முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கோடுகள் (ஆன் கார்ஸன் கவிதைகள் 1)

கோடுகள்

  • ஆன் கார்ஸன்
  • தமிழில் ஆர் அபிலாஷ்

அம்மாவிடம் பேசும்போது என் பொருட்களை நேர்த்தியாக்குவேன். தொலைபேசிக்கு அருகே என் புத்தகங்களின் முதுகுகள். 

பீங்கான் குவளையில்

காகிதப் பற்றிகள். மேஜையில் பொட்டுப்பொட்டாய் கிடக்கும் அழிப்பான் துகள்கள். சாவைக் குறித்து

ஆதுரமாய் பேசுகிறாள் அவள். நான் வேறு திசைக்குச் சரிக்கத் தொடங்குகிறேன் காகிதப் பற்றிகளை.

ஜன்னலுக்கு வெளியே

நேர்கோடுகளாய் விழுகிறது பனி. என் அம்மாவிடம்,

என் வாழ்வின் 

ஒரே பேரன்பிடம், நான் விவரிக்கிறேன் முற்பகல் உணவுக்கு என்ன சாப்பிட்டேன் என்று. கோடுகள் இப்போது 

வேகமாய் 

விழுகின்றன.

 நான் சொல்ல விரும்புகிறேன், விதி அவற்றின் முனைகளில் 

எடைகளைக் கட்டிவிட்டன (எங்களைத் துரிதப்படுத்த) - இறைவனின் கருணையின் அறிகுறி. அவள் என்னை அதிக நேரம் பிடித்து வைக்கப் போவதில்லை, அவள் சொல்கிறாள்,

அவள் என் கட்டணத்தை எகிற விட மாட்டாள். அற்புதங்கள் நழுவிக் கடக்கின்றன எங்களை.

சாஸ்வதமாக நிலைகொண்டு விட்டன காகிதப் பற்றிகள். இறைவனின் கருணை! இன்னும் எவ்வளவு நேரம்

இது இவ்வாறே எரிந்து கொண்டிருக்கும் என்பதாகத் தோன்றும், மகள் சொன்னாள் கருணையுடன் இருக்க முயன்றபடி.

(“அழிவாக்கம்” (Decreation) தொகுப்பில் இருந்து)


LINES


While talking to my mother I neaten things. Spines of books by the phone.

Paperclips 

in a china dish. Fragments of eraser that dot the desk. She speaks

longingly

of death. I begin tilting all the paperclips in the other direction.

Out

the window snow is falling straight down in lines. To my mother,

love

of my life, I describe what I had for brunch. The lines are falling

faster

now. Fate has put little weights on the ends (to speed us up) I

want to tell her—sign of God's pity. She won't keep me

she says, she

won't run up my bill. Miracles slip past us. The paperclips

are immortally aligned. God's pity! How long will

it feel like burning, said the child trying to be kind.


