ஆங்கிலத்தில் சரளமாகப் பேசுவது பெரும் தன்னம்பிக்கையை நமக்குத் தருகிறது. உலக அளவில் பல வாய்ப்புகளைப் பெறுவதில் இருந்து வேலைக்கான நேர்முகங்களில் வெல்வதற்கும் செயல் திட்டங்களை முன்னெடுக்கும் அவசியம். ஆங்கிலத்தில் பேசாதவர்களுக்கு அறிவு குறைவு எனும் எண்ணமும் நம் ஊரில் நிலவுவதால் அத்திறனை வளர்ப்பது அவசியமாகிறது.
பள்ளிப் படிப்போ கல்லூரிப் படிப்போ முடித்துவிட்டு ஆங்கிலத் திறன் இல்லாததால் தத்தளிப்பவர்களுக்காக ஒரு பேச்சு ஆங்கில வகுப்பை ஆன்லைனில் நடத்தப் போகிறேன். வளர்ந்தவர்களுக்கும் குழந்தைகளுக்கும் தனித்தனி வகுப்புகள். வாரத்தில் மூன்று வகுப்புகள். இரண்டு மாதங்களில் மொத்தமாக 25 வகுப்புகள். மாணவர்கள் இரண்டே மாதங்களில் சரளமாகப் பேசுவதை உத்தரவாதம் செய்வேன். ஆர்வம் உள்ளோர் பின்னூட்டம் செய்யவும். அல்லது 9790929153 எனும் எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
உங்கள் தயக்கங்களை உதறுங்கள். ஆங்கிலம் வழி உலகை வெல்லுங்கள்.
கலந்து கொள்வதற்கான உங்கள் தகுதி:
ஆங்கிலத்தில் எழுத்துக்களை வாசிக்கத் தெரிந்தால் போதும்.
வகுப்பை நடத்துவதற்கான என் தகுதிகள்:
ஆங்கிலத்தில் முனைவர் பட்டம்
ஆங்கிலத்தில் இளங்கலைக் கல்வியியல் (BeD) பட்டம்
TEFL பட்டயப்படிப்பு
ஆங்கிலத்தில் மூன்று நூல்களையும் பத்துக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும் அத்தியாயங்களையும் எழுதியுள்ளேன்.
12 ஆண்டுகளுக்கு மேல் ஆங்கில ஆசிரியராக பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்திருக்கிறேன்.
கருத்துகள்