முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

சந்தையும் பாலினமும்

சந்தைக்கு ஒரு வழக்கமுண்டு - யார் அதிகமாக அதைத் துய்க்கிறார்களோ அவர்களுக்கானதாக அதை மாற்றி அவர்களுடைய எதார்த்தத்தை அதற்கேற்ப மாற்றிவிடுவது . நம் சமூகத்தில் பெரும்பாலான பண்டங்கள் இரு பாலினங்களும் பயன்படுத்தக் கூடியவையே . மது கூட ஆண்கள் அதிகமான துய்க்கக் கூடியதாகி இன்று பெண்களும் சமமாக பயன்படுத்தும் ஒன்றாகி விட்டது . பைக் , ஸ்கூட்டர் போன்ற இரு சக்கர வாகனங்களுக்கும் இதைச் சொல்லலாம் . பாலினத்தைப் போன்றே சாதிக்கும் , தேர்தல் அரசியலுக்கும் , ஊடகம் , இலக்கியத்துக்கும் இதைச் சொல்லலாம் . குடும்பத்துக்குள் குழந்தைகளை ஒரு பண்டமாக எடுத்துக் கொண்டால் அதை விரும்பியோ விரும்பாமலோ கட்டுப்படுத்துகிறவர்களாக பெண்களே இருக்கிறார்கள் . நீண்ட காலமாக நமது மரபும் , அதைத் தொடர்ந்து நம் குடும்பநலச் சட்டமும் , தற்போதைய குடும்ப அமைப்பும் மறைமுகமாக இதையே வலியுறுத்துகிறது . அண்மைக் காலத்தில் குழந்தை வளர்ப்பு எனும் உழைப்பில் ஆண்களுக்கும் முக்கியமான பங்கு இருந்தும் , ஆண் உழைப்பை சமூக உற்பத்திக்காக ஒரு புள்ளியில் குவிக்கும் நோக்கில் குழந்...