முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

காதல் நாடகம் (குறுநாடகம்)

-      பாத்திரங்கள்: சின்னபையன் மண்வெட்டி பாலு வெட்டுக்கிளி தலைவர் வனஜா வேலு காட்சி 1 மேடையில் சின்னபையனும் மண்வெட்டி பாலுவும் ஒரு கல்லூரி மாணவனும் தோன்றுகிறார்கள். சின்னபையனும் மண்வெட்டியும் வெள்ளைவேட்டி சட்டையில் இருக்கிறார்கள். இருவருமாய் மாணவனை அடித்துக் கொண்டிருக்கிறார்கள். சின்னபையன்: ”உன்னைய அன்னிக்கு சொல்லித் தானே அனுப்பினேன். அப்புறம் ஏண்டா அந்த புள்ளகிட்ட திரும்பவும் பேசிக்கிட்டு நிக்கிறே. என்ன உயிர்பயம் போயிடுச்சா?” மாணவன்: ”இல்லண்ணே. அவ தாண்ணே என்னை பாக்கணும்னா… அதான்…மத்தபடி சத்தியமா இல்லண்ணே” மண்வெட்டி: ”போடா போடா ஒழுங்கா படிச்சு வாழற வழியப் பாரு”

தமிழ் திரைப்படப் பாடல்களில் கவித்துவம் (3)

  பெண் இல்லாத ஊரிலே அடி ஆண் பூக்கேட்பதில்லை பெண் இல்லாத ஊரிலே கொடிதான் பூப்பூப்பதில்லை உன் புடவை முந்தானை சாய்ந்ததில் இந்த பூமி பூப்பூத்தது இது கம்பன் பாடாத சிந்தனை உந்தன் காதோடு யார் சொன்னது ? வைரமுத்துவின் “புது வெள்ளை மழை” என ஆரம்பிக்கும் ரோஜாப் பட பாடலில் வரும் பத்தி இது. பூ மெல்ல மெல்ல காதலின், இச்சையின் உருவகமாய் ஆரம்பித்து மொத்த பெண்ணுடலாய் சட்டென உருவெடுக்கும் ஆச்சரியத்தை இவ்வரிகளில் காணலாம்.

சுஜாதாவின் “விருப்பமற்ற திருப்பங்கள்”

இன்று ஒரு வேலையை முடித்து விட்டு கோட்டூர்புரம் வழியாக திரும்பிக் கொண்டிருந்தேன். களைப்பு, கசப்பு, லேசாய் பின்மண்டையில் குடைச்சலாய் ஒரு வலி. கொஞ்ச நேரம் படிப்போம் என அண்ணா நூலகம் போனேன். மூடுவதற்கு ஒரு மணிநேரம் இருந்தது. அதற்குள் படிக்க தோதாய் சுஜாதா நாவல் ஒன்றை எடுத்தேன். தலைப்பு என்னை கவர்ந்தது “விருப்பமற்ற திருப்பங்கள்”. ஒருமாதிரி ஆங்கில சாயல் தொனிக்கிறது. ஆங்கிலத்தில் இன்னும் நளினமாய் இருக்கும். Unwanted Twists. எவ்வளவு அழகாய் உள்ளதல்லவா!

வாட்ஸ் ஆப் குழப்படி

-      காட்சி 1 வாசல் மணி அடிக்கிறது. ஆடம்பரமான மேற்தட்டு வீடு. போனைப் பார்த்துக் கொண்டு சோபாவில் அமர்ந்திருக்கும் 40 வயதுக்கு மேலான வீட்டுக்கார பெண் எழுந்து போகிறார். கதவின் ஓட்டை வழி பார்க்கிறார். மீண்டும் மீண்டும் பார்க்கிறார். பயந்து போய் தன் கணவனை போனில் அழைக்கிறார். போன் என்கேஜ்டாக இருக்கிறது. மீண்டும் மணியடிக்க வெளிக்கதவை திறக்கிறார். அங்கு கேட்டுக்கு வெளியே ஒரு அழகான மத்திய வயதுப் பெண் கையில் பையுடன் நிற்கிறார்.

