முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எ.கெ ராமானுஜனும் மனுஷ்ய புத்திரனும்




உறைந்த வாழ்வு – எ.கெ. ராமானுஜன்

மதிய உணவு முடிந்து
அவள் சென்ற பிறகு, சற்று நேரம்
வாசித்தேன்.
ஆனால் திடீரென மீண்டும்
பார்க்க தோன்றியது
கண்டேன்
பாதி தின்று வைத்த
சேண்டுவிச் ரொட்டி,
லெட்யூஸ் மற்றும் சலாமி,
எல்லாம் அவள் கடியின்
அமைப்பை சுமந்தபடி



Still Life - Poem by A. K. Ramanujan
When she left me
after lunch,I read
for a while.
But I suddenly wanted
to look again
and I saw the half-eaten
sandwich,
bread,
lettuce and salami,
all carrying the shape
of her bite.

இன்று மதியம் சென்னை பல்கலைக்கழக வகுப்பு ஒன்றில் ஏ.கெ ராமானுஜனின் கவிதைகள் பற்றி பேசுவதற்காய் வாசித்துக் கொண்டிருக்கும் போது இக்கவிதை என் கண்ணில் பட்டது. இதனோடு தொடர்புடைய ஆனால் மற்றொரு உணர்வுநிலையை கொண்ட ஒரு தமிழ்க்கவிதையையும் நினைவு வந்தது. மனுஷ்யபுத்திரனின் “இறந்தவனின் ஆடைகள்”. அதையும் மாணவர்களுடன் பகிர தோன்றியது. அதற்காய் ஆங்கிலத்தில் மொழியாக்கினேன்.
The dead person’s Dresses
-    Manushya Puthiran
How would I maintain
The dead person’s dresses,
I wonder.
I can’t just wear them
It may imply
I have been waiting for the chance

I can’t let them
Remain at his place
It is not so easy
Maintaining a normal relation
 with the dead 

Shall I hand them over
To the needy?
What if the  dead one’s impressions
Pop out at us
From unexpected places
And unexpected bodies

I could destroy the dresses
But my hands tremble
At the thought of
Burning him again and again

The dresses of the dead
Are not like dresses
They are his skin 

இறந்தவனின் ஆடைகள்
-          மனுஷ்யபுத்திரன் 
இறந்தவனின் ஆடைகளை
எப்படிப் பராமரிப்பதென்றே
தெரியவில்லை
இறந்தவனின் ஆடைகளை
அத்தனை சுலபமாய்
அணிந்துகொண்டு விட முடியாது
அதற்காகவே
காத்திருந்தது போலாகி விடும்.
அவை
இறந்தவனின் இடத்தில்
இருந்து விட்டுப் போகட்டும்
என்றிருக்க இயலாது
இறந்தவர்களோடு
அவ்வளவு இயல்பாய்
உறவுகள் சாத்தியமல்ல
தானமெனக் கொடுக்கலாமெனில்
இறந்தவனின் சாயல்கள்
எதிர்பாரா இடங்களில்
எதிர்பாரா உடல்களிலிருந்து
நம்மை நோக்கி வரும்
 இறந்தவனின் ஆடைகளை
அழித்து விடலாம் தான்
இறந்தவனைத்
திரும்பத் திரும்ப அழிக்க
கைகள் நடுங்குகின்றன


கருத்துகள்

செல்வக்குமார் இவ்வாறு கூறியுள்ளார்…
ராமானுஜனின் கவிதை பற்றி: கடியின் அமைப்பு - என்பது இதுவரை தமிழில் அமைந்துவராத புது சேர்க்கையாக, ஏதோ இரும்பை விழுங்கியமாதிரி இருக்கின்றது. கடியின் சுவடுகளைச் சுமந்தபடி என்றிருக்கலாமா. கடித்த தடத்தை, கடியின் பதிவை அல்லது அல்லது கடியின் வலியை என்றிருக்கலாம் ஆனால் கவிதையில் வலி இல்லை. கடியின் அமைப்பை என்பது தமிழில் நெருடுகின்றது. உங்களுக்கு எப்படிப்படுகின்றது.

செல்வக்குமார்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிச்சமுள்ள வேலை (குறுங்கதை) - ஆர். அபிலாஷ்

