முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வேறு கதை ஏன் இல்லை?

 புர்காவைத் தவிர இஸ்லாமியர்கள் பற்றி படமெடுக்க வேற கதையே இல்லையா டா

இஸ்லாமியனுக்கு வாடகைக்கு ஒரு வீடு கிடைக்க மாட்டேங்குது யா
இந்த அவலத்தை பத்தி ஒரு படமா எடுங்க யா
எங்க வீட்டுல துளசி செடி இருக்கு அதனால முஸ்லீமுக்கு வீடு வாடகைக்கு விடமாட்டோமுங்க ன்னு நேரடியாவே சொல்றாங்க. இதை என்னிடம் அந்த ஓனரம்மா சொன்ன போது
துளசி செடியை விட நான் கீழானவனா? என்னடா ஊர் இது ன்னு தோன்றியது.
இல்லைன்னா ஹோட்டல் மாதிரி வெஜிடேறியன் போர்டு போடுறாங்க...
இதேயெல்லாம் அவணப்படுத்துங்க. புர்கா, இத்தா விஷயத்தை பேசுறதுனால இவங்களுக்கு என்ன லாபமோ தெரியல.
- ஹபீப் ஹாதி
மாற்றுமதத்தவருக்கு இஸ்லாமிய சமூகம் பற்றி பேசுவதில் அல்ல அவர்களுடைய பெண்களைப் பற்றி பேசுவதிலே விருப்பம் - அப்போதுதான் அவர்களை பிற்போக்கு, காட்டுமிராண்டி என முத்திரை குத்தி மேலும் ஒடுக்க முடியும், தமது ஒடுக்குமுறையை நவீனப்படுத்துதலின் பெயரில் நியாயப்படுத்த முடியும்! அது மட்டுமல்ல புர்கா என்று வந்துவிட்டாலே முகத்திரைக்குப் பின்னால் ஒரு அழகிய முகம் உள்ளதா இல்லையா என்பதே ஆர்வம்! வாடகை வீடு, வேலைவேலை வாய்ப்பு, உணவு போன்றவைகளை பேசுவதில் அதே கிளர்ச்சி இருக்காது!
ஆர். அபிலாஷ்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...