முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

சுகுமாரன் எனும் கடைசி நவீனத்துவர்

இவ்வருடத்துக்கான இயல் விருது பெறும் சுகுமாரனுக்கு வாழ்த்துக்கள்! தமிழின் எல்லா சிறந்த கவிஞர்களுக்கும் ஒரு தனித்துவமான மொழி உண்டு. ஆனால் இந்த மொழி வெறும் மொழி அல்ல. அது ஒரு அணுகுமுறை, வாழ்க்கைப்பார்வை, நிலைப்பாடு. தமிழின் இறுக்கமான குறியீட்டு, படிமக் கவிதை உலகில் சுகுமாரன் நேரடியான (plain) கவிதைகளுடன் தோன்றினார். எண்பதுகளின் இறுதியில் துவங்கி தொண்ணூறுகளில் மறைபொருளுடன், அரூபமான கேள்விகளுடன் திரிந்த கவிஞர்கள் மத்தியில் அவர் காட்டன் சேலையில் தோளில் சிறு தோல்பையுடன் சரியான சில்லறையை எண்ணியபடி பேருந்து நிலையத்தில் நிற்கும் நிற்கும் ஒரு பெண்ணைப் போல் தோற்றமளித்தார். தனது வெறுமையை, தனிமையை, இச்சையின் தீராத தகிப்பை, உண்மைத் தேடலை, அதற்கான முடிவற்ற தவிப்பை பற்றி தன்னிலையில், வாசகனை எதிர்முனையில் வைத்து பேசும் தோரணையுடன் எளிய சொற்களுடன் பேசினார்.

மனதுக்கு நெருக்கமான ஒரு வாசக கடிதம்

குவைத்தில் இருந்து ஒரு ஆஸாத் எனும் ஒரு வாசகர் அனுப்பிய கையெழுத்துக் கடிதம் இது. இது போன்ற கடிதங்களைக் கண்டு பல வருடங்கள் ஆகின்றன. தொண்ணூறுகளில் இது போல் எத்தனையோ கடிதங்களை கையால் எழுதியிருக்கிறேன். சு.ராவும், மனுஷ்ய புத்திரனும் அப்போது தபால் அட்டையில் எனக்கு எழுதிய அனுப்பிய கடிதங்களை இப்போதும் வைத்திருக்கிறேன். கையெழுத்து ஏனோ அவ்வளவு அணுக்கமாய் உணர வைக்கிறது. ஆஸாத்துக்கு என் நன்றிகள்!

நம் முகத்தில் காறித் துப்பும் மீடியா

நேற்று ஒரு வங்காளப் பத்திரிகையில் இருந்து ஒரு சப்-எடிட்டர் அழைத்து ஜல்லிக்கட்டு பற்றி கட்டுரை கேட்டார். அதை வங்காளத்தில் மொழியாக்கி வெளியிட அவர்களுக்கு உத்தேசம். ஆனால் ஒரு நிபந்தனை. ஜல்லிக்கட்டின் கலாச்சார பக்கம் – இலக்கியத்தில், கலைகளில், பண்பாட்டில் ஜல்லிக்கட்டு எப்படி சித்தரிக்கப்பட்டுள்ளது என – பற்றி மட்டும் எழுத வேண்டுமாம். அவரே எனக்கு எடுத்துக் கொடுத்தார். “உங்க சங்க இலக்கியத்தில் ஜல்லிக்கட்டு பற்றி குறிப்பு உள்ளதாய் கேள்விப்பட்டிருக்கிறேன். அதைப் பற்றி எழுதுங்கள். சமீபத்தில் ஒரு நாவல் சாகித்ய அகாதமி பரிசு வாங்கியதே. அதில் கூட ஜல்லிக்கட்டு பற்றி வரலாற்று குறிப்பு உள்ளதாய் சொன்னார்கள்”

