முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Plop: Notes on Heidegger நூல் வெளியீடு - சில குறிப்புகள் (1)

Plop: Notes on Heidegger நூல் வெளியீடு இன்று கிரைஸ்ட் பல்கலைக்கழக அரங்கு ஒன்றில் நடந்தது . பல்கலைக்கழக பதிவாளர் , துறைமுதல்வர் , சக ஆசிரியர்கள் , மாணவர்கள் மற்றும் நூலாசிரியர் மூவரான நாங்களும் கலந்து கொண்டோம் . நூலை பதிவாளர் திரு . அனில் பிண்டோ வெளியிட துறை முதல்வர் திரு . ஜான் ஜோசப் கென்னடி வாங்கிக் கொண்டார் . துறை முதல்வர் சுருக்கமாக வாழ்த்தி பேசி அமர்ந்தார் . அடுத்து , தத்துவ அறிஞரும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் விட்ஜென்ஸ்டைன் பற்றி முனைவர் பட்டம் முடித்தவரும் அதே தலைப்பில் முக்கிய தத்துவ நூல் ஒன்றை எழுதியவருமான ஜோஸ் நந்திக்கரா சிறப்புரை வழங்கினார் . நூலின் முக்கியத்துவம் , அதன் நிறை , குறைகள் அனைத்தையும் விரிவாக சுவாரஸ்யமாக அவர் விவாதித்தது பார்வையாளர்களை கவர்ந்தது . இறுதியாக நூலின் ஆசிரியர்களான நேஹா அகர்வால் மற்றும் ஆயுஷ் தமது எழுத்தனுபவம் , நூல் குறித்த கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர் . இறுதியாக நான் அனைவருக்கும் நன்றி தெரிவித்தேன் .

பிக்பாஸ்: ஷெரினும் அப்பாவும்

பெண்களின் அபாரமான சாமர்த்தியம் என சில சொற்களில் அவர்கள் பல சங்கதிகளை உணர்த்தி விடும் பாங்கை சொல்வேன் . ஒரு விசயத்தை ஒரு குறிப்பிட்ட சந்தர்பத்தில் சொன்னால் அதன் பொருளே முழுக்க மாறி விடும் என்பதையும் அவர்கள் நன்கு அறிவார்கள் . வாழைப்பழத்தில் ஊசி போல நைசாக ஒரு சேதியை உணர்த்தி விட்டு கடந்து போய் விடுவார்கள் . பார்க்க ரொம்ப தத்தியாக தெரியும் பெண்கள் கூட , சில நேரம் , அவர்களே இந்த மொழித்திறனும் சமயோஜிதமும் அதிகம் படைத்தவர்களாக இருப்பார்கள் . ஆமாம் , நான் சொல்வது பிக்பாஸில் ஷெரினைப் பற்றியே தான் . 

எழுத்தும் பித்தும் (2)

எழுத்தாளனைப் பொறுத்தமட்டில் , பித்தும் ஆளுமைப் பிறழ்வுகளும் எப்படி மிகைப்படுத்தப்பட்டன , அதன் வணிக நோக்கம் என்ன என பார்த்தோம் . அடுத்து ஒரு கேள்வி : எழுத்தாளனுக்கு படைப்பூக்கம் மனப்பிறழ்வில் இருந்தே வருகிறது எனும் உளவியல் கூற்றில் உண்மையில்லையா ?   இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் நேன்ஸி ஆண்டிரியாசென் முப்பதே கலைஞர்களை பேட்டி கண்டு அதன் மூலம் படைப்பாற்றலுக்கும் மன அழுத்தத்துக்கு தொடர்பு உண்டு என கூறினார் . பின்னர் கேய் ரேட்பீல்ட் ஜேமிசன் தனது ஆய்வில் படைப்பாற்றலுக்கும் bipolar disorder உளநோய்க்கும் தொடர்பு உண்டு என சொன்னார் . இவர்கள் இருவருமே பைத்திய மேதை என படைப்பாளிகள் சித்தரிக்கப்படுவதற்கான கோட்பாட்டு பலத்தை அளித்தவர்கள் . ஆனால் இவர்களின் ஆய்வு முடிவுகள் மிகையானவை மற்றும் ஆபத்தானவை என இன்றைய அறிஞர்கள் கருதுகிறார்கள் . மனவியாதி வந்தவர்களுக்கே தெரியும் அதை வைத்துக் கொண்டு தொடர்ந்து தீவிரமாக எழுத முடியாது எனும் உண்மை . ஆனாலும் ஏன் இந்த தொன்மம் தொடர்ந்து பிரசித்தமாக உள்ளது என நாம் கேட்க வேண...

