முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

சோர்வை எப்படி விளக்க?

மகிழ்ச்சியான மனநிலைக்கு உறசாகமான பல காரணங்கள் உள்ளன. மகிழ்ச்சிக்கான காரணங்களை சொல்லும்போது அம்மன நிலை மேலும் தெளிவாகிறது. ஆனால் சோர்வில் துவளும் போது அது அத்தனை எளிதல்ல. தற்போது நான் சோர்வுக்கான ஒரு பட்டியல் இட்டால் அது அபத்தச் சுருளாகவே நீளும். அதனால் என் சோர்வை நிறுவும் அறிகுறிகளை மட்டும் பட்டியலிடுகிறேன். சோர்வடையும் போது அதிகம் பேசுவேன். மகிழும் போது மௌனிப்பேன். வாசிப்பு, உணவு மற்றும் திட்டமிடலில் ஈடுபாடு குறைகிறது. தோளில் யாரோ அமர்ந்திருப்பதான உணர்வு. கடுக்கிறது. எழுத சோர்வு மேலிடுகிறது. அதனால் இங்கேயே நிறுத்தி விடுகிறேன்.

கிரிக்கெட்டின் மஞ்சள் அழகியல்

தற்போது நடந்து வரும் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட அணிகள் பங்கேற்கும் தொடர்களை நாம் அனைவருக்கும் கவனித்திருக்க வாய்ப்பில்லை. பரவாயில்லை, நாம் அலசப் போகும் பிரச்சனைக்கு தற்போது நடந்து முடிந்த இலங்கைத் தொடர்களே பதம். இலங்கைக்கு இந்த சுற்றுப்பயண முடிவில் திரும்ப கொண்டு செல்ல ஒன்றுமே இல்லை என்பது வருத்தம் ஏற்படுத்துகிறது. மேட்டிமை இரக்கமா? இல்லை. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் ஆட்டத்தரம் மற்றும் பலவீனங்களை பொறுத்தமட்டில் மிகச்சிறிய வேறுபாடே இருந்தது என்பதுதான் காரணம். கவனியுங்கள் ஒரே பலவீனங்கள் கொண்ட இரு அணிகள் மோதி விலகிய போது இரண்டும் எந்த பாதிப்பும் இன்றி அதே போல் உள்ளன. மேலும் விளங்க இத்தொடரை ஆஸி சுற்றுப்பயணங்களுடன் ஒப்பிடுங்கள். அத்தொடர்களின் முடிவில் இந்தியா பெற்றது சில அபாரமான வீச்சாளர்கள் மற்றும் மட்டையாளர்கள்: ஹர்பஜன், மிஷ்ரா, மற்றும் லக்‌ஷ்மண். கூடவே வரலாற்றை திருப்பி எழுதும் தன்னம்பிக்கை. இச்சுற்றுப் பயணம் சில இளைஞர்களை புகழ்வெளிச்சத்திற்கு நகர்த்தி உள்ளது மட்டுமே விதிவிலக்கு: லக்மல் மற்றும் கோலி. பலவீனங்களின் மோதல் சர்வதேச கிரிக்...

பா: குழந்தைமையின் வெடிப்புகளும் வளர்ந்தவர்களின் பாசாங்கும்

( கூடு இணைய இதழில் வெளியாகி உள்ள கட்டுரை ) ஒரு நுட்பமான காட்சிபூர்வ கலைஞனால் எளிய திரைக்கதையை கூட கிளர்ச்சியூட்டும்/ஆழமான அனுபவமாக உருவாக்க முடியும். குவிண்டின் டொரண்டினோவின் Kill Bill ஒரு நல்ல உதாரணம். தமிழில் பாலா கதையை விட மைய பாத்திரத்தின் ஆன்மீக பயணத்தை சாகசமாக காட்டியே வெற்றி பெற்று வந்துள்ளார். ஆனால் சீனி கம் மற்றும் பா ஆகிய இந்தி திரைப்படங்களை இயக்கியுள்ள பால்கி எனும் நம்மூர் பால்கிருஷ்ணன் நாடகீயமான கருத்து-உணர்வு மோதல்களை நம்பி படமெடுப்பவர். இவரது படங்களில் பி.சியின் படக்கருவி நுட்பமும் எதார்த்தமும் கூடிய காட்சிகளை உருவாக்கினாலும் அவை படத்தை முன்னெடுத்து செல்வதில்லை. பறவையின் கால்களைப் போன்று இளைப்பாற மட்டுமே பயன்படுகின்றன. பால்கியின் முதற்படம் ”சீனி கம்” பலத்த வரவேற்பை பெற்றது. ஒரு 34 வயதுப் பெண் எப்படி 64 வயது முதியவரை மணக்கிறாள் என்பதே கதை. இந்த எளிய கதையின் வெற்றிக்கு அது தன் வகைமையை தெளிவாக அடையாளம் கண்டிருந்தது (காமிடி) காரணம். ஏறத்தாழ தன் வகைமையின் விதிகளுக்கு உட்பட்டே இயங்கியது காமிடி நாடக அமைப்புக்கு ஒரு பிரச்சனை சிக்கலாக வேண்டும். அவிழ்க்க முடியாது என தோன்றும் வண்ணம...

