முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அதிகாரம் என்பது நல்ல சொல்

வேதியலில் சில வாயு அல்லது அமிலங்களை நிறமும் குணமும் அற்றது என்பார்களே அப்படி ஒரு வஸ்து தான் அதிகாரம். இதை புரிந்து கொள்ள எனக்கு வாழ்க்கையின் கிட்டத்தட்ட பாதி தேவைப்பட்டது. இதை சரியாக அறிந்து கொள்ளாததனாலே எனக்கு அதிகாரத்தில் எனக்கு மேலேயும் கீழேயும் உள்ளவர்களோடு உறவை தக்க வைப்பதில் நிறைய சிக்கல்கள் ஏற்பட்டன. இது என்னை நிம்மதியற்றவனாக, உலகத்தை, மனிதர்களை வெறுப்பவனாக என்னை மாற்றியது.

செய்தித்தாள் எப்படி டிவி ஊடகத்தை ஜெயித்தது?

சின்ன வயதில் எனக்கு செய்திகள் ரொம்ப திராபையான ஒரு விசயமாக தோன்றின. அப்போதெல்லாம் விளையாட்டு செய்திகள், அதுவும் குறிப்பாக கிரிக்கெட் செய்திகள், மட்டும் தான் படிப்பேன். ஏன் விளையாட்டு செய்திகளை முதல் பக்கத்தில் போடுவதில்லை என நான் யோசித்ததுண்டு. இப்போது அதுவும் நிகழ்ந்து விட்டது. ஆங்கில ஹிந்துவின் முதல் பக்கத்தில் கிரிக்கெட் செய்தி மற்றும் கிரிக்கெட் பத்தி ஒன்று கூட வருகிறது. வெகுசீக்கிரத்தில் சினிமா சேதிகளும் அது போல் வரும் என நினைக்கிறேன்.

நவீன பெண் படைப்பாளிகள் பற்றின கருத்தரங்கு

சாகித்ய அகாதெமி இலக்கிய கூட்டம்

ஏன் தனியார்மயத்தை தவிர்க்க இயலாது?

என்னுடைய அருந்ததி ராய் கட்டுரையை ஒட்டி இக்கேள்வியை பின்னூட்டத்தில் ஒரு நண்பர் கேட்டிருந்தார். என் சிற்றறிவுக்கு எட்டின வகையில் பதிலளித்து விடுகிறேன்.

தஸ்தாவஸ்கி காட்டும் அறிவுஜீவி

”கரமசோவ் சகோதரர்களில்” அப்பா கரமசோவுக்கு ஊருக்கு தெரிந்து மூன்று பிள்ளைகள். ரகசிய உறவில் ஒரு பையன். மூன்று பிள்ளைகளில் ஒருவன் உணர்ச்சிகரமானவன், களங்கமற்றவன், ஆவேசத்தின் உருவம். அவன் பெயர் டிமிட்ரி. டிமிட்ரி ஊரிலிருந்து தன் அப்பாவைத் தேடி சொத்தை வேண்டி வருகிறான். அவனுக்கு சொத்தை அளிக்க விரும்பாத அப்பா சின்ன சின்ன தொகைகளை கடனாக கொடுத்து ஏமாற்றுகிறார். அவன் அப்பணத்தில் கேளிக்கைகளில் ஈடுபடுகிறான். முரடனாக, போக்கிரியாக பெயரெடுக்கிறான். ஒருநாள் அவன் அப்பாவிடம் தன் சொத்தைப் பிரித்துக் கேட்க அவரோ அவன் தன்னிடம் வாங்கிய கடன் தொகையே சொத்தின் மதிப்பை விட அதிகம், அதனால் அவன் தான் அவருக்கு பணம் தர வேண்டும் என்கிறார். தான் ஏமாற்றப்பட்டதாய் உணர்ந்த டிமிட்ரி கொதிப்படைந்து அவரிடம் கத்துகிறான். தொடர்ந்து அவரிடம் இது சம்மந்தமாய் சர்ச்சிக்கிறான். ஆனால் இப்பிரச்சனையில் தன் பக்கம் நியாயம் இருப்பதாய் காட்டிக் கொள்ள அப்பா ஒரு தந்திரம் செய்கிறார். அப்பகுதியில் உள்ள ஒரு மடாலயத்தில் ஒரு தலைமை துறவியின் முன்னிலையில் தன் மூன்று மகன்களையும் வரவழைத்து டிமிட்ரியுடனான தகராறை பேசி முடிவெடுக்க நினைக்கிறார். சமரசத்த...

தேடிச் சோறு நிதம் தின்று…

ஒரு நண்பரின் திருமண வீட்டுக்கு சென்றிருந்தேன். கிறித்துவக் கல்யாணம். மாலை நேரம். கறி விருந்து. நிரம்பியிருந்த விருந்தினர் எங்கள் ஊர்க்காரர்களைப் போன்றே தோன்றினர். கழுத்து நிறைய நகை, முகத்தில் அப்பிய பவுடர், ஜரிகைப் புடவை, கூட்டமாய் உரசியபடி நடக்கும் பாணி, சத்தமான பேச்சு…இப்படி இப்படி. சென்னைக்காரர்களை பொது நிகழ்ச்சிகளில் பார்த்தால் பாவையை தாழ்த்திக் கொள்வார்கள். தோளை லேசாய் சாய்த்து முகவாயை தூக்கித் தான் நடப்பார்கள். எந்த காரணம் கொண்டும் தம் அசைவுகளால் இப்பிரபஞ்ச ஒழுங்கு குலைந்து விடக் கூடாது என அதிகவனமாய் இருப்பார்கள். இம்மக்கள் அப்படி அல்ல நீங்கள் பார்த்தால் திரும்ப நேராய் கண்ணைப் பார்ப்பார்கள். புன்னகைத்தால் வந்து பேசுவார்கள். போலி கௌரவம், அகந்தை, அந்நிய பாவனை அற்றவர்கள். அதனாலே எனக்கு அந்த இடமே பிடித்திருந்தது. ஒருவித நிம்மதி, சொந்த இடத்தில் இருப்பது போன்ற குளிர்ச்சி. மேடையில் மணமகன், மணமகள் புழுங்கிக் கொண்டு வணங்கி புன்னகைப்பதை பார்த்தபடி நேராய் பந்தியை நோக்கி நடை கட்டினோம். அங்கோ சரியான தள்ளுமுள்ளு நிலைமை.