எனக்கு பிக்பாஸ் வீட்டில் பிடித்த இரு பங்கேற்பாளர்களில் பவாவும் ஒருவர். பவாவிடம் ஒரு தனித்துவம் உண்டு. மற்ற பங்கேற்பாளர்கள் ஏதோ ஜெராக்ஸ் கடைசியில் உற்பத்தி ஆனவர்களைப் போல இருக்கிறார்கள். ஒரே மாதிரி பேச்சு, ஒரே அணுகுமுறை, உத்தி. ஆனால் பவா ஒரு உரையாடலுக்குள் வரும் போதே அதில் ஒரு சாராம்சம் வந்துவிடும்.
நான் அவருக்காகத் தான் இந்த பருவத்தை பார்க்க ஆரம்பித்தேன். என்னதான் அவரது சில கருத்துக்களுடன் எனக்கு உடன்பாடில்லை, அவரை அதற்காக விமர்சித்திருக்கிறேன் என்றாலும், அவரது முற்போக்கான பார்வை, கண்ணியம், இலக்கிய அறிமுகங்கள் முக்கியமானவை எனக் கருதுகிறேன். அவரது வெளியேற்றத்துக்குப் பின் பிக்பாஸ் வீடு பூசணம் பிடித்த ரொட்டியைப் போலாகிவிடும்.
பவாவின் உடற்பிரச்சினைகளை கருத்திற் கொள்ளும் போது வெளியே இருப்பதே அவருக்கு சௌகர்யம் என நினைக்கிறேன். மேலும் அவர் இந்த ஆட்டத்தை ரொம்ப பெர்ஸனலாக எடுத்துக்கொள்கிறாரோ, அதனால் மனதளவில் காயப்படுகிறாரோ எனத் தோன்றுகிறது.
மிஸ் யூ பவா!
கருத்துகள்