ஜல்லிக்கட்டு போராட்டம் 2.0 – அப்பாவுக்கும் குழந்தைக்கும் இடையிலான உளவியல்

இந்தியாவில் சாமான்யர்கள் களத்தில் இறங்கி போராட தயங்குவதற்கு முதல் காரணம் போலீஸ் தாக்குதல், வழக்கு, அன்றாட வாழ்வில் ஏற்படும் இழப்புகள், பாதுகாப்பின்மை, இவை சேர்ந்து ஏற்படும் ஒட்டுமொத்தமான பயம். மெரீனா போராட்டத்தின் முதல் வாரத்தில் இவை எதுவும் இல்லை. ஆரம்பத்திலேயே இதை மாணவர்கள் உணர்ந்து கொண்டார்கள். அதனால் லட்சக்கணக்கில் குவிந்தார்கள். அவர்கள் என்னதான் மோடியையும் ஒ.பி.எஸ்ஸையும் எதிர்த்து கோஷங்கள் எழுப்பினாலும் போலீஸார் இணக்கம் காட்டும் வரை அது அதிகார வர்க்கத்துக்கு எதிரான போராட்டம் ஆகாது. அதிகார வர்க்கத்தின் இசைவுடன் நிகழ்ந்த போராட்டம் தான். ஏனென்றால் போலிஸார் அரசு எந்திரத்தின் முகம். ஆனால் இரண்டாவது வாரம் தான் இப்போராட்டம் முதன்முறையாக “போராட்டம்” ஆகிறது. அதிகார வர்க்கம் போராட்டத்தை நிறுத்த சொல்கிறது. வெளியே மண்ணில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை அப்பா “போதும் வீட்டுக்குள்ள போ” என கண்டிப்பது போல இது. குழந்தை ஏற்க மறுத்தால் அப்பா பிரம்பெடுப்பார். அப்பாவின் உண்மையான முகம் இப்போது தான் குழந்தைக்கு தெரிய வரும். “நீ விளையாடும் போது என்ன தான் சுதந்திரமாய் இருந்தாலும் அந்த சுதந்திரம் நான் ...

பின்நவீனத்துவ மக்கள் போராட்டங்களின் டெம்பிளேட்

லட்சக்கணக்கானோர் உதைத்து போராடி கொண்டு வந்த பந்தை கடைசியில் கோல் அடித்தவர் ஒ . பி . எஸ் . நீங்கள் கோல் போஸ்ட் வரை கொண்டு வருவீர்கள் என அவருக்கு தெரியும் . அதுக்குத் தானே வியூகம் அமைத்து காத்திருந்தார் . இந்த சாமர்த்தியம் இல்லாமலா அவர் டீக்கடையில் இருந்து அரியணை வரை வந்திருக்கிறார் ! கடந்த தேர்தலில் ஜெயா மூன்றாவது அணி அமைத்து திமுகவின் ஓட்டுகளை கலைத்து நூலிழை வித்தியாசத்தில் ஜெயித்ததை இதனுடன் ஒப்பிடலாம் . ஆனால் மூன்றாவது அணி கூட ஜெயாவின் பி அணி என மக்கள் உடனே கண்டுபிடித்து கலாய்த்தார்கள் . இந்த ஜல்லிக்கட்டு போராட்டத்திலோ சூத்திரதாரி யார் நமக்கு கடைசிவரை புரியவே இல்லை . ஏனென்றால் ஒ . பி . எஸ்ஸின் சிரித்த முகமும் பணிவான உடல்மொழியும் கண்டவர்களுக்கு அவர் தந்திரசாலி என்றெல்லாம் தோன்றாது . ஆனால் மக்களுக்கு தாம் எதிர்ப்பு தெரிவிப்பதாய் ஒரு தோற்றம் ஏற்படுத்தி திருப்தி கொடுத்து அவர்களை தனக்கு ஏற்றபடி பயன்படுத்தியது ஒரு அரசியல் master stroke. அடுத்து வரும் வருடங்களுக்கு என்று அவர் என்னவெல்லாம் சாணக்கி...

ஜல்லிக்கட்டு போராட்டங்கள்: ஒ.பி.எஸ்ஸின் முதல் வெற்றி

என்னதான் மக்கள் ஒ.பி.எஸ்ஸை டம்மி என கலாய்த்தாலும் எனக்கு அவர் மீது மதிப்புண்டு. பிரச்சனைகளை முன்கூறாக கணித்து புன்னகைத்தபடியே காய்நகர்த்தி அமைதியாக ஜெயித்து விடுவார். இந்த ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான போராட்டம் அவரது ராஜதந்திரத்துக்கான சிறந்த உதாரணம்.

தியாகம் எனும் போலித்தனம்

எப்போதும் எதையாவது தியாகம் செய்யும், துறக்கும், கைவிடும் அரசியல் மீது எனக்கு ஆழமான கசப்பு உண்டு. சுஜாதா ஒருமுறை மரணம் பற்றிய தன் சிந்தனைகளை எழுத வாசகர்கள் உணர்ச்சிவசப்பட்டு அவரை போனில் அழைத்து “என் ஆயுசில் பாதியை உங்களுக்கு தருகிறேன். நீங்கள் நீண்ட காலம் வாழ வேண்டும்” என சொன்னார்களாம். அதைப் பற்றி குறிப்பிடும் சுஜாதா இவ்வாறு சொன்னார் “அப்படி ஆயுசை தர முடியாது என்கிற நம்பிக்கையில் தான் இவ்வளவு வாக்குறுதிகள் தருகிறார்கள்?” உண்மை தான். ஒருவேளை ஒரு மனிதன் தன் ஆயுளில் ஒரு பாதியை இன்னொருவருக்கு தர முடியும் என்றால் ஒருத்தரும் அதைப் பற்றி வாயைத் திறக்க மாட்டார்கள்.