பத்தாண்டுகளுக்கு மேலாக மொழியையும் இலக்கியத்தையும் கற்றுக் கொடுப்பவராக என்னுடைய புரிதல் மொழி என்பது பெரும்பாலும் அறிவு அல்ல, அது ஏற்கனவே மனிதருக்குள் இருக்கிற திறன் என்பதே. ஆங்கிலம் எல்லா மொழிகளையும் போல ஒரு மொழி. அது ஆங்கிலம் தெரியாதோருக்குள்ளும் இருக்கிறது (நோம் சாம்ஸ்கி இதையொட்டி சொல்லியிருப்பதைத் தேடிப் படியுங்கள்). நான் இந்த புதைத்திருக்கும் மொழித்திறனைப் பயிற்சி மூலம் வெளிக் கொணர்கிறேன். இதுவே என் கல்விப்பாணி, உத்தி.
நாம் ஒரு வாக்கிய அமைப்பை, உரையாடல் பாணியைக் கற்கும்போது அதை நம் மனதுக்குள் உள்ள அமைப்புடன், பாணியுடன் பொருத்திப் பார்க்கிறோம், நம் குரலில், நம் உடல்மொழியில் அதைப் பொருத்துகிறோம், அது மெல்லமெல்ல நம்முடையதாகிறது. நாம் ஒன்றை மனனம் செய்து ஒப்பிப்பதில்லை. நாம் அதை நமதாக்குகிறோம். நான் இந்தக் கல்வி முறையை நோக்கியே மாணவர்களைத் திருப்புகிறேன். இது கற்றலை உற்சாகமானதாக ஆக்குகிறது.
என்னுடைய ஆன்லைன் வகுப்புகள் நீங்கள் ஆங்கிலம் கற்பதை இவ்வாறு லகுவாக்கும். இணைய விருப்பம் உள்ளோர் 9790929153 எனும் எண்ணில் தொடர்பு கொள்ளவும்

கருத்துகள்