ஊடகங்களால் விற்பனை செய்யப்படும் நம் பண்பாடு

வியாபார வெற்றியும் தரமும் இன்று ஒரு குழப்பமான பண்பாட்டு சூழலில் வாழ்கிறோம். தொழில்நுட்ப சிறப்பு கொண்ட எளிய மசாலா படங்களை உலகத்தரம் என்று கொண்டாடும் ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது. ”சிவாஜியில்” இருந்து ”அவதார்” வரை நம் முதலாளித்துவ ஊடகங்களால் திட்டமிட்டு இது உருவாக்கப்பட்டு வருகிறது. ஊடக வளர்ச்சிக்கு முன் தீவிர மற்றும் வணிக சினிமாக்களுக்கு இருந்த இடைவெளி இன்று மங்கி விட்டது. குறிப்பாக மத்திய மற்றும் உயர்மத்திய வர்க்கத்துக்கு. தமிழில் துல்லியமான பண்பாட்டு சித்தரிப்புகளுடன் வரும் மசாலா படங்கள் வெற்றி பெற்றால் டி.வி மீடியா உடனே அதை விழுங்கி விடுகிறது. பிறகு “தரமான சினிமா” அல்லது “வித்தியாசமான படம்” என்று ஏப்பம் விடுகிறது. இது கொட்டாவி போல் பரவி ஆளாளுக்கு “தரம்” “தரம்“ என்று பஜனை கோஷ்டி கிளம்புகிறது. அடுத்து இத்தகைய சினிமாக்களின் நாயகர்கள் அமீர், சசிகுமார் போன்றவர்கள் தீவிர இலக்கிய கூட்டங்களில் தரிசனம் தந்து நூல் வெளியிட்டு தாடி வருடி “எனக்கு புத்தகம்னாலே அலர்ஜிப்பா” என்று வேறு பேசுகிறார்கள். வெகுஜனவாதிகளுக்கு தீவிர படைப்புலகம் தீட்டு என்பதல்ல என் வாதம். இருவருக்குமான எல்லைக் கோட்டை எச்சில் தொட்ட...

கதை சொல்ல வாழ்கிறேன் (மார்க்வெஸ்): அத்தியாயம் 9

நான் அவள் சுட்டு விரலின் திசையை தொடர்ந்து போய் அந்த நிலையத்தைக் கண்டேன்: உரிந்து விழும் மரம் , சாய்-தகரக் கூரை , நீண்ட மொட்டை மாடி மற்றும் முன்னால் இருநூறு மக்களுக்கு மேல் நிற்கமுடியாத சிறு வறண்ட சதுக்கமும் கொண்ட ஒரு கட்டிடம். இங்குதான் , அம்மா அன்று சொன்னாள் , 1928- இல் ராணுவம் கணக்கில் அடங்கா எண்ணிக்கையில் வாழைத்தோட்ட தொழிலாளர்களை கொன்று குவித்தது.

இந்திய அணித்தேர்வின் பின்னுள்ள காரணிகள்

வங்கதேசத்தில் நடைபெறப் போகும் முத்தரப்பு ஒரு நாள் போட்டிகளுக்கான இந்திய அணி தேர்வில் இம்முறையும் தமாஷ் உள்ளது. இந்த பதிவு அக்குளறுபடிகள் பற்றியது. முதலில் ரோஹித் சர்மாவின் சேர்க்கை. அவர் பொறுப்பில்லாமல் ஆடியதனாலே கழற்றி விடப்பட்டார். பிறகு ஆடிய உள்ளூர் ஆட்டங்களிலும் ரோஹித் பொறுப்பு காட்டவில்லை. மும்பை அணிக்காக குறைந்த ஸ்கோர்களுக்கு பிறகு ஒரு முன்னூறு அடித்து விட்டு டக் அவுட் ஆனார். ஆனாலும் இந்திய அணியில் இடம் கிடைத்து விட்டது. இங்கு நாம் ”பொறுப்பு” என்கிற வார்த்தையை கவனிக்க வேண்டும். ஒவ்வொரு இளைய வீரரும் அணியிலிருந்து விலக்கப்பட்டவுடன் அவர் மீது ஒரு பழிச்சொல் முத்திரை குத்தப்படும். அது பெரும்பாலும் கூடவே தங்கி விடும். உதாரணமாக சடகோபன் ரமேஷுக்கு கால்கள் நகராது என்றார்கள். சிறப்பான சராசரி இருந்தும் அவர் இந்த ஒரு குற்றச்சாட்டு காரணமாகவே எளிதில் நீக்கப்பட்டார். பொதுவாழ்வில் கூட நாம் அடிக்கடி எதிரிகளை வீழ்த்த பயன்படுத்தும் ஒரு அசட்டுத் தந்திரமே இது. ரோஹித்தின் பிரச்சனை பொறுப்பின்மை அல்ல. அவருக்கு தனக்கே உரித்தான ஆட்டமுறைமை இன்னும் உருவாகவில்லை. ஒரு நாள், டெஸ்டு ஆட்டம் என்று எளிய தகவமைப்பு ம...

பாதி வானம்

மனைவியுடன் மனஸ்தாபம் இடையே ஜன்னலில் பூனை அதற்கு வெளியே நிறைந்த வானம் அதற்கு வெளியே தாவ உத்தேசித்து வாலைப் பற்றி தடுக்கிறேன் பேசிக் கொண்டே போகிறேன் பாதி வானில் முகம் புதைத்த மேகங்கள் லேசான இருள் பேசிக் கொண்டே ...