முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

காலமும் பொழுதுபோக்கும் - ஒரு படைப்பாளியின் நெருக்கடி

  "If today it is rare to see literary adventures as daring as those of Joyce, Woolf, Rilke or Borges, it is not just down to the writers. For the culture in which we live does not favour, but rather discourages, the indefatigable efforts that produce works that require of the readers an intellectual concentration almost as great as that of their writers. Today’s readers require easy books that entertain them and this demand creates a pressure that becomes a powerful incentive to writers.” Excerpt From Notes on the Death of Culture, Mario Vargas Llosa - லோசா "பண்பாட்டின் மரணம்" குறித்த தன் கட்டுரையில் சொல்லக் கூடிய இவ்விசயம் தமிழ்ச் சூழலில் மிக முக்கியமானது - நான் இந்த அழுத்தத்தை கடந்த சில ஆண்டுகளாக மிக வெளிப்படையாகவே உணர்ந்து வருகிறேன்: எதையும் சுவாரஸ்யமாக, எளிமையாக, பரபரப்பாகவே எழுத வேண்டும் எனும் பதற்றம் எழுத்தாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாகப் புதிதாக எழுத வருவோரின் லட்சியம் வணிக எழுத்தாளர்களாகவோ நடுநிலை எழுத்தாளர்களாகவோ இருக்கிறார்கள். அதாவது அவர்கள் படிப்பத...

அழகும் விசுவாசமும்

  மிலன் குந்தேராவின் "89 சொற்கள்" (89 Words) எனும் கட்டுரை நூலின் முன்னுரையைப் படித்துக் கொண்டிருந்தேன். அதில் அவர் தன் தன் நாவல்கள் மொழிபெயர்க்கப்பட்டபோது அனுபவித்த அவஸ்தைகளைக் குறிப்பிட்டிருந்தார். மொழிபெயர்ப்பாளர்கள் தம் இஷ்டத்துக்கு வாக்கிய அமைப்பை மாற்றுகிறார்கள். பெரிய வாக்கியங்களை உடைத்து சிறுசிறு வாக்கியங்களாக்குகிறார்கள். இங்கிலாந்தில் வெளியான அவரது நாவலின் மொழிபெயர்ப்பில் (Unbearable Lightness of Being) பாலியல் சொற்களை முடிந்தளவுக்கு மாற்றி இருக்கிறார்கள். Being என்றால் இருத்தல். இதன் தத்துவார்த்த, கல்விப்புல தொனி பிடிக்காமல் ஒருவர் Unbearable Lightness of Living என்று மாற்றுகிறார். இதனால் எப்படி பொருள் தலைகீழாக மாறுகிறது என குந்தேரே விளக்குகிறார். சிலர் அழகுப்படுத்தும் நோக்கில் புதிய சொல்லாடல்களைக் கொண்டு வருகிறார்கள் - ஒருவர் "அவள் வாழ்வில் 17 ஆண்டுகள் கடந்தன" என்பதை "அவள் வாழ்வில் 17 வசந்தங்கள் கடந்தன" என மொழியாக்குகிறார். இது அழகாகத்தான் உள்ளது. ஆனால் தொனி மாறுகிறது. வசந்தம் எனும் உருவகத்தைக் கொண்டு வர எழுத்தாளருக்கும் தெரியும்தான். அவர் அதை...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் சூழலில் அந்நியமாகும் மக்களும் கட்சிகளும்

