொறுத்தமட்டில் இந்த அடையாளம் ஒடுக்குமுறைக்கும் அநீதிக்கும் பாகுபாடுகளுக்கு வழிகோலுகிறது. ஆகையால் அவர்கள் சாதி ஒழிப்புக்கு பாடுபடுவதில் ஒரு அவசியமும் நியாயமும் உள்ளது. ஆனால் மத்திய, மேல் சாதிகளுக்கு இந்த நடைமுறை மட்டும் அரசியல் தேவை இல்லை.
ஆனால் சாதி ஒரு தொந்தரவாக, ஆறாவது விரலாக மாறும் நாள் நிச்சயம் எதிர்காலத்தில் வரும். அன்று நாம் சாதியை முறித்து ஜன்னலுக்கு வெளியே வீசுவோம். அதுவரை ஆயிரம் பெரியார்கள் வந்தாலும் …



கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
மக்களின் மனதிறலில் மாற்றம் வரவேண்டும் இதையே காந்தி வலியுறுத்தினார் அதாவது மக்களின் மனசாட்சியை நோக்கி பேசினார் சாதிய கொடுமைகளை செய்வதற்கு வெட்கப்படவேண்டும் என்றார். அகிம்சையை கைவிட்டதா இந்த தேசம் ஆம். சமீபத்திய ஒரு நேர்காணலின் போது தமிழருவி மணியன் காந்தியின் போராட்டத்தின் போது வரிசையாக போராட்டக்காரர்கள் போலீஸிடம் அடிவாங்குகிறார்கள் என்று சொல்கிறார் அதற்கு நெறியாளர் கேட்கறார் எனில் இப்பொது மக்களும் அடிவாங்க வேண்டுமா என்று கேட்கறார்
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
ஒரு முறை என் நண்பர் சொன்னார் அருந்ததியர்கள் விசிக வை ஏற்பது இல்லை என்று. சந்தையூர் பிரச்சனையில் விசிக வின் நிலைப்பாடு அவர்களுக்கு எதிரானதாகவே இருந்தது எனவே தலித் பிரச்சனை அவர்களுக்குள்ளேயே கூட இருக்கிறது

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

அரசியல் தேய்வழக்குகள்

  நம்மூரில் இளைஞர்கள் மீதிருக்கக் கூடிய பிரேமை என்னை ஆச்சரியப்படுக்கக் கூடியது. இளைஞர்கள் ஆட்சிக்கு வர வேண்டும், அதிகாரத்துக்கு வர வேண்டும் எனக் கோரும்போது அவர்கள் இயல்பிலேயே களங்கமற்றவர்கள், குழந்தை மனம் படைத்தவர்கள், பேராசையோ கெட்ட குணங்களோ அற்றவர்கள் எனும் நம்பிக்கையைத்தான் வெளிப்படுத்துகிறோம். சொல்லப்போனால் நம் குடும்பத்தில் உள்ள பதின்வயதினரையும் இருபதில் இருப்பவர்களையும் கூட நாம் 'வளர்ந்த குழந்தைகளாகவே' பார்க்கிறோம். இது ஒரு கற்பனாவாத சிந்தனை. ஐரோப்பாவில் இருந்து நம்மூருக்கு வந்த ஒரு நம்பிக்கை. வளர வளர மக்கள் தன்னலமும் வஞ்சகமும் மிக்கவர்களாக ஆகிறார்கள் என நினைப்பதால் நாம் 40-60க்குள் இருக்கும் அரசியல்வாதிகளைச் சந்தேகத்துடன் நோக்குகிறோம். ஆனால் சற்றே உற்று கவனித்தால் இருபதுகளில் அரசியலுக்குள் போனவர்கள் பெரும் ஊழல்களைச் செய்திருக்கிறார்கள் அல்லது ஊழலுக்குத் துணை போயிருக்கிறார்கள் எனத் தெரியும். அறிவியல் நாம் குழந்தையாக இருக்கும்போதே மோசமான குணங்கள் வெளிப்படுகின்றன என்கிறது. எத்தனையோ கொடூரமான குற்றங்கள் இழைப்போர் இளைஞர்களே. குற்றம் இழைக்கும் பதின்வயதினருக்கான சிறைகளே உள்ளன (அ...