"காட்பாதர்" பட புகழ் பிரான்சிஸ் பொர்டு கப்போலா குழந்தைப் பருவத்தில் போலியோவால் தாக்கப்பட்டார். அந்த அனுபவத்தை சொல்கிறார்: "ஒன்பது வயதில் போலியோ காரணமாய் என்னை ஒரு அறையில் பூட்டி வைத்தார்கள். அது குழந்தைகளுக்கு பரவும் நோய் என்று நம்பி பிற குழந்தைகளிடம் இருந்து என்னை விலக்கி வைத்தார்கள். நண்பர்களுக்காகவும், உடனிருப்புக்காகவும் ஏங்கியபடி படுக்கையில் கட்டுண்டு கிடந்தது நினைவுள்ளது" கலாச்சார முன்முடிவுகள் காரணமாய் குறிப்பிட்ட சாதிகளை ஒடுக்கும் சமூகம் அறிவியல் விழிப்புணர்வின்மையால் ஊனர்கள் விலக்கி வைத்து தனிமைப்படுத்துகிறது. இங்கு நான் எடுத்தாண்டுள்ள பகுதியில் கப்போலா தனது உற்றமும், சுற்றமும் போலியோ "குழந்தைகளுக்கு பரவும் நோய்" என்ற மூட நம்பிக்கை கொண்டிருந்ததை குறிப்பிடுகிறார். இன்றும் நம் சமூகத்தில் ஊனம் பற்றின குறைபட்ட புரிதலே உள்ளது. பல் பொடி, பஸ்ரூட், பால் விலை போன்ற அன்றாட வாழ்க்கைத் தகவல்களில் மட்டுமே மக்களுக்கு ஆர்வம். மிகவும் விசித்திரமாக, படித்தவர்களில் பலரிடம் இந்த மனப்பான்மை உள்ளது. என் அண்டை வீட்டு டவுன் சிண்டுரோம் குழந்தையை எங்கள...