ஐயா வணக்கம்
உயிர்மை மாத இதழில் தங்களின் கட்டுரைகள் மிகச் சிறப்பானதாகும் அதே நேரம் மாறுபட்ட வகையிலும் மாறுபட்ட சிந்தனையும் ஏற்படுத்துவதாக உள்ளது அதற்கு தங்களுக்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
அதேப் போன்று இன்றைய அரசியல் விளையாட்டுகளில் உள்ள உண்மை நகல் விவரங்களை தெளிவாக விளக்கியதில் ஒரு சில இடங்களில் புரிந்து கொள்ள இயலாத நிலை இருந்தாலும் கடைசியில் தெளிவான ஒரு நிலையை உருவாக்கி உள்ளது
குறிப்பாக நான் ஒரு கட்சி அனுதாபி அல்லன் என்று கூறிவிட்ட நிலையில்
நீ எத்தரப்பை எடுத்துக்கொண்டு இவ்வளவையும் சொல்கிறாய் என்று கேட்டால் ஒருவர் தன்னை ஒரு கட்சியின் அனுதாபி அல்ல என்ற நிலையை எடுத்துக் கூறுவதுடன் அவசியமான நேரங்களில் அவசியமானதை உறுதியாக எழுதிவிட வேண்டும் என்ற தங்களின் நிலைப்பாட்டை பாராட்டுகிறேன் மகிழ்ச்சி
வாழ்த்துக்கள் ஐயா
நன்றி !
அன்புடன்
கோபாலசமுத்திரம்
இ.கோபாலகிருஷ்ணன்
திருநெல்வேலி
கருத்துகள்