நேற்று நான் செய்த வாழைப்பழ பிரெட்டின் படத்தை பகிர்ந்த போது சில நண்பர்கள் செய்முறையை கேட்டிருந்தார்கள் . அவர்களுக்காக இதோ . இரண்டு வகையில் பிரெட் செய்கிறார்கள் - ஒன்று பேக்கிங் பவுடர் போட்டு , சற்று தளர்வான கலவையை மோல்டில் ஊற்றி பேக் செய்வது ; மற்றொன்று , ஈஸ்ட் சேர்த்து ஒரு மணிநேரம் உப்ப வைத்து பேக் செய்வது . முதலாவது பழம் போன்றவை சேர்க்கிற பிரெட் மற்றும் கேக் செய்ய ஏற்ற முறை . இந்த வாழைப்பழ பிரெட்டை நான் அப்படியே செய்தேன் . 1) முதலில் உலர்வான கலவையையும் ஈரக்கலவையையும் தனித்தனியாக தயார் செய்ய வேண்டும் . இறுதியில் இரண்டையும் சேர்த்து dough வை ( பிசைந்த மாவு ) செய்யலாம் . இந்த வேலையை ஆரம்பிக்கும் முன்பு உங்களுடைய OTG oven ஐ முன் - வெப்பமடைய செய்ய வேண்டும் - அதாவது பேக்கிங் செய்யுமுன்னே ஒரு மணிநேரம் போல oven ஐ பொருளில்லாமல் 170 டிகிரி செல்ஷியஸுக்கு சூடுபடுத்தி வைப்பது . நீங்கள் மாவு தயாராக்கி முடிக்கும் போது oven உம் தயாராக இருக்கும் . 2) உலர் கலவை தயாரிக்க நான் ஒரு கப் பாதாம் மாவு , ஒரு கப்...