முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

கௌரவக் கொலைகளை தடுக்க என்ன செய்யலாம்?

மதுரையை சேர்ந்த பவானி என்ற ஒரு மத்திய சாதி பெண் ஒரு தலித்தை மண்ந்த காரணத்தினால் அவளது சகோதரனால் பிள்ளைகள் முன்னால் வெட்டி கொல்லப்பட்டிருக்கிறாள். கடந்த இரு வருடங்களில் மட்டும் 24 பெண்கள் இது போல் தமிழகத்தில் கௌரவக்கொலை செய்யப்பட்டுள்ளனர். இன்று நேற்றல்ல பல ஆண்டுகளாக நடந்து வருகிற ஒரு மௌன அநீதி இது.

இலங்கையின் தொடர் வெற்றியும் இந்தியாவின் நிலையும்

இங்கிலாந்தில் இலங்கையின் தொடர்வெற்றி எதிர்பாராதது . அதற்கு ஒரு காரணம் சங்கக்காரார் , மஹிளா போன்ற சீனியர்கள் தன்னலமின்றி அணிக்காக தொடர்ந்து உழைப்பது இன்னொன்று இலங்கையின் ஒழுக்கம் மற்றும் உழைப்பு மற்றும் அணி உணர்வு இதை வைத்து இந்தியாவும் வென்று விடுமோ என சிலர் நினைக்கிறார்கள் . ஆனால் இலங்கை ஒரு புது அணியாக சென்றது . இந்தியா அப்படி அல்ல - வீரர்கள் ஐ . பி . எல்லால களைத்து போயிருக்கிறார்கள் - இஷாந்த் , ஷாமி போன்றோர் நல்ல ஆட்டநிலையில் இல்லை . வெளிநாடுகளில் அஷ்வினின் ரெக்கார்ட் ரொம்ப மோசம் . பந்தும் சுழலாது . புவனேஷ்வர் மட்டுமே நன்றாக வீசக் கூடும் .

இந்து முன்னணியினர் கலவரமும் அழிவு அரசியலும்

பூந்தமல்லி ஹைவேயில் நேற்று இந்து முன்னணியினர் நிகழ்த்திய வன்முறை உ.பி, குஜராத், அயோத்தியா வகை இந்துத்துவாவை இங்கும் முன்னெடுப்பதற்கான ஆரம்ப முயற்சி. சாலையில் போன பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் தாக்கப்பட்டனர். போலீசும் அடிக்கு தப்பவில்லை. இன்னொரு பக்கம் தம் பிள்ளைகளுக்கு ஏதாவது ஆகி விடுமோ என பெற்றோர்கள் பள்ளிக்கூடங்களுக்கு படையெடுத்தனர். போக்குவரத்து நீண்ட நேரம் ஸ்தம்பித்தது, கீழ்ப்பாக்கத்தில் ஒரு பேருந்து மீது கல் வீசி தாக்கியதால் பயணிகள் பயந்து ஓடினர். ஒரு தேவாலயம் மீது தாக்குதல் நடந்தது. மொத்தம் 9 பேருந்துகள் மற்றும் 10 கார்கள் தாக்கப்பட்டன. ஆனால் இந்து முன்னணியினரால் எதிர்பார்த்த அளவு தாக்கத்தை இவ்விசயத்தை வைத்து ஏற்படுத்த முடியவில்லை.

பெண் எழுத்தாளர்கள் போட்ட நோ பால்

பெண் எழுத்தாளர்கள்-ஜெ.மோ சர்ச்சையில் நியாயம் பெண்கள் பக்கமே என அறிவோம். ஆனாலும் இன்றைய ஊடக சூழலில் நியாயம் மட்டும் உங்கள் பக்கம் இருந்தால் போதாது – அதை சரியாய் சாதகமாய் பயன்படுத்த தெரிய வேண்டும். முன்பு போல் இருபது பேர் படிக்கிற சூழலில் அது எப்படியும் இருக்கலாம். ஆனால் முகநூலில் பல்லாயிரம் பேரும், நாளிதழ்கள் வழி லட்சக்கணக்கான பேரும் இந்த சர்ச்சையை கவனிக்கிறார்கள். அவர்களுக்கு இலக்கியமோ மார்க்ஸியமோ ஆணாதிக்கவாதமோ தெரியாது. ஒருவேளை இந்த சர்ச்சையின் போது தான் இதையெல்லாம் அறிகிறார்களாக இருக்கலாம். அதனால் இப்பிரச்சனையில் “நியாயம் யார் பக்கம்” எனத் தான் பொதுமக்கள் கேட்பார்கள்.

