உலக நாயகன் ஏன் இப்படி விக்கிபீடியா கூடப் பார்க்காமல் "பிக்பாஸில்" தவறான தகவல்களை சொல்கிறார்? ஒருநாள் புத்தகத்தை அறிமுகப்படுத்துகிறேன் என ஆல்பர்ட் காமுவின் "பிளேக்" நாவலை Pandemic என தவறாகக் குறிப்பிட்டார். நான் இணையத்தில் முழுக்க தேடியும் அப்படி ஒரு தலைப்பில் காமு புத்தகமே எழுதவில்லை எனத் தெரிந்து கொண்டேன். இன்று மீண்டும் Pandemic எனக் குறிப்பிட்டு அப்படித் தான் பிரஞ்சில் வருகிறது என்றவர் தனக்கு பிரஞ்சு மொழி தெரியாது என்று வேறு சொன்னார். எனில் "பிளேக்" நாவல் பிரஞ்சில் அப்படித்தான் அழைக்கப்படுகிறது என எப்படிச் சொல்கிறார்?
பிளேக் தான் சரியான பெயராக இருக்க வேண்டும். ஏனென்றால் எலிகள் மூலம் பரவும் அந்த தொற்று நோயினால் தான் அந்நாவலில் ஒரு நகரம் பெரும் அழிவை சந்திக்கிறது. ஆங்கில மொழியாக்கத்திலும் பிளேக் எனும் தலைப்பே உலகம் முழுக்க பயன்படுத்தபடுகிறது. உலக நாயகன் சொல்கிறார் என அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் இணையத்தில் அப்புத்தகத்தை வாங்க முயன்று கிடைக்கவில்லை என ஒரேயடியாய் வாசிக்கும் பழக்கத்தையே கைவிட்டால் என்ன ஆகும்! ஆகையால் அவ்வப்போது விக்கிபீடியா படிக்குமாறு நான் உலகநாயகனுக்கு பரிந்துரைக்கிறேன்.
Comments