முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மிஷிமா- தற்கொலையும் கலையும் அருகருகே வந்தால்? (2)

மிஷிமாவின் எழுத்துக்கள் தமிழில் பரவலாய் மொழியாக்கம் வழி அறிமுகமாகவில்லை . எஸ் . ரா சில கட்டுரைகளில் மிஷிமாவின் வாழ்க்கையை சுருக்கமாய் சித்தரித்திருக்கிறார் . குறிப்பாய் , மிஷிமா ராணுவ முகாம் ஒன்றை கைப்பற்றி ஜப்பானிய சாமுராய் முறையில் தன் வயிற்றை வாளால் கிழித்து உயிரை விட்ட சம்பவம் . நினைக்க நினைக்க ஏற்க முடியாத , தர்க்க ரீதியில் புரிந்து கொள்ள சிரமமான முடிவு மிஷிமாவுடையது . டேமியன் பிளானகனின் சிறப்பு அவர் மிஷிமாவை ஒரு உளவியல் நோயாளி ஆக்காமல் , அவரது அகச்சிக்கலை இலக்கிய மற்றும் உளவியல் கோணத்தில் வெற்றிகரமாய் விளக்கி விடுகிறார் என்பது . இது மிக மிக சிரமமான காரியம் . அகத்தூண்டுதலினால் நடத்தப்படும் எழுத்தே இதை சாதிக்கும் .  

மிஷிமா- தற்கொலையும் கலையும் அருகருகே வந்தால்? (1)

எனக்கு வாழ்க்கைக் கதைகளைப் படிக்க எப்போதுமே விருப்பம் இருந்ததுண்டு . அதன் நேர்மை , சுதந்திரம் , தீவிரத்தன்மையை சிலநேரம் புனைவினால் கூட அடைய முடியாது . இங்கு நான் ரெண்டாயிரத்தின் பிற்பகுதி வரை கிழக்குப் பதிப்பகம் அதிகமாய் வெளியிட்ட டெம்பிளேட் வாழ்க்கைக் கதைகளையும் குறிப்பிட வேண்டும் . நீங்கள் 2-3 மணிநேரங்களில் வேகமாய் சரளமாய் ஒருவரது வாழ்க்கையை அறிய விரும்பினால் இத்தகைய நூல்களை அலமாரியில் இருந்து உருவி 2- மினிட் நூடுல்ஸ் போல உட்கொள்ளலாம் . ஒருநாள் மாலை “ குரு ” படம் பார்க்க செல்லுமுன் மதியம் அவசரமாய் கிழக்குப் பதிப்பகம் போய் அம்பானியின் வாழ்க்கைக் கதையை வாங்கி வருகிற வழியிலேயே படித்து படம் துவங்கும் போது சரியாய் கடைசிப் பக்கம் எட்டி , பிறகு அதன் ஒளியில் படத்தைப் பார்த்தது நினைவுள்ளது . சொக்கன் எழுதிய இத்தகைய நூல்கள் அப்போது என் விருப்பப்பட்டியலில் இருந்தன . உதாரணமாய் , “ சார்லி சாப்ளின் ”, “ சச்சின் : ஒரு புயலின் பூர்வகதை ” ஆகியவற்றை குறிப்பிடலாம் . சந்திரபாபு பற்றி முகில் எழுதிய “ கண்ணீரும் பிரபாகரனு...

பிக்பாஸ்- பெண்களை தமிழர் கூடுதலாய் மதிக்கிறோமா? (3)

மலையாள பிக்பாஸில் பங்கேற்ற ஆண்களில் சுரேஷை விட அதிக வெற்றி வாய்ப்புள்ள ஒரு பிரகாச நட்சத்திரம் சாபுமோன் . இதை உள்ளார்ந்து உணரும் பெண்களில் இருவர் அவரது அருகாமைக்காக போராடுகிறார்கள் - ஒருவர் ரஞ்சினி , மற்றொருவர் ஹீமா . ஹீமா சாபுவின் காதில் சென்று “ ஐ லவ் யூ ” சொல்லி பின்னர் அதை மோகன்லாலிடம் பகிங்கரப்படுத்துகிறார் . இதுவும் போதாதென்று அவர் கிடைத்த சந்தர்பங்களில் எல்லாம் பிற பெண்களிடம் தனக்கு சாபு மீதுள்ள ஈர்ப்பை காட்டுகிறார் . ஹீமாவின் காதல் போலியானது , அவரை ஆட்கொண்டு தனது உடமையாக்கும் தன்னல நோக்கு கொண்டது என புரிந்து கொள்ளும் சாபு அவரை நிராகரிக்கிறார் ; ஒருமுறை அவரை தன் காலில் மிதித்த சாணியுடன் ஒப்பிடுகிறார் . இதனால் காயப்படும் ஹீமா சாபுவை கிடைத்த சந்தர்பங்களில் எல்லாம் எதிர்க்க முயல்கிறார் . 