  தொகுதி மறுசீரமைப்பு குறித்து கடந்த சில ஆண்டுகளாகவே தி ஹிந்து போன்ற நாளிதழ்களில் விமர்சனங்கள் வந்து கொண்டிருந்தன. அப்போதே இதன் ஆபத்துக்களைப் பற்றி எழுதினேன். கடந்த ஆண்டில் இருந்தே தமிழ்நாட்டில் இருந்து எதிர்ப்புக் குரல்கள் கேட்கத் தொடங்கின. முதல்வர் ஸ்டாலின் ஒரு கட்டுரை எழுதினார். அண்மையில் அவர் இந்த சீரமைப்பு மசோதாவை எரித்து முழக்கமிடும் காணொளியைக் கண்டேன். இந்தப் பார்வையுடன் முழுக்க உடன்படுகிறேன். இந்தியா ஒரு வட-இந்திய-சார்பு தேசியமாக அலுவல்ரிதியாக, வெளிப்படையாக மாறப் போகிறது. அதேநேரம் இன்று எதிர்ப்பு ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட நிகழ்த்துதலாக மாறுவதால் நேரடியாக மக்களிடமிருந்து இதற்கு எதிர்ப்பு வருமா எனச் சந்தேகம் உள்ளது. தமிழ்நாட்டிலும் இது ஒரு தேர்தல் பிரச்சார வியூகம் மட்டுமே எனத் தோன்றுகிறது. இது எதிர்ப்பின் உண்மைத்தன்மையை கொன்றுவிடும். இப்படியான பிரச்சினைகளை மக்கள் தம்மிடம் இருந்தே ஒரு இயக்கமாகத் திரண்டு எதிர்க்கும்போதே (ரயில் மறிப்பு, விமான நிலைய முற்றுகை, மத்திய அரசு அலுவலக முற்றுகை) அதற்கு நல்ல பலனிருக்கும். இன்னும் சொல்லப்போனால் வேளண் சட்டங்களுக்கு எதிரான பஞ்சாப் விவசாயிகள் போ...

இதில் கதை எங்கே?

  இளம் வாசகர்கள் ஏன் இலக்கிய நாவல்களை வாங்குவதில்லை எனக் விசாரிக்கிற கட்டுரை ஒன்றை நேற்றுப் படித்தேன் (கிரீஷ் ஷுக்ளா எழுதிய Why Literary Fiction Feels Increasingly Irrelevant to Younger Readers). (டைம்ஸ் நவ் இதழில் வந்திருந்தது. நேற்று இலவசமாகப் படித்தேன். இன்று அது சந்தா செலுத்திப் படிக்க வேண்டியதாகி விட்டது.) இவ்விசயம் உண்மைதானா? தமிழில் இந்நிலை இல்லை. வெகுஜனப் புனைவெழுத்தாளர்கள் தம் விற்பனைத் தளத்தை இழந்துவிட்டார்கள். இங்கு 'இளம் வாசகர்களே' இல்லை. அவர்கள் பெரும்பாலும் இன்ஸ்டா, யுடியூப் மட்டுமே பயன்படுத்துகிறார்கள். செய்தித்தாள் கூடப் படிப்பதில்லை. அரிதாக இலக்கிய வாசிப்புக்குள் வருகிறார்கள். இது உண்மையிலே அவலமானது. ஆனால் ஆங்கிலத்தில் படிக்கும் பள்ளி மாணவர்கள் ஆங்கிலப் புனைவுகளை வாசிக்க முயல்கிறார்கள். கல்லூரியிலும் நான் இதைப் பார்த்திருக்கிறேன். எண்பது பேர்கள் உள்ள வகுப்பில் எட்டு பேராவது ஆங்கில நாவலொன்றைப் பையில் வைத்திருப்பார்கள். அவர்களுக்குத் தாய்மொழியில் எந்த வாசிப்பும் இருக்காது. சரி ஆங்கிலத்திலாவது வாசிக்கிறார்களே என ஆறுதல்படலாம் என்றால் அங்கும் ஒரு நிபந்தனை வருகிறது -...

ஏன் 'சோம்பேறியாக' இருப்பது அவசியம்?

