ஒரு நண்பர் இக்கேள்வியைக் கேட்டார்:
நாளைய இணையவழிப் பயிலரங்கில் இளம் திரைக்கதையாளர்கள் கலந்து கொள்ளலாமா?
அவுல்டைனிங் எனப்படும் கதையின் வடிவைச் சுருக்கமாக எழுதி வைத்துக் கொள்வதும், அதைத் தொடர்ந்து செறிவுபடுத்துவதும் நாவல், நெடுங்கதைகளுக்கு மட்டுமல்ல, திரைக்கதைக்கும் முக்கியமான திறனே. ஒரே வித்தியாசம் திரைக்கதையில் அகவுலகைச் சித்தரிக்க பெரும்பாலும் பிம்பங்களையே நம்பியிருக்க வேண்டும். அல்லாவிடில் வசனங்கள். ஆகையால் திரையில் கதை வெளிமுகமாகச் சொல்லப்பட வேண்டும்; திரைக்கதை ஆசிரியர்கள் ஒரு கதையை காட்சித் துண்டுகளாக, நிகழ்வுத் தொடர்களாகச் சிந்திக்கிறார்கள், கற்பனை பண்ணுகிறார்கள். ஆனால் இவற்றைத் தொகுத்து அர்த்தபூர்வமான கதையாக்க கதை வடிவைத் தெரிந்திருப்பது அவசியம். ஆகையால், நான் நாளை காலையில் நடத்துகிற பயிலரங்களில் இளம் திரைக்கதையாளர்களும் இயக்குநர்களும் கலந்துகொள்வது அவர்களுக்கு வெகுவாக உதவும். சினிமாவில் இன்று இல்லாத ஒன்றை அவர்கள் கொண்டு வரலாம்: அது கதை.
கருத்துகள்