ஜெயமோகனும் பெண் கவிஞர்களும்

ஜெயமோகன் பெண் கவிஞர்களை பற்றி சொன்னது அவரது தனிப்பட்ட மதிப்பீடு. அது போல் அவர் பாரதியாரை பற்றிக் கூட மதிப்பீடு கொண்டிருந்தாரே எனவும், அதற்கு அவருக்கு முழு உரிமை உண்டென்றும் அவரது ஆதரவாளர்கள் இப்போது நியாயப்படுத்தி வருகிறார்கள். ஆனால் இது உண்மையா? இல்லை ஜெயமோகன் கூறுவது மதிப்பீடோ அவதானிப்போ அல்ல - பெரும்பாலும் முன்னெண்ணங்கள். பெண் கவிஞர்கள் தங்கள் உடலை காட்டித் தான் பிரசுர வாய்ப்புகள் பெற்றார்கள் என்று அவர் வாக்கியத்தை எளிமைப்படுத்தினால் வரும். இது உண்மையா என பார்ப்போம்: குட்டிரேவதி , சுகிர்தராணி , சல்மா போன்றோர் புதுவகையான பாய்ச்சலை தமிழ் நவீன கவிதையில் நிகழ்த்தினார்கள். அது வாசகர்களுக்கு புதுசாக வியப்பாக இருந்தது.

நவீன ஐ.டி பெண்ணும் சுழல் பந்து வீச்சாளர்களும்

கொஞ்ச காலத்துக்கு முன்னர் கொண்டு வரப்பட்ட களத்தடுப்பு விதிமுறை மாற்றங்கள் சுழல் பந்து வீச்சாளர்களுக்கு ஒரு சாபமாய் மாறி வருகின்றன. முன்பு ஒருநாள் ஆட்டங்களில் ஒரு சுழல் பந்து வீச்சாளர் 15வது ஓவரில் ஆரம்பித்து முப்பதாவது ஓவர் வரை தொடர்ந்து 8 ஓவர்கள் வரை வீசலாம். விருப்பப்படி களத்தை அமைத்துக் கொள்ளலாம். அதிகம் பந்து சுழலாத ஆடுதளங்களில் கூட நீங்கள் பந்தை காற்றில் மிதக்க விட்டு பிளைட் செய்து எல்லைக்கோட்டில் கேட்ச் பெற்று தான் விக்கெட் எடுக்க முடியும். தொண்ணூறுகளில் ஆட்டம் பார்த்தவர்களுக்கு இப்படி வார்னெயும், முரளியும், சக்ளைனும் எத்தனையோ விக்கெட்டுகளை உயரக் கேட்சுகள் மூலம் பெற்றதை நினைத்துப் பார்க்கலாம்.

வசனகர்த்தா

காட்சி 1 மீனவன்: “ஏய் மீனே என் தூண்டில்ல மாட்டிக்கிட்டியா. நான் சாத்தான்லே. என் கிட்டயிருந்து நீ தப்பிக்க முடியாது” மீன்: “ஐயோ என்ன விடுலே. நான் மீன். என்ன விடுலே” மீனவன் தூண்டிலை இழுத்து படகில் போடுகிறான். மீன்: “நான் சாகிறேன். ஐயோ நான் துடிக்கிறேன். துள்ளுறேன்.” மீனவன்: “ஹா ஹா நான் சாத்தான்லே. நீ சாவுறே. நான் அதை பார்க்குறேன்.”