ஒரு நண்பர் தனக்கு உரையாட தோழிகளே இல்லை. நெருங்கிப் பழக நினைக்கும் பெண்கள் ஏதாவது காரணம் சொல்லி விலகி விடுகிறார்கள். ஏன் அப்படி என கேட்டிருந்தார். அவருக்கான என் பதில் கீழ் வருவது: அன்புள்ள நண்பருக்கு ஒரு ஆண் தன் சமவயது பெண்ணுடன் தோழியாய் இருப்பது சிரமமான காரியமே. எந்த வகை நட்பிலும் ஒரு பாலியல் கோணம் இருந்தே தீரும். அதனால் தான் ஏற்கனவே காதலன் உள்ள பெண்கள் ஒரு புது ஆணின் நட்பு கோரலை ஏற்க தயங்குவார்கள். உங்களை விட வயது அதிகமான பெண்களிடம் இது சாத்தியமாகலாம். இன்றைய அலுவலகங்களில் ஆண் பெண் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு இருக்கும் போது நீங்கள் எதிர்பார்க்கும் காஷுவல் நட்புறவுகள் இரு சாராருக்கும் இடையே சாத்தியமாகும். அப்போது அந்த உறவில் ஒரு சின்ன ஜொள்ளு, வழிதல், கலாட்டா, கேலி எல்லாம் இருக்கும். ஒரு பெண்ணை காதலிப்பது இன்னும் சுலபம். ஆனால் பெண்கள் ஏன் சில ஆண்களிடம் நட்பாகக் கூட பழக தயங்குகிறார்கள்? ஏன் நான் கயவன் எனும் நினைக்கும் ஒரு ஆணிடம் மனதை பறி கொடுக்கிறார்கள்? அது உண்மையில் ஒரு புரியாத புதிர். ஆனால் பெண்களுக்கு எப்படியான ஆண்களை பிடிக்கும் என்பதை மெலிதாய் கோடிட்டு இங்கு காட்ட முடியும...