முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஜோக்கர்களை ஆதரிக்கத் தேவையில்லை

May be an image of one or more people and text that says 'ANI ANI'

பொதுமக்கள் நினைப்பதையும் நம்புவதையும் எழுத்தாளர்களும் அறிவுஜீவிகளும் நினைக்கவோ நம்பவோ ஏற்கவோ அவசியமில்லை. கடந்த சில வாரங்களாகவே இத்தகைய ஒரு தரப்பு வாதத்தை நான் பார்க்கிறேன் - எழுத்தாளர்களும் அறிவுஜீவிகளும் மக்களின் உணர்வுகளில் இருந்து விலகி நிற்கிறார்கள், அது ஒரு தவறு என்று. நிச்சயமாக இல்லை. அப்படி அவர்கள் நிற்பதே சரி என நினைக்கிறேன். மக்களின் போக்குகளைப் புரிந்துகொள்வது வேறு அதை விமர்சிக்காமல் ஏற்பது வேறு. பின்னது வெகுஜன வணிகப் படைப்பாளிகள், ஊடகவியலாளர்களின் குணம், இலக்கு. அவர்கள் வெகுஜனத்தைப் பயன்படுத்தி சம்பாதிப்பவரக்ள். எழுத்தாளர்களும் அறிவுஜீவிகளும் வெகுமக்கள் போக்கிற்கு எதிராகவோ விலகியோ நின்று சிந்திப்பவர்கள். தேர்தலை கணிப்பதோ தேர்தலை வழிநடத்துவதோ அவர்கள் பணியல்ல. தோற்கும் கட்சியைக் கூட அவர்கள் ஆதரிக்கலாம். அரைநூற்றாண்டுக்கு மேலாக இடதுசாரிகள் ஆட்சியில் இல்லாதபோது கூட இடதுசாரி ஆதரவாளர்களாக இருந்த எழுத்தாளர்கள் இல்லையா? கடுமையான அராஜகவாதிகளாகவும் படைப்பாளிகள் இங்கு இருந்திருக்கிறார்கள். அதுவே சரி.

பொதுமக்களிடம் அனுபவத்தின் திரட்சியான ஞானம் இருக்கும். ஆனால் பகுத்தறிவோ கருத்துக்களை அலசும் போதமோ நிதானமோ உண்மையின் பால் நிற்கும் துணிச்சலோ இராது. எழுத்தாளர்கள் இதனாலே மக்களுடன் மக்களாக இருக்கலாகாது. உதிரியாகவும் குடும்பமோ நாடோ மொழியோ தேசமோ இல்லாதவராகவும் இருக்கையில் ஒரு எழுத்தாளர் மேலே வர இயல்கிறது. நான் ஒரு உருவகரீதியாக இதைச் சொல்கிறேன். பந்தம் இருக்கலாம், ஆனால் அது உதறித்தள்ளத் தக்கதாக இருக்க வேண்டும் என்கிறேன்.
விஜய் வென்றுவிட்டால் அது சரியாகிவிடாது. அவர் எனக்கு என்றுமே ஒரு கோமாளிதான். இப்போது ஒரு பாசிசக் கோமாளியாகும் வாய்ப்பே அதிகம். தமிழ்நாடு ஒரு ஹிட்லரிடம் செல்கிறது. அதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அவரை எதிர்ப்பதையோ விமர்சிப்பதையோ குறித்து எனக்கு குற்றவுணர்வு இல்லை. மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு என்பது அரசியல்வாதியின் கருத்து. நான் அரசியல்வாதி அல்லன். பொய் சொல்ல வேண்டிய நிர்பந்தம் எனக்கில்லை. மக்கள் தீர்ப்பு இம்முறை ஒரு தன்னழிவுத் தீர்ப்பு என்றே சொல்வேன். ஏனென்றால் எந்த கொள்கையும் தெளிவும் கட்சியமைப்பும் இல்லாத ஒருவரிடம் ஆட்சியை ஒப்படைத்திருக்கிறார்கள். அவர் இனிமேல்தான் இந்த மாநிலத்தை வைத்து என்ன செய்ய வேண்டும் என யோசிக்கப் போகிறார்.
யோசித்துப் பாருங்கள் - லாட்டரி நடத்தி முறைகேடாகப் பணம் சம்பாதித்த மார்ட்டின் தான் இனி பல முடிவுகளை விஜய்யை வைத்து எடுக்கப் போகிறார். தமிழ்நாட்டின் தொழில்வளர்ச்சி சரியப் போகிறது. ஆனால் தமிழ்நாடு எதிர்காலத்தில் விஜய் போன்ற ஜோக்கர்களிடம் இருந்தும் மீண்டு வரும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...