பிக்பாஸ்- பெண்களை தமிழர் கூடுதலாய் மதிக்கிறோமா? (2)

தமிழ் இலக்கிய கதைகளை எடுத்துக் கொண்டால் கூட நமக்கு இத்தகைய ஆண் சித்திரமே கிடைக்கிறது - இமையம் , ஜெ . பி சாணக்யா , லஷ்மி சரவணகுமார் , தேவி பாரதி ஆகியோரின் கதைகளில் வரும் ஆண்களைப் பாருங்கள் ; அவர்கள் ஆண்மை மறுக்கப்பட்டவர்களாக (Demasculinized), அந்நிலையின் தடுமாற்றங்கள் மிக்கவர்களாக , பெண்களின் அதிகார வீச்சின் முன்பு , துணிச்சலான ஆதிக்கமான செயல்பாடுகள் முன்பு வெம்பி வெதும்புகிறவர்களாகவே இருக்கிறார்கள் . நமது ஆண்கள் மீசையை முறுக்கி மிரட்டலாய் தெரிந்தாலும் அவர்களுக்குப் பின்னால் தலைகுனித்து செல்லும் பெண்ணொருத்தி தோன்றினாலும் இந்த மேல் - கீழ் அதிகார பந்தம் மேலோட்டமானதே ; ஆழத்தில் இருவருக்கும் இடையிலான அதிகார படிநிலை தலைகீழாகவே இருக்கும் . இதை சுட்டவே வடிவேலு மனைவியிடம் அப்படி செம அடி வாங்கும் காட்சியில் நடிக்கிறார் .

பிக்பாஸ்- பெண்களை தமிழர் கூடுதலாய் மதிக்கிறோமா? (1)

ஆண் - பெண் உறவு பிக்பாஸ் வீட்டில் ( மலையாளம் மற்றும் தமிழில் ) எப்படி உள்ளது , இது நமது சமகால பண்பாட்டை , பாலினங்களின் அதிகார படிநிலைகளை பிரதிபலிப்பதாக உள்ளதா என சமீபத்தில் நான் எழுதிய பிக்பாஸ் கட்டுரைகளில் கேட்டிருந்தேன் . அதன் தொடர்ச்சியாக இப்போது பெண்கள் ஆண்களை எதிர்கொள்வதில் தமிழில் இருந்து மலையாளத்துக்கு உள்ள ஒரு முக்கியமான வித்தியாசத்தைப் பற்றி இப்போது பேசப் போகிறோம் . இந்தி பிக்பாஸில் பெண்களின் நிலையையும் மேலோட்டமாய் ஒப்பிடுவோம்

ஜீவஜோதி விவகாரம்: குற்றங்களுக்கு காரணம் ஒழுக்கமின்மையா? (3)

நாம் பெரும்பாலான செய்திக்குறிப்புகளில் காண்பது போல அண்ணாச்சி எதேச்சையாக தெருவில் பார்த்த ஒரு பெண்ணின் மீது மையல் கொண்டு அவளுக்காக இவ்வளவு அபத்தமான ( அத்துடன் கொடூரமான ) குற்றமொன்றை பண்ணி காட்டிக் கொண்டிருக்க மாட்டார் .  ஆணின் மனம் முடிவுறாத காமத்தின் மீது பைத்தியமாக அலையக் கூடியது . பெண்ணின் காமத்துக்கும் கூட இந்த இயல்பு உண்டு தான் என்றாலும் ஆணைப் போல் ஒரு பெண் வேட்டை மனத்துடன் தன் இணையை துரத்துவதில்லை . ஜீவஜோதிக்கும் அண்ணாச்சியுடன் நெருங்கிப் பழகிய பிற பெண்களுக்குமான வித்தியாசம் ஜீவஜோதி தன் சுதந்திரத்தை முக்கியமானதாக கருதுகிறார் , தன்னை நிரந்தரமாக யாரும் அடிமையாக்க அவர் விரும்பவில்லை என்பது . அடிமையாகும் பெண்ணிடம் ஆணுக்கு அன்பும் விருப்பமும் இருக்கும் , ஆனால் காமம் குறையும் . தன்னிடம் இருந்து அவர் தொடர்ந்து தப்பித்துச் செல்வதே அண்ணாச்சியை மூர்க்கம் கொள்ள வைக்கிறது . ஒரு வேட்டைக்காரனின் மூளை துரத்திச் செல்லும் போது தான் கூர்மையாகும் , அப்பிராணியை கொல்வதை விட துரத்தும் திகில் தான் அவனை உத்வ...