முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எங்கள் சொத்து (ஆன் கார்ஸன் கவிதைகள் 2)

 “OUR FORTUNE

In a house at dusk a mother's final lesson

ruins the west and seals up all that trade.

Look in the windows at night you will see people standing.

That's us, we had an excuse to be inside.

Day came, we cut the fruit (we cut

the tree). Now we're out.

Here is a debt

paid.”


Excerpt From

Decreation

Anne Carson


எங்கள் சொத்து

  • ஆன் கார்ஸன்
  • தமிழில் ஆர். அபிலாஷ்

அந்தியில் ஒரு வீட்டில் அம்மாவின் கடைசிப் பாடம்

மேற்கை நாசப்படுத்தி முடிவுக்குக் கொண்டு வருகிறது மொத்த வணிகதத்தையும்.

ஜன்னல்கள் வழியாக இரவில் பார்த்தால் உனக்கு அங்கே மக்கள் நிற்பது தெரியும்.

அது நாம் தாம், எங்களுக்கு உள்ளே போக ஒரு சாக்கு கிடைத்தது.

பகல் வந்தது, நாங்கள் பழத்தை நறுக்கினோம் (மரத்தை

வெட்டினோம்). இப்போது வெளியே வந்துவிட்டோம்.

இதோ கடனை

அடைத்துவிட்டோம்.


(“அழிவாக்கம்” (Decreation) தொகுப்பில் இருந்து)


வாசகக் குறிப்பு: புரிந்துகொள்ள சற்று சிரமமான கவிதை இது. ஏனென்றால் கார்ஸன் இதில் வரவேண்டிய இணைப்பு வரிகளை, தகவல்களை, வர்ணனைகளை ரத்துபண்ணி விடுகிறார். கிட்டத்தட்ட எலும்புக் கூட்டை மட்டுமே நம் முன் நிறுத்துகிறார். நாம் ஒவ்வொரு வரியையும் இப்போது ஒரு குறியீடாக வாசிக்க வேண்டியிருக்கிறது. இந்த வடிவமே இக்கவிதையின் தனிச்சிறப்பு. எப்படிப் புரிந்துகொள்ளலாம்? இது என் வாசிப்பு:

அம்மா இங்கே இயற்கையின் குறியீடு. அப்பழுக்கற்ற உண்மையுடன் நாம் இயற்கையில் பிறக்கிறோம். அது மெல்லமெல்ல பூமியில் கறைபடிந்து உருவழிகிறது. அது அம்மா அளிக்கும் பாடம் என்பதே நகைமுரண். இயற்கை நம்மைப் படைத்து அழிக்கவும் செய்கிறது. அந்த அழிவுடன் நம் புதிய வாழ்வும் பிறக்கிறோம். நாம் அழிந்து பிறக்கிறோம். விதை அழிந்து செடி தோன்றுவதைப் போல. இருள் அழிந்து ஒளி பிறப்பதைப் போல. வணிகம் (பரிவர்த்தனை - உறவாடல்) இங்கு நமக்கும் இயற்கைக்குமான உறவைக் குறிக்கிறது. அடுத்து கவிதை மற்றொரு படிமத்துக்குத் தாவுகிறது. இரவில் வெளியே நிற்பவர்களை வீட்டுக்குள் இருந்து குழந்தைகள் பார்க்கிறார்கள். ஒருவேளை அங்கு யாரும் இல்லையோ? ஆனாலும் அவர்கள் தம் கற்பனையில் பயத்தில் இல்லாத ஒன்றைப் பார்க்கிறாள். காலை விடிகையில் அங்கு நிற்கிறது மரம் ஒன்று. அம்மரம் அறிதலின் மரம். அதில் இருந்து பறிக்கிறார்கள் கனியை (பாவத்தின் கனி). ஆனால் பழத்தை மட்டுமல்ல அவர்கள் மரத்தையும், ஒட்டுமொத்தமாக அறிதலின் மூலத்தையுமே, அழிக்கிறார்கள். இப்போது அவர்கள் மானுட வாழ்வின் விளிம்புக்கே வந்துவிடுகிறார்கள் (வீட்டுக்கு வெளியே வருவது). தாம் பெற்ற அறிவின், சொத்தின் கடனை அடைத்து விட்டோம் எனச் சொல்கிறார்கள். அது என்ன சொத்து? காலமே இங்கு சொத்து என நினைக்கிறேன். ஏனெனில் நாம் ஒருபோதும் உருவாக்காதது காலம் மட்டுமே. நாம் காலத்துடன் பிறக்கிறோம், நாம் காலத்தினுள் பிறக்கிறோம், நாம் காலமாகவே நம்மைக் கருதுகிறோம். ஆக, அதனிடம் இருந்து எதையோ பெற்றுக் கொள்ளவும், அதைப் போலச் செய்யவும் (காலாதீதம் ஆவது) முயன்று தோற்றுப் போகிறோம். நாம் அழியும் போதும், மரணமடையும்போது நாம் பெற்ற சொத்தின் கடனை அடைத்து விடுகிறோம். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Counterarts இதழில் வெளிவந்துள்ள என் கட்டுரை

"There has always been a permanent child within Kafka. Society functions as an extension of the office and the family, constantly monitoring and evaluating people and subjecting them to the examination of its rules. In other words, even when Kafka leaves home to go to work, and even afterwards, he remains within the family. Within the family, he is always a son or a brother. The family preserves itself through continuous self-surveillance and mutual surveillance. The same thing happens outside it." https://medium.com/counterarts/kafkas-diaries-735b74cd0c44

இன்று அவளது ஐம்பதாவது திருமண நாளாக இருக்க வேண்டும் (ஆன் கார்ஸன் கவிதைகள் 3)

  ரொமானிய சுவரை நோக்கி உரையாற்றுகிறது குளிர் - ஆன் கார்ஸன் - தமிழில் ஆர். அபிலாஷ் ஒளி மட்டற்று ( சிறைப்படுத்தப்பட்டது ) மேலும் , நிழல்கள் விழக் காத்திருக்கின்றன தலைமறைப்புகளைப் போல . மூளை தட்டுகிறது இருமுறைகள் உப்புக்காக .   WOULD BE HER 50TH WEDDING ANNIVERSARY TODAY Cold orates upon a Roman wall. Light is extreme (caught) and shadows wait like hoods to drop. Brain taps twice for salt. Was it Ovid who said, There is so much wind here stones go blank. (Excerpt From Decreation, Anne Carson) வாசகக் குறிப்பு : இதுவும் ஒரு கீறல் ஓவியம் போன்ற கவிதைதான் . விளக்கக் குறிப்புகளோ விவரணைகளோ இல்லை . கதையாடல் கவிதையென்றாலும் யார் , என்ன , எப்படி , ஏன் ஆகிய தகவல்களை நாமே அனுமானிக்க வேண்டும் . இப்போது ஒவ்வொரு சொல்லும் ஒரு உருவகமாகிறது ( ஏனெனில் தலைப்பில் உள்ள திருமண பந்தம் குறித்த விபரம் இதைக் குறியீடாக்காமல் தடுக்கிறது ). ஐம்பதாவது திருமண நாளெனில் அவருக்கு வயது 70 இருக்குமா ? அவர் ரொமானிய வரலாற்றுச் சின்னங்களைக் காண வந்...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.