Skip to main content

டிரம்ப் ஆதரவு இந்தியர்கள்


நேற்று டிரம்புக்கு ஆதரவாக வாஷிங்டனில் கலவரத்தில் ஈடுபட்டவர்களில் ஒருவர் இந்திய கொடியை உயர்த்தியபடி ஜோராக நிற்கிறார். அவர் பெரும்பாலும் ஒரு இந்து / இந்திய தேசியவாதியாக, நமது ஜியின் ஆதரவாளராகவே இருப்பார். வலதுசாரிகள் தேசவர்த்தமான எல்லைகளைக் கடந்து, இப்படியான ஒரு கலவரத்தின் போதும், எப்படி தவறாமல் ஒரே புள்ளியில் இணைகிறார்கள் பாருங்கள்!
இன்னொரு பக்கம் இதன் பின்னுள்ள நுண் உளவியல் முரணானது மற்றும் சுவாரஸ்யமானது - கறுப்பர்கள், ஸ்பேனியர்கள், அடுத்த தலைமுறை இந்தியர்கள் அமெரிக்காவில் குடியேறுவதை, வேலை வாய்ப்பை பெறுவதை விரும்பாத முந்தின தலைமுறை இந்திய வம்சாவளியினர் டிரம்பின் ஆதரவாளர்கள், ஆனால் டிரம்ப் வெள்ளை இனம் மட்டுமே அமெரிக்காவில் அதிகாரத்தில் இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் என்பதை கவனியுங்கள்.

இந்த சுயநல புத்தி நம்மவர்களுக்கு நமது சாதி அமைப்பில் இருந்து ஏற்படுகிறதென்றால் வெள்ளையர்களுக்கு அது இனவாத மேலாதிக்க எண்ணத்தில் இருந்து வருகிறது. மற்றோரு முரண் (இந்துத்துவர்களைப் போன்றே) அதிக எண்ணிக்கையுடன், கூடுதல் அதிகாரமும் பணபலமும் கொண்டு இருந்தாலும் இவர்கள் சதா தம்மை 'பாதிக்கப்பட்டவர்களாக' கற்பனை செய்ய, முன்வைக்க விரும்புவார்கள். 

இந்தியாவில் உள்ள தாழ்த்தப்பட்டவர்கள்-பனியா பார்ப்பன கும்பல் கூட்டணிதைப் போன்றது இது. இங்கு கீழ்மத்திய வர்க்க, கீழ்த்தட்டு மக்களும் சிறுபான்மையினரும் அவர்களுக்கு பொது எதிரி. அதாவது பொருளாதார எதிரிகள். ஆகையால் மதத்தின் பெயரால் ஒன்றிணைகிறார்கள். நாளை இந்த பொது எதிரி இல்லையெனில் முன்னவரை பின்னவர் நேரடியாகவே அடிமையாக்குவார். அமெரிக்காவில் மாற்று இன குடியேறிகளும்,  புதிய இந்திய குடியேறிகளும் பொது எதிரிகள். அத்தரப்பு பலவீனமாகி வெள்ளை இனவாத கட்சியினரால் அதிகாரத்தை தொடர்ந்து கைப்பற்ற முடிந்தால் அவர்கள் முதல் வேலையாக அமெரிக்க குடியுரிமையைப் பெற்ற தமது இந்திய தோஸ்துகளுக்கு எதிராகவே திரும்புவார்கள்.
இனவாத மதவாத கூட்டணிகள் எப்போதுமே ஒரு இருமுனைக் பரஸ்பரம் தாராளவாத முதலாளித்துவ அமைப்பு இவர்களைத் தாங்கிப் பிடிக்கும் வரையிலே ஒன்றாக இருப்பார்கள். பெருமுதலாளிகள் அந்த பக்கம் திரும்பினால் நண்டுகள் பரஸ்பரம் பிடித்திழுத்து கீழே தள்ள ஆரம்பித்து விடும். எந்த மக்களும் இனவாத சுயநலத்தால் பயன்பெற்றதாய் வரலாறில்லை.

Comments

Anonymous said…
His name is Vincent Xavier pro/ sympathizer of Congress party. He had food with Shashi Tharoor.

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

போலி அறச்சீற்றம்

  ஜெயமோகனின் அறச்சீற்றப் பதிவில் ஒரு அரசியல் உள்ளோட்டத்தைப் பலரும் கவனிக்கவில்லை. வைரமுத்து துணை-ஜனாதிபதியின் செல்வாக்கில் விருதை வென்றார் என ஒரு கூற்று. அதேசமயம் இதற்கு முன்பு வைரமுத்து இவ்விருதுக்காக முயன்றபோது தான் கடுமையாக எதிர்த்ததாகவும், விருது அவருக்கு நழுவிப் போனதாகவும் சொல்கிறார். இதன் பொருள் ஜெயமோகன் இங்கு பேசுவது வைரமுத்துப் பிரச்சினை அல்ல உட்கட்சி மோதல் பிரச்சினையைத் தான் என்பது. அதாவது. ஆர்.எஸ்.எஸ், பாஜகவுக்குள் இருக்கும் உட்குழுக்களில் எதையோ ஜெயமோகனைப் போன்றவர்கள் பிடித்து செல்வாக்கு செலுத்த முயல வைரமுத்து இவர்களையும் மீறி ராதாகிருஷ்ணனைப் பிடித்து காரியம் சாதித்துவிட்டார் என்று ஜெயமோகன் எண்ணுகிறார். இது அவரது குறிப்புக்குள் ஓடுகிற உள்ளோட்டம். வெளியே வைரமுத்து இலக்கிய மதிப்பற்ற சகதி, அவருக்கெல்லாம் தகுதியில்லை, அவருக்கு எதிராக நாம் திரண்டு வேலை செய்ய வேண்டும் எனும் உணர்ச்சிகரமான அறைகூவல் வருகிறது. நாம் இந்த அறைகூவலையே அதிகம் கவனிக்கிறோம். ஜெயமோகன் வேறு யாருக்கோ ஏதோ ஒரு செய்தியைத் தெரிவிக்க விரும்புகிறார். அவர் தன்னை செல்வாக்கு மிக்க ஒரு அதிகார முகவராகக் காட்டிக் கொள்ள ...