முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அறிவிப்பு

கோவை கண்காட்சியில் என்னுடைய கீழ்வரும் நூல்கள் உயிர்மை அரங்கில் கிடைக்கும். நண்பர்களும் வாசகர்களும் வாசக நண்பர்களும் நூல்களை வாங்கி விட்டு அப்புகைப்படத்தை ஒரு சிறுகுறிப்புடன் பேஸ்புக்கில் பதிவேற்றினால், சிறந்த குறிப்பு எழுதியவருக்கு என்னுடைய சேகரிப்பில் இருந்து அழகிய நூலொன்றை அனுப்பித் தருகிறேன். 1.கால்கள் 2.புரூஸ்லீ :சண்டையிடாத சண்டை வீரன்  3.கதை முடிவுக்கு வந்துவிட்டீர்கள்  4.ரசிகன்  5.அன்புள்ள தெரிதா  6.கிளை முறியும் ஓசை  7.இன்றிரவு நிலவின் கீழ் 8.ரஜினிகாந்த் 9.நான் ஏன் புதிய கல்விக்கொள்கையை எதிர்க்கிறேன்  10.பெண்கள் இப்படித்தான் நினைக்கிறார்களா ? 11. metoo 12.பிக்பாஸ்  ஏன் துயரத்தை கூவி விற்கிறீர்கள் ? 14.வாங்க இங்கிலீஷ் பேசலாம்  பாகம் 1,2,3,4 15.இன்னும் மிச்சமுள்ளது உனது நாள்  16.மனுஷ்ய புத்திரன் (எளிய மனங்களின் பாணன் ) அரங்கு எண் 228

மறைதல்

திபெத்திய பௌத்த எமன் நான் சொல்லப் போவது ஒரு பிரபலமான கருத்தாக இருக்கப் போவதில்லை எனத் தெரியும் . ஆனால் இவ்விசயத்தில் இது தான் என் பார்வை . ஒருவர் காலமாவது அத்தனை கொடூரமான விசயம் இல்லை . எங்கிருந்தோ , சில ‘ சார்புநிலைகளால் ’ ஆன சூழல்களால் பூமியில் தோன்றியவர் அதே போல போய் விட்டார் . காலமின்மையில் இருந்து வந்தவர் காலமின்மைக்குள்ளே போய் விட்டார் என்றே புரிந்து கொள்கிறேன் . வாழும் போதும் நாம் அந்த காலமின்மையை உணர தத்தளித்தபடியே இருக்கிறோம் , நீருக்குள் மீன் காற்றுக்காக தன்  செவுள் களைத் திறந்து திறந்து மூடுவதைப் போல . காலமானவர் நாம் அனுதினமும் , ஒவ்வொரு நொடியும் திறந்து திறந்து பார்க்கும் காலம் எனும் ஜன்னலை முழுக்கத் திறந்து அதன் வழி குதித்து விடுகிறார் . அல்லது அவர் ( ஹைடெக்கர் சொல்வதைப் போல ) நம் பார்வையில் படும்படி எங்குமே போகவில்லை . அவர் எங்கு போனார் என்றே கண்டறிய முடியாது போவதே மரணம் . எங்கு போனார் என்றறியாத போது ஏன் அழ வேண்டும் ? அவரே தான் போவதைக் காண முடியாது , வாழும் எவருமே வாழ்கையில் மர...

சொல்வனம், இலக்கிய சிகரத்தில் வெளியான பேட்டி - பகுதி 2

  3. உங்களுக்கு வாசிப்பில் எப்போது ஆர்வம் வந்தது ? 4. குடும்பச் சூழலில் உங்களிடம் கிடைத்த புத்தகங்கள் என்னென்ன ? பள்ளிப் பருவத்தில் எதெல்லாம் வாசிக்கக் கிடைத்தது ? பதில் : கதைகளை ஓரளவுக்கு வாசிக்கக் கற்றுக் கொண்டது எட்டு , ஒன்பது வயதில் என நினைக்கிறேன் . அப்போது நாளிதழ்களின் இணைப்பாக வரும் குழந்தைகளுக்கான பத்திரிகைகளையும் , ராணி காமிக்ஸ் போன்ற புத்தகங்களையுமே படித்தேன் . நான் ஊனமுற்றவன் என்பதால் வெளியே சென்று விளையாட அம்மா அனுமதிக்கவில்லை . படிக்க நிறைய நேரம் இருக்கும் . ஒரே காமிக்ஸை அலுக்க அலுக்க திரும்பத் திரும்ப படிக்கும் அளவுக்கு . பிறகு எனக்கு நானே கதை சொல்ல ஆரம்பித்தேன் . அதாவது தனிமையில் இருந்து எனக்கே நான் சொல்லிக் கொள்வேன் . அதை பகற்கனவு என வகைப்படுத்தி விட முடியாது - துவக்கம் , பல பிரச்சனைகள் , தீர்வுகள் , முடிவைக் கொண்ட சாகசக் கதைகள் . பள்ளியில் என் நண்பர்களிடம் அக்கதைகளை எழுதிப் படிக்கக் கொடுப்பேன் . அப்படித்தான் என் கற்பனை வளர்ந்தது . பிறகு எனக்கு பன்னிரெண்டு வயதிருக்கும் போது என் அப்ப...