முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

தென்னாப்பிரிக்க தொடர் இழப்புக்கு தோனி சொல்லும் காரணங்கள்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் இறுதி ஆட்டத்தில் 438 ஓட்டங்களை தென்னாப்பிரிக்கா எடுத்து பெரும் வெற்றியை பெற்றது. இந்தியா தொடரை இழந்தது. தோனி இதற்கு இரு காரணங்களை முன்வைக்கிறார். 1) இந்தியாவில் விக்கெட் வீழ்த்துகிற சிறந்த சுழலர்களோ வேகவீச்சாளர்களோ இல்லை. வேகமாய் வீசுபவர்கள் (உமேஷ் யாதவ் போல) வெறுமனே ரன்களை மட்டுமே கொடுக்கிறார்கள். அவர்களுக்கு விக்கெட் எடுக்க தெரியவில்லை. 2) அக்ஸர் பட்டேல், ஜடேஜா மற்றும் பின்னியை தவிர நம்மிடம் ஆல்ரவுண்டர்கள் இல்லை.

காதல்

என்னுடைய ஒரு நண்பர் ஊனமுற்றவர். அவர் தன்னை எந்த பெண்ணும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை; அதனால் தான் தனிமையாகவே வாழ்வெல்லாம் இருக்க போவதாயும்; அதுவே சிறந்த தீர்மானம் என்றும் என்னிடம் திரும்ப திரும்ப கூறுவார். அவருடைய தன்னிரக்கம் இதை கூறச் செய்யவில்லை என அறிவேன். ஏனெனில் அவர் துணிச்சலாய் உழைத்து வாழ்வில் முன்னேறியவர். என்னை விட நேர்மறையான சிந்தனை கொண்டவர். ஆனால் காதல் பற்றின அவர் பார்வையில் தான் சிக்கல்.

சகிப்பின்மை பற்றி மற்றொரு பார்வை

இன்றைய ஹிந்துவில் ஹசன் சரூர் சகிப்பின்மை பற்றி ஒரு முக்கியமான கட்டுரை எழுதியிருக்கிறார் (Strident Sensitivity Gags Free Speech). சகிப்பின்மை என்றாலே நாம் அதை வலதுசாரிகளுடன் அடையாளப்படுத்துகிறோம். ஆனால் பிரிட்டனில் இன்று இடதுசாரிகள் எப்படி சகிப்பின்மை அற்றவர்களாய் மாறி வருகிறார்கள் என ஹசன் சரூன் பேசுகிறார். ஜெர்மெய்ன் கிரெய்ன் (Female Eunuch எழுதியவர்) எனும் பெண்ணியவாதி “பால்மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஒரு ஆண் ஆணாகவே இருக்கிறான். அவன் பெண் அல்ல” என்று ஒரு கருத்து சொல்கிறார். உடனே அவரை எதிர்த்து கடுமையான பிரச்சாரம் செய்யப்படுகிறது. அவர் ஒரு “திருநங்கை வெறுப்பாளர்” என சித்தரிக்கப்படுகிறார். காம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் அவருக்கு அளிக்கவிருந்த கௌரவப் பட்டம் ஒன்றை ரத்து செய்கிறது. கார்டிப் பல்க்லைக்கழகத்தில் அவர் நிகழ்த்தவிருந்த உரையை நூற்றுக்கணக்கான முற்போக்காளர்கள் போராடி தடை செய்கிறார்கள். தன் மீதான துவேசமும் தாக்குதல் சாத்தியங்களும் அதிகமாகி வருவதால் இனி பாதுகாப்பு உறுதி செய்யப்படாத பட்சத்தில் தான் எங்குமே சென்று பேசப் போவதில்லை என கிரெய்ன் தெரிவித்துள்ளார். இதற்கும் புதிய ...

வெங்கட் சாமிநாதன்

திரு.வெங்கட் சாமிநாதன் மறைந்தார். அவருக்கு என் துயரார்ந்த அஞ்சலி. வெங்கட் சாமிநாதனுக்கு இரு முகங்கள். ஒன்று உக்கிரமானது. கண்ணை மூடி வாளை சுழற்றும் போர் வீரனுக்கு உரியது. இன்னொன்று மென்மையானது. கனிவானது.

எ.கெ ராமானுஜனும் மனுஷ்ய புத்திரனும்

உறைந்த வாழ்வு – எ.கெ. ராமானுஜன் மதிய உணவு முடிந்து அவள் சென்ற பிறகு, சற்று நேரம் வாசித்தேன். ஆனால் திடீரென மீண்டும் பார்க்க தோன்றியது கண்டேன் பாதி தின்று வைத்த சேண்டுவிச் ரொட்டி, லெட்யூஸ் மற்றும் சலாமி, எல்லாம் அவள் கடியின் அமைப்பை சுமந்தபடி

ஸ்டாலினும் இந்துமதமும்

ஸ்டாலின் தனது “நமக்கு நாமே” சுற்றுப்பயணத்தின் போது தஞ்சாவூரில் புரோகிதர்களை சந்தித்து அவர்களின் வேண்டிகோள்களுக்கு செவி கொடுத்து ஒரு புகைப்படமும் எடுத்துக் கொண்டார். இப்படம் இப்போது சமூகவலைதளங்களில் உலவி வருகிறது. செய்தியிலும் இடம்பிடிக்கிறது. இயல்பாகவே ஒரு சாரார், இதை வைத்து தி.மு.க கொள்கையில் இருந்து தடம் புரண்டு விட்டது என்றும், இரட்டை வேடம் போடுகிறது என்றும் கடுமையாய் விமர்சித்து வருகிறார்கள். சமீபத்தில் பிள்ளையார் சதுர்த்தி கொண்டாட்டத்தின் போது திமுகவினர் கலந்து கொண்டதும், ஸ்டாலின் அதை ஆதரித்ததும் கூட சலசலப்புக்கு உள்ளானது. இதை நாம் எப்படி பார்க்க வேண்டும்?

மதவாத அரசை எதிர்க்க ஒரு இடதுசாரி அமைப்பை தாக்கலாமா?

இதுவரை தமிழில் சாகித்ய அகாதெமி விருது பெற்றவர்களின் பட்டியலை எடுத்துப் பார்த்தேன். ராஜம் கிருஷ்ணன், இந்திரா பார்த்தசாரதி, வல்லிக்கண்ணன், ரகுநாதன், சு.சமுத்திரம், பொன்னீலன், அப்துல் ரகுமான், தி.க.சி, சிற்பி, மேலாண்மை பொன்னுசாமி, புவியரசு, சு.வெங்கடேசன், டி.செல்வராஜ் என கணிசமானோர் இடதுசாரிகள் அல்லது இடதுசாரி சாய்வு கொண்டவர்கள். இவர்கள் போக எந்த நேரடி அரசியல் சார்பும் அற்ற அசோகமித்திரன், .க.நா.சு போன்ற இலக்கியவாதிகள்/ கலாச்சார நவீனத்துவர்கள் இருக்கிறார்கள். ஆரம்பத்தில் கல்கி, ந.பா போன்ற பிரபலங்களும், பின்னர் பாரதிதாசன் போன்ற திராவிட ”போர்வாளும்”, அதன் பிறகு மு.மேத்தா போன்ற சினிமாக்காரர்களும் விருதை பெற்றாலும் கடந்த இருபது வருடங்களுக்கு மேலாய் அகாடெமியில் இடதுசாரிகளின் பிடி வலுத்துள்ளது.