முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நித்தியின் ரிசர்வ் வங்கியும் இந்திய கறுப்புப்பண களவாணி சட்டமும்


//There is a way out if a person wishes to legitimize his/her black money, a donation of the same to any charitable institution after cutting a deal, based on a quid pro quo, with the owner of that institution can ensure the legitimization of black money.//

(மேலும் படிக்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்: http://www.legalserviceindia.com/legal/article-1070-should-india-start-taxing-the-religious-institutions.html)

இந்திய அரசியலமைப்பு சட்டம் (Sub-sections (23BBA), (23C) [v] மற்றும் Direct Taxes Code of 2009, Item No. 37 in the Seventh Schedule.) உருவாக்கப்பட்ட போது வலதுசாரிகளும் முதலாளிகளும் இணைந்து கறுப்புப் பணத்தை பாதுகாக்க உருவாக்கிய ஒரு உபாயம் தான் (அது பின்னர் இன்னும் வசதியாக விவாக்கப்பட்டது) மதநிறுவனங்களுக்கு அளிக்கப்படும் நன்கொடைக்கு வரிவிலக்கு உண்டு, அதற்கு கணக்குக் காட்ட வேண்டியதில்லை, இந்த பணம் மத நிறுவனங்களுக்குள் சென்ற பிற்பாடு அதற்கு வரியில்லை என்னும் சட்டம். 

ஒரு பெருமுதலாளி / குற்றவாளி ஜக்கி, நித்தி, ஸ்ரீ ஸ்ரீ, அமிர்தானந்த மயி போன்றோரின் கையில் கொடுக்கும் கறுப்புப் பணம் இப்படி மிக பத்திரமாக இருக்கும். இந்த நிறுவனங்கள் அடிப்படையில்  மறைமுக கறுப்புப் பண வங்கிகள். மதரீதியான மக்கள் ஆதரவு, அரசியல்வாதிகளின் பினாமிகளாக செயல்படுவது போன்ற காரணிகள் இந்த கல்ட் அமைப்புகளை ரிசர்வ் வங்கியை விட, நிதி அமைச்சகத்தை விட அதிகாரமிக்க அமைப்புகள் ஆக்குகின்றன. எல்லோருடைய சிண்டுகளும் இவர்கள் வசமே இருப்பதால் ரொம்ப ரொம்ப பாதுகாப்பாக கறுப்புப் பண அறுவடையில் ஈடுபடுகிறார்கள். 
ஓஷோவில் இருந்து ஜக்கி, அமிர்தானந்த மயி, நித்தி என யாருமே பரம்பரை செல்வந்தர்கள் அல்ல, பிறப்பில் மத்திய, கீழ்மத்திய, அடித்தட்டை சேர்ந்தவர்கள். அநேகமாய் ஒன்று அல்லது இரு பத்தாண்டுகளில் அவர்களிடம் பல லட்சம் கோடி சொத்துக்கள், எந்த உழைப்போ முதலீடோ இன்றி, சேர்ந்தது இப்படித்தான். நித்தியானந்தா இன்று ரிசர்வ் வங்கி ஆரம்பித்துள்ளது புதுசல்ல, ஒவ்வொரு கார்ப்பரேட் சாமியாரும் இங்கு ரிசர்வ் வங்கிகளை எந்த சட்டத்துக்கும் உட்படாமல் நடத்தி வருகிறார்கள். நித்தி அதை மறைமுகமாய் அம்பலப்படுத்துகிறார். அதற்கு நாம் அவருக்கு நன்றிக் கடன்பட்டிருக்கிறோம்.

கறுப்புப் பணத்தை "சிவாஜி" படத்தில் காட்டுவதைப் போன்று யாரும் கிணற்றிலோ பீரோவிலோ, "கந்தசாமியில்" காட்டப்படுவதைப் போல சொகுசுப் பேருந்திலோ ஒளித்து வைப்பதில்லை. கணிசமான கறுப்புப்பணம் சட்டத்தின் ஓட்டையை பயன்படுத்தி, மக்களை ஏமாற்றி நித்திகளிடம் பாதிக்கப்படுகிறது; சாமியார்களின் பணம் பக்தர்களின் பணம் என்பதைப் போன்ற பச்சைப் பொய் வேறில்லை. 

இந்த சட்டத்தை நித்திகளும் ஜக்கிகளும் மட்டுமல்ல கிறித்துவ, இஸ்லாமிய மத அமைப்புகளும் தாம் கறுப்புப் பண பரிவர்த்தனைக்காக பயன்படுத்துகின்றன. 

கொஞ்சமாவது சமூகப் பொறுப்புள்ள ஒரு தலைவர் இந்நாட்டில் உண்டெனில் அவர் இச்சட்டத்தை ரத்து செய்யும் முயற்சிகளை எடுக்க வேண்டும், அதைப் பொதுமக்கள் ஆதரிக்க வேண்டும். மற்றபடி கறுப்புப்பணத்தை ஒழிக்கிறேன் என கிளம்புகிறவர்களை நம்பாதீர்கள், அவர்கள் கறுப்பாடுகள்!
இச்சட்டம் ரத்தானால் கறுப்புப் பணம் ஒழியும், ஒரு சில வருடங்களில் கார்ப்பரேட் சாமியார்கள் காணாமல் போவார்கள்!

கருத்துகள்

Aravind இவ்வாறு கூறியுள்ளார்…
கருப்புப் பணத்தை ஒழிக்க நீங்கள் சொல்வதுபோல இந்த ஓட்டைகளை அடைத்தால் அண்ணிய முதலீடுகளும் வெளியேரிவிடும் என பயமுறுத்துகிறார்கள் ஐய்யா. அது குறித்து என்ன எண்ணுகிறீர்கள்?
Murugesan இவ்வாறு கூறியுள்ளார்…
பாதிக்கப்படுகிறது; - பதுக்கப்படுகிறது;
விவாக்கப்பட்டது - விரிவாக்கப்பட்டது

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...