”கால்களும்” எம்.பில் பட்ட ஆய்வும்

சுயதம்பட்டத்துக்காக அல்ல. சும்மா ஒரு தகவலுக்காய் சொல்கிறேன். என்னுடைய “கால்கள்” நாவலை நாகர்கோயிலில் உள்ள மூன்று கல்லூரிகளில் (ஸ்காட் கிறிஸ்டியன் கல்லூரி, முஸ்லீம் ஆர்ட்ஸ் கல்லூரி மற்றும் லஷ்மிபுரம் கலைக்கல்லூரி) மூவர் எம்.பில் படிப்பு ஆய்வுக்காய் எடுத்துக் கொண்டுள்ளனர். மூவரும் பெண்கள். மூவருக்கும் கிட்டத்தட்ட ஒரே குரல், ஒரே வட்டார வழக்கு தொனி. போனில் மூவரும் என்னிடம் அடுத்தடுத்து பேசிய போது ஒருவேளை நம்மிடம் விளையாடுவதற்காய் யாரோ ஒரே ஆள் பல்வேறு பெயர்களில் பேசுகிறாரோ என எனக்கு சந்தேகம் தோன்றியது. ஆனால் வெவ்வேறு பெண்கள் தாம். 

நண்பர் எச்.பீர் முஹம்மது

நண்பர் எச்.பீர் முஹம்மதை முதலில் நான் 15 வயதில் தக்கலையில் நண்பர் முஸ்தபாவின் புத்தகக் கடையில் வைத்து சந்தித்தேன். அவரைப் பற்றின முதல் நினைவே கையில் ஒரு ஆயிரம் பக்க ஆங்கில கட்டுரை நூலோடு அவர் அமர்ந்து படித்துக் கொண்டிருப்பது தான். வெட்டி அரட்டையில் நேரம் வீணடிக்காமல் வாசிப்பில் தன்னை தொலைத்து விடுபவராக இருந்தார். தக்கலை கலை இலக்கிய பெருமன்றத்தில் பலருக்கும் அவர் மீது மிகுந்த வியப்பு இருந்தது. நிறைய படிப்பதானாலோ என்னவோ அன்று அவர் பேசும் போது புரிந்து கொள்ள சற்று குழப்பமாக இருக்கும் (ஆனால் இன்று அப்படி இல்லை). எங்கள் மன்றத்தில் அப்போது தமிழில் வெளிவருகிற கோட்பாட்டு நூல்களை, நவீன இலக்கியத்தை படிப்பவர்கள் பலர் இருந்தார்கள். ஆனால் கணிசமாய் ஆங்கிலம் வழி மேற்குலக அறிவியக்கங்களை அறிய முயல்பவராக பீர் மட்டுமே இருந்தார்.

கருணையும் சமூகமும்

என்னுடைய தோழி என்னிடம் ஹைதராபாதில் உள்ள ஒரு கசாப்பு தொழிற்சாலை பற்றி சொன்னாள். அங்கு சட்டவிரோதமாய் கறி வெட்டப்படுவதால் அதைக் கண்டித்து மிருக உரிமைப் போராளிகள் போராடுகிறார்கள். அப்படி என்னதான் தவறு நடக்கிறது? மாடுகள் பல லாரிகளிலாய் நெருக்கி அடைக்கப்பட்டு தொழிற்சாலைக்கு கொண்டு வரப்படுகின்றன. வருகிற வழியிலேயே நெரிசல் தாங்காமல் சில செத்து விடும். மிச்ச மாடுகளை இறக்கினவுடன் ஒருவர் கோடாலியால் அடித்து கால்களை உடைத்து விடுவார்கள். ஏன்? அங்கு கொண்டு வரப்படும் மாடுகள் ஆரோக்கியமானவை. ஆனால் ஆரோக்கியமற்ற வயதான மாடுகளைத் தான் கசாப்பு செய்ய வேண்டும் என்பது விதிமுறை. இவ்விதிமுறையை வளைக்கும் பொருட்டு மாடுகள் ஊனமாக்கப்படுகின்றன. ஊனமானதும் ஒரு அரசு மருத்துவ அதிகாரி வந்து அவை கசாப்புக்கு தகுதியானவை தான் என சான்றிதழ் அளிப்பார்.   அடுத்து இம்மாடுகள் தொழிற்சாலைக்குள் தானியங்கி பெல்ட்டில் வைத்து தள்ளிக் கொண்டு செல்ல கொதிக்கும் நீர் அவற்றின் மீது பீய்ச்சியடிக்கப்படுகிறது. கசாப்பு செய்தவுடன் மாடுகளின் தோல் இறுகி விடும். இறுகினால் தோலை பதனப்படுத்தி கைப்பை போன்ற பொருட்கள் செய்ய பயன்படுத்த முடியாது. ...