  வார இறுதி. காலை முதலே வேலைக்காரியை பத்து தடவைகளுக்கு மேல் அழைத்தாகி விட்டது. தவறான எண்ணென்று யாரோ திரும்பத் திரும்பச் சொல்வதுடன் தெலுங்கில் திட்டவும் செய்கிறார்கள். அவள் எண்ணை மாற்றியதுடன் எங்கே போனாள்? பாத்திரங்கள் குவிந்து கிடக்கின்றன. உணவை ஆர்டர் செய்து வாங்கி நானும் மனைவியுமாக அமைதியாக உண்டோம். பிள்ளைகள் இருவரும் என் சகோதரியின் வீட்டுக்கு விடுமுறையைக் கொண்டாடப் போயிருக்கிறார்கள். வீட்டு மணியடித்தது. நான் போய்த் திறந்தால் வேலைக்காரியின் தாயான எழுபது வயதுக் கிழவி நின்று கொண்டிருந்தார். நான் அவரைக் கண்டதும் திகைத்து ஒரு பக்கம் சாய்ந்து நின்று கொண்டேன். அவர் அலட்சியமாக என்னை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார். என் மனைவி தன் கையில் இருந்து தட்டைக் கீழே போட்டு விட்டுக் கத்துகிற சத்தம் கேட்டது. நான் தடுமாறியபடி உள்ளே வந்தேன். யாரை அழைப்பது, என்ன சொல்வது எனத் தெரியவில்லை.   அவர் உள்ளே சென்று வேலையை ஆரம்பித்ததுடன் சமையலறையில் யார் பொருட்களை மாற்றி வைத்தது என உரிமையுணர்வுடன் என் மனைவியை விசாரித்துக் கொண்டிருந்தார். என் மனைவி இன்னும் பேசும் இயல்பு நிலைக்கு வரவில்லை என்பதில் திகை...

பிரபலங்களின் நோக்கம்

  நீங்கள் ஒரு பிரபலத்தின் நேர்முகத்தைப் பார்க்கிறீர்கள். அவர் தன் வாழ்வில் வெற்றி பெற சரியான உணவின்றி அலைந்து திரிந்ததைச் சொல்கிறார். நீங்கள் கண் கலங்குகிறீர்கள். அவர் தன் குடும்பத்தைப் பிரிந்து மாநகரத்தில் தனிமையில் அனாதையாக வாழ்ந்தைச் சொல்கிறார். நீங்கள் மனமுடைகிறீர்கள். இன்னொருவர் தான் தன் காதலனால் ஏமாற்றப்பட்டதைச் சொல்லி அதனால் ஏற்பட்ட மனச்சிக்கல்களை, பதற்றத்தை, காயங்களை வர்ணிக்கிறார். உங்களுக்கு இரக்கமும் ஆத்திரமும் வருகிறது. இந்த அனுபவங்களும் உணர்வுகளும் பொய்யல்ல. அவரும் நீங்களும் அடிப்படையில் மனிதர்களே. அதேநேரம், இங்கு எழுப்ப வேண்டிய முக்கியமான கேள்வியுண்டு - ஏன் இம்மாதிரியான கதையாடல்களை ஊடகங்கள் உங்கள் முன்வைக்கின்ற்ன? அவர்களின் நோக்கம் என்ன? ஒரு விசயம் உண்மையாக இருந்தாலும் அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என வெகுஜன ஊடகம் நினைப்பதில் ஒரு உத்தேசம் இருக்குமே? பிரபலமும் நீங்களும் வர்க்கரீதியில் வெவ்வேறு இடங்களில் இருக்கிறீர்கள். இது ஒரு விலகலை ஏற்படுத்துகிறது. பிரபலங்கள் இந்த நாட்டின் பெரும்பணக்காரர்களை, அதிகார வர்க்கத்தின் பகுதியாக உள்ளார்கள். இந்த இடைவெளியை நிரப்புவது அவ...

ஒரு வாசகர் (நிஜ) கடிதம்

// எழுத்தாளர் ஆர் அபிலாஷ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மாதம் தோறும் வெளிவரும் உயிர்மை மாத இதழில் பல்வேறு கட்டுரைகள் மிகவும் சிறப்பானதாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும் தற்கால சூழ்நிலைக்கு ஏற்ற வகையிலும் இருப்பது மகிழ்ச்சி வாழ்த்துக்கள் தொடர்க இருப்பினும் கூடுதலாக ஆர்.அபிலாஸஷ் அவர்கள் எழுதி வரும் கட்டுரைகள் என்னை பெரிதும் ஈர்க்கின்றன காரணம் எண்ணி ஏற்பட்டுள்ள குழப்பங்களை சந்தேகங்களையும் தெளிவடைவதற்கும் விரக்த்தியிலிருந்து தெளிவான சிந்தனைகளை வளர்ப்பதற்கும் கட்டுரையில் அவர் வழங்கும் ஆய்வு அடிப்படையிலான தகவல்களும் வார்த்தை பிரயோகங்களும் பெரும் உதவியாகவும் நம்பிக்கை அளிப்பதாகவும் இருக்கிறது வாழ்த்துக்கள் ஐயா தொடரட்டும் தங்கள் பணி தொடர்ந்து பயணிப்போம் நன்றி! கோபாலசமுத்திரம் இ.கோபாலகிருஷ்ணன் திருநெல்வேலி// மின்னஞ்சலில் வந்தது. வாசகர்கள் இம்மாதிரி அடிக்கடி கடிதங்கள் எழுதி என்னை உற்சாகப்படுத்தும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இல்லாவிட்டால் ஏதோ சிறையில் இருப்பதைப் போல உள்ளது.