முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பத்மராஜன் படங்களின் பாணியில் ஒரு துப்பறியும் நாவல்


“கதை முடிவுக்கு வந்து விட்டீர்கள்” நாவலுக்கு விஜய மகேந்திரன் எழுதியுள்ள சுருக்கமான ஆனால் கூர்மையான மதிப்புரை. அவரது முகநூல் பக்கத்தில் இருந்து இங்கு மீள்பதிவு செய்கிறேன்:


நண்பர் அபிலாஷ் எழுதிய 'கதை முடிவுக்கு வந்துவிட்டீர்கள்' நாவல் நேற்று இரவு படித்து முடித்தேன். வாசிக்க சிக்கல் தராத நடை.பொதுவாக துப்பறியும் நாவல்களில் உள்ள செயற்கையான மர்மமுடிச்சுகள் இல்லை. ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவனை கண்டுபிடிப்பதுதான் நாவலின் ஒன் லைன். வேகமாக நாவலை விறுவிறு நடையில் அபிலாஷ் எழுதவில்லை என்பது பெரிய ஆறுதல். அடூர் கோபாலகிருஷ்ணன் மற்றும் பத்மராஜன் போன்ற இயக்குனர்கள் குற்றவகைப் படங்களை எடுத்தால் எவ்வாறு சீராக திரைக்கதை செல்லுமோ அப்படித்தான் இந்த நாவலும் நிதானத்துடன் நகர்கிறது.

குழந்தைகள் கடத்தல், பாலியல் பலாத்காரம் போன்ற விஷயங்களுக்கு எதிரான பிரச்சாரமாக அபிலாஷ் இந்த நாவலை எழுதவில்லை.மாறாக குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறைகளின் அடிப்படைகளை, குற்றங்களுக்கு பின் இருப்பவர்கள் எப்படிப்பட்டவர்கள் என காட்டிக்கொடுக்கிறார். நமது குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து ஆழ்ந்த கேள்விகளை எழுப்புகிறார். சட்டங்களின் ஓட்டைகளில் குற்றவாளிகள் தப்பிக்க முயல்வதையும் படம்பிடிக்கிறார். அபிலாஷின் மற்ற இரண்டு நாவல்களை விட இதில் உரையாடல்களில் அருமையான முன்னேற்றம் கண்டு இருக்கிறார்.இதை வெறும் துப்பறியும் வகை நாவல்களில் சேர்க்காமல் உரிய கவனத்துடன் படிக்க நண்பர்களுக்கு இந்த நாவலை சிபாரிசு செய்கிறேன். விரிவான கட்டுரை விரைவில் எழுதுவேன்.

கதை முடிவுக்கு வந்துவிட்டீர்கள்- ஆர்.அபிலாஷ்
உயிர்மை பதிப்பகம்
விலை 100ரூபாய்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...