From Decreation

Anne Carson



வாசகக் குறிப்பு: இந்தக் கவிதையின் சிறப்பு இதில் காலம் குறித்து வரும் அவதானிப்புதான். காலம் ஒரே சமயம் மிக மிக மெதுவாகவும் மிக மிக வேகமாகவும் இயங்குகிறது. மிகத் துரிதமாக வாழ்கிறோம், மிகவும் மெதுவாக இறக்கிறோம். இந்த வாழ்தலும் சாதலும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்களாக உள்ளன. இது நம் அகத்துக்குள் காலம் இயங்கும் விதமும்தான். நாம் நமக்குள் வாழ்ந்தபடியும் இறந்தபடியும் இருக்கிறோம். இந்த இருவிதமான காலங்களைக் குறிக்கும்விதமாக மகளும் தாயும் இக்கவிதையில் வருகிறார்கள். இறக்கும் காலம் எல்லாவற்றையும் ஒழுங்கீனமாக்குகிறது. அதனாலே வாழும் காலத்தில் உள்ள மகள் அவற்றை ஒழுங்குபடுத்த முயல்கிறாள். அம்மா தன் மரணத்தை நேசிக்கத் தொடங்கி இருக்கிறாள். அவள் அதை அஞ்சவில்லை என்பதே மகளை அச்சமூட்டுகிறது. அவள் உடனே காகிதப் பற்றிகளைச் சரிவாக அடுக்கிறாள், ஏதோ அம்மாவின் காலத்திற்கு எதிர்திசையில்தான் செல்ல விரும்புவதைப் போல. வெளியே விழும் பனிக்கோடுகள் நேராக உள்ளன. அவள் இப்போது நிதானமாகிறாள். அவள் தன் உணவப் பற்றிப் பேசுகிறாள். அம்மாவும் மகளும் ஒரே காலத்தின் கோட்டுக்குள் வருகிறாள். பனி வேகமாக விழ அம்மா பதற்றமாகிறாள். அவள் நான் உன் காலத்தை எடுத்துக் கொள்ள மாட்டேன், கவலைப்படாதே என்கிறாள். அம்மாவின் பயம் மரணத்தைக் குறித்தல்ல, அவள் வாழ்தலின் வேகத்தினால் அச்சத்தில் ஆழ்கிறாள். அவள் இறந்த பின்னர் மகளுக்கு காலம் ஏன் இவ்வளவு மெதுவாகப் போகிறது என அம்மாவின் எரியும் உடலைப் பார்க்கத் தோன்றுகிறது. இங்கு மெதுவாக நகரும் காலத்தின் தழல் மகளையும் தீண்டுகிறது. மெதுவாக வாழ்வதே இறப்பது என அவளுக்குப் புரியத் தொடங்குகிறது. அதுவே அவளால் தாங்க முடியாததாக இருக்கிறது. 


ஒட்டுமொத்த கவிதையும் நமக்குள் சலனித்துக் கொண்டே இருக்கும் பிரக்ஞையின் இன்னொரு முகமாக நாம் காணும் காலத்தைப் பற்றிப் பேசுகிறது. நாம் வாழ்வதும் சாவதும் நமக்குள் தானே எனக் கேட்கிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Counterarts இதழில் வெளிவந்துள்ள என் கட்டுரை

"There has always been a permanent child within Kafka. Society functions as an extension of the office and the family, constantly monitoring and evaluating people and subjecting them to the examination of its rules. In other words, even when Kafka leaves home to go to work, and even afterwards, he remains within the family. Within the family, he is always a son or a brother. The family preserves itself through continuous self-surveillance and mutual surveillance. The same thing happens outside it." https://medium.com/counterarts/kafkas-diaries-735b74cd0c44

இன்று அவளது ஐம்பதாவது திருமண நாளாக இருக்க வேண்டும் (ஆன் கார்ஸன் கவிதைகள் 3)

  ரொமானிய சுவரை நோக்கி உரையாற்றுகிறது குளிர் - ஆன் கார்ஸன் - தமிழில் ஆர். அபிலாஷ் ஒளி மட்டற்று ( சிறைப்படுத்தப்பட்டது ) மேலும் , நிழல்கள் விழக் காத்திருக்கின்றன தலைமறைப்புகளைப் போல . மூளை தட்டுகிறது இருமுறைகள் உப்புக்காக .   WOULD BE HER 50TH WEDDING ANNIVERSARY TODAY Cold orates upon a Roman wall. Light is extreme (caught) and shadows wait like hoods to drop. Brain taps twice for salt. Was it Ovid who said, There is so much wind here stones go blank. (Excerpt From Decreation, Anne Carson) வாசகக் குறிப்பு : இதுவும் ஒரு கீறல் ஓவியம் போன்ற கவிதைதான் . விளக்கக் குறிப்புகளோ விவரணைகளோ இல்லை . கதையாடல் கவிதையென்றாலும் யார் , என்ன , எப்படி , ஏன் ஆகிய தகவல்களை நாமே அனுமானிக்க வேண்டும் . இப்போது ஒவ்வொரு சொல்லும் ஒரு உருவகமாகிறது ( ஏனெனில் தலைப்பில் உள்ள திருமண பந்தம் குறித்த விபரம் இதைக் குறியீடாக்காமல் தடுக்கிறது ). ஐம்பதாவது திருமண நாளெனில் அவருக்கு வயது 70 இருக்குமா ? அவர் ரொமானிய வரலாற்றுச் சின்னங்களைக் காண வந்...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.