  உடல் ஆரோக்கியம் என்பது காலையில் பூங்காவில் நடப்பதோ ஜிம்மில் எடை தூக்குவதோ டயட் இருப்பதோ அல்ல என்று இப்போதெல்லாம் தோன்றுகிறது. இளமையிலேயே மோசமாக உடல் பாதிக்கப்படுவோர், மரணமடைவோரைப் பார்க்கையில் இந்த எண்ணம் வலுப்படுகிறது. மன அழுத்தம், நெருக்கடியை, பதற்றத்தை மற்றொரு காரணமாக முன்வைக்கிறார்கள். ஆனால் இவை எங்கிருந்து வருகின்றன என யாரும் கேட்பதில்லை. வேலையில் இருந்து. ஆய்வின் அடிப்படையில் தொகுக்கப்பட்ட தரவொன்று இப்படிச் சொல்கிறது - ஒரு நாளை எட்டு மணிநேரம் உழைக்க வேண்டும் என்பது விதிமுறை. அதைத்தாண்டி நாம் போடும் ஒவ்வொரு மணிநேர உழைப்பும் (அவை வாரக்கணக்கில், மாதக்கணக்கில், வருடக்கணக்கில் குவிவதால்) நம் வாழ்வில் இரண்டு ஆண்டுகளைக் காவு வாங்குகின்றன. உடல் உழைப்புக்கு ஒரு வரம்பு உண்டு. 10-16 மணிநேரங்கள் உடலுழைப்பில் ஈடுபட்டால் அதன் எதிர் விளைவு உடனடியாகத் தெரியும் என்பதால் யாரையும் அவ்வாறு வலியுறுத்த முடியாது. அத்தகைய உழைப்பாளிகளுக்கு சங்கமும் சட்டப்பாதுகாப்பும் உண்டு. ஆனால் மூளையுழைப்பிற்கு அத்தகைய வரைமுறைகள் இல்லை. இன்று 12-14 மணிநேரம் உழைப்பது வெகு சாதாரணமாகி விட்டது. வீட்டுக்காக, காருக்காக...

பிறந்தநாள் வாழ்த்துகள்

  பல்லவிக்கு இன்று பிறந்த நாள். அதை ஒட்டி சில சிந்தனைகள். அவளுடைய வருகை என் வாழ்வில் நிறைய ஒளியைக் கொண்டு வந்துள்ளதை உணர்கிறேன். இந்த ஆண்டும் அவள் அவ்வாறே இருக்க வேண்டுமென விரும்புகிறேன். நானும் அவளும் இருவேறான மனநிலைகளும், ஆளுமைகளும் கொண்டவர்கள் - எனக்கு என் நாவல் எழுத்து ஒழுங்காக நடந்தால் மட்டும் போதும். அவளுக்கு பல சின்ன விசயங்கள் ஒழுங்காக நிகழ வேண்டும். எனக்கு இத்தெளிவு உள்ளதால் வேறெதைக் குறித்தும் கவலையில்லை. வயதாகிறதா? நல்லது. இன்னும் சில பத்தாண்டுகள் கடுமையாக தினமும் எழுத்தில் உழைத்தால் போதும். எழுதும் திட்டங்களை நிறைவேற்றி விட்டுச் செத்தால் போதும். இதற்கு அப்பால் யார் என்னைப் பற்றி என்ன நினைத்தாலும் பொருட்டில்லை. என் பணம், வேலை, சூழல் குறித்து அக்கறையில்லை. சுவற்றில் ஒரு ஆணியை அடித்து ஒரு படத்தைத் தொங்க விடுவோமே அதுதான் நான். என் ஆணி என் நாவல் எழுத்து. பல்லவி ஒரு பட்டம். அவளுக்கு எப்போதும் பறக்கிற ஒரு குதூகலமும், விழுந்துவிடுவோமே எனும் பயமும் உண்டு. அவளுடைய அணுகுமுறையில் ஒரு அனுகூலம் பல்வேறு சின்னச்சின்ன மகிழ்ச்சிகள் இருக்குமென்பது. எனக்கு நேரடி உலகில் அனைவருடனும் இணங்கிச் ...