முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

எழுத்தாளனும் உழைப்பாளியும்

என் நண்பர் ஒருவர் தொழில்முறை சினிமாக்காரர்களுடன் இணைந்து ஒரு குறும்படம் எடுத்தார். அவர்களின் தொழில்நேர்த்தி, கடப்பாடு பற்றி வியந்தார். தொடர்ந்து பத்து மணிநேரம் லைட் பாய்கள் நின்று வேலை பார்ப்பது, அனைவரும் நேரத்துக்கு வேலைக்கு வருவது போன்றவற்றை கூறி நம் எழுத்தாளர்கள், இலக்கிய ஆட்களுக்கு இந்த மாதிரியான மனநிலை இல்லை. நாம் அடிப்படையில் சோம்பேறிகள் என்றார். இது உண்மை தான். நான் முன்னர் "இன்மைக்காக" ஒரு நண்பரிடம் ஒரு அஞ்சலிக்கட்டுரை எழுதித் தரக் கேட்டேன். அவர் நான்கு வரிகள் எழுதி அனுப்பினார். நான் இன்னும் சில வரிகள் எழுதுங்கள் என்றேன். அவர் கூட ஒரு வரி எழுதி அனுப்பினார். ஆனால் ஒரு பத்தியை எப்படி ஒரு கட்டுரை என்று போடுவது? கடைசியில் இறந்து போனவரின் கவிதை ஒன்றையும் சேர்த்து கொஞ்சம் நீளமாக்கி பிரசுரித்தோம்.

இலக்கிய கூட்டங்களில் ஏன் பிரியாணி போடக் கூடாது?

ஒரு நினைவஞ்சலி கூட்டம் பற்றின் அழைப்பிதழ் பார்த்தேன். சுமார் முப்பது பேர்கள் பேசுவதாய் போட்டிருந்தார்கள். அதை பார்த்த போதே எனக்கு தலை சுற்றியது. நாம் ஏனிப்படி பேசி பேசி மாய்கிறோம்? எல்லாருக்கும் பேச ஆசை தான். ஆனால் அது எல்லோருக்கும் புணர ஆசை தான், சாப்பிட ஆசை தான், அடிக்க ஆசை தான் என்பது போல. ஒரு வெளிப்பாட்டுக்காக பேசுவது வேறு, உரையாற்றுவது வேறு. நம்மூரில் ஒரு சின்ன கூட்டம் கூடினாலே யாருக்காவது உரையாற்றும் ஆசை வந்து விடும். அவர் ஏதாவது கேள்வி இருந்தால் கேளுங்கள் என்பார். யாரும் வாய் திறக்க மாட்டார்கள். ஏனென்றால் பேசியதை புரிந்து கொண்டு எதாவது கேட்பதென்றால் மெனக்கெட்ட காரியம். ஆனால் யாராவது மேடைக்கு வந்து கருத்தை சொல்லலாம் என்றால் ஆளாளுக்கு வந்து ஒரு மணிநேரம் பேசுவார்கள். இது ஒரு மேடை வியாதி. மற்றப்படி பேச மாட்டார்கள். ஆனால் மேடையை பார்த்தால் பொத்துக் கொண்டு பேச்சு வரும்.

கதவை அடைக்காதே

நான் வழக்கமாய் திறக்கும் கதவை அடைக்காதே அவ்விடத்தில் பத்து புதிய கதவுகளை திறப்பேன் என்னை உதாசீனிக்காதே தொடர்ந்து நினைவு படுத்தியபடியே இருப்பேன். என்னை பார்க்க தவிர்த்தால் உன் பார்வை படும் இடமெல்லாம் இருப்பேன் ஒரு மலையுச்சியின் விளிம்பில் இருந்து தள்ளி விடப் பார்த்தால் உன் காலை இறுக பற்றிக் கொள்வேன்

இசையின் டினோசர் கவிதைகள்

இசை இவ்வருட சுந்தர ராமசாமி விருது பெறுகிறார். இத்தருணத்தில் அவரது கவிதைளை சற்று அலசி புரிந்து கொள்ள முயற்சி செய்யலாம்.

ஒரு நாடகம் முடிவுக்கு வருகிறது

ஐந்து தமிழக மீனவர்களை இலங்கை ஹெராயின் கடத்தல் போன்ற குற்றத்துக்கு வழக்கத்துக்கு மாறாக தூக்குத்தண்டனை விதித்தபோதே இது ஒரு நாடகம் எனும் சந்தேகம் தோன்றியது . இந்தியாவை சற்று மட்டம் தட்டவும் , இலங்கையில் வாக்காளர்களிடம் நல்ல பெயர் வாங்கவும் , மோடி அரசுடன் பேரம் பேசவும் இந்த தண்டனையும் இப்போதைய விடுதலையும் ராஜபக்சேவுக்கு உதவியது . ஒரே கையெழுத்தில் ஐவரையும் விடுவிக்க அதிகாரம் கொண்ட ராஜபக்சே ஏன் அதற்கு தன் பிறந்த நாள் வரும் வரை காத்திருக்க வேண்டும் ?

கொச்சை, வாக்கிய அமைப்பு முதல் ஐ லவ் யூ வரை: மொழியாக்கத்தின் பல்வேறு சவால்கள் -

மொழிபெயர்ப்பு ஒரு புறம் வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம் பெயர்ப்பது. தட்டையான வறட்டுத்தனமான தன்மை கொண்டது. இன்னொரு புறம் உணர்வெழுச்சியும் அகத்தூண்டலும் மொழியாக்கத்துக்கு ஒரு தனி ஒளியை, ஆழத்தை, சரளத்தன்மையை அளிக்கும். ஆனால் நல்ல மொழிபெயர்ப்பு இவை இரண்டுக்கும் இடையே இருக்கிறது. நம் கற்பனையை ரொம்ப பறக்க விடாமல் அதேவேளை ரொம்பவும் ஈடுபாடின்றி எந்திரத்தனமாய் பதிலி வார்த்தைகளை அடுக்கி செய்யாமலும் ஒரு இடைப்பட்ட வகை ”மிதவாதமான ” மொழியாக்கமே நல்லது. இது கவிதைக்கு மிக அதிகமாகவும் புனைவுக்கு ஓரளவும் பொருந்தும்.

ரோஹித்தின் 264: ஒரு அற்புத சதம்

இலங்கைக்கு எதிரான ரோஹித் ஷர்மாவின் 264 வெடிமருந்து கிடங்கு வெடித்தது போன்ற ஒரு இன்னிங்ஸ். பந்தை இப்படி இவ்வளவு சரளமாக கூர்மையாக சரியான இடங்களில் தொடர்ந்து யாரும் அடித்து பார்த்ததில்லை. அதுவும் அவர் சதம் அடித்த பின்னரும் தொடர்ந்து கவனமாய் ஆனால் மூர்க்கமாய் ஆடியது கவர்ந்தது. 50 ஓவர்கள் நின்றாடுவது சாதாரண விசயம் அல்ல. மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் வலுவாக இருக்க வேண்டும். அதன் பிறகு ரோஹித் களத்தடுப்பு செய்ய வேறு வருகிறார். பாய்ந்து பந்துகளைத் தடுக்கிறார். தன்னை மிக வலுவாக நிரூபித்திருக்கிறார் ரோஹித்.