எழுத்தும் பித்தும் (1)

எழுத்தாளர்கள் உலகம் முழுக்க சற்றே கோணலாக , எதிர்பாராத கோணங்கி சுபாவங்கள் படைத்தவர்களாக சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள் . அத்தகைய சித்தரிப்புகள் பிரசித்தமாகின . ஐரோப்பாவை பொறுத்தமட்டில் கற்பனாவாத கவிதை மரபுடன் ( கூல்ரிட்ஜ் , கீட்ஸ் , ஷெல்லி ) இது துவங்கியதாக சொல்கிறார்கள் . படைப்பாளிகள் மையத்தை விடுத்து விளிம்பை விரும்புகிறவர்கள் . எதையும் தலைகீழாக சிந்திப்பவர்கள் எனும் நம்பிக்கை தோன்றியது . சமூகம் எளிய சாமான்யர்களுக்கு அனுமதிக்காத காரியங்களை படைப்பாளிகள் தமதுரிமையாக கருதிக் கொள்வார்கள் ; ஒரு கட்டத்தில் சமூகம் தனது அடக்கப்பட்ட விழைவுகளை வெளிப்படுத்தவும் சித்தரித்து பரிசீலிக்கவும் படைப்பு வெளியை பயன்படுத்துவதாக ஒரு நம்பிக்கை   தோன்றி ஆஸ்திரிய உளவியலாளர் சிக்மண்ட் பிராயிடின் ஆய்வுக்கருத்துக்களால் வலுப்பட்டது . 

சங்கர் கணேஷும் இளையராஜாவும் ஒன்றா? (2)

பிரச்சாரமாக இல்லாத ஒன்று எப்படி இலக்கியமாகாதோ அதே போல பிரச்சாரமாக இருப்பதால் ஒன்று இலக்கியமல்லாமல் , படிக்க அருகதை அற்றதாக ஆகாது . கார்ல் மார்க்ஸ் உங்களுடையது ஒருவித அலெர்ஜி . அது விமர்சன நோக்கு அல்ல . சொல்லப் போனால் அது ஒரு பிழையான வாசிப்பு முறை . சென் பாலனும் எழுதி முதிர்ந்த பின் நீங்கள் எதிர்பார்க்கும் இந்த தளுக்கையெல்லாம் பழகிக் கொள்வார் எனலாம் . ஆனால் அது மட்டுமே அவரை தரமானவராக்காது . ( தரம் என்பது சிடுக்கு , உள்முரண் , சிக்கல்கள் , கட்டற்ற பாய்ச்சல் மட்டுமே . அது தலையை படிய வாரிக் கொள்வது அல்ல . அது புறவடிவத்தையும் கடந்தது .)

சங்கர் கணேஷும் இளையராஜாவும் ஒன்றா? (1)

“ இல்லை ” என குழந்தையிடம் கேட்டாலும் சொல்லி விடும் . ஆனால் பேஸ்புக்கில் செந்தில்வேல் என்பவர் இது போன்ற உதாரணத்தை வைத்து இலக்கியம் , இலக்கியமற்றது எனும் தரம் பிரித்தலும் சரியே என வாதிட்டிருந்தார் . இது போன்ற பார்க்க “ அடடே ” என சொல்ல வைக்கும் வாதங்கள் அடிப்படையில் பிழையானவை . ஏனென சொல்கிறேன் . 

அமேசான் கிண்டில் போட்டி சர்ச்சை

அமேசானின் pen to publish மின்னூல் போட்டியைப் பற்றி நான் ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கிறேன் . இப்போது தமிழ் , இந்தி ஆகிய மொழிகளிலும் இப்போட்டி நடக்கிறது . 5 லட்சம் வரை பரிசுத்தொகையை அறிவித்திருக்கிறார்கள் . ஒரு முழுநேர எழுத்தாளருக்கு ( அவர் இலக்கியவாதியோ அ - இலக்கியவாதியோ ) இவ்வளவு பெரிய தொகை கிடைத்தால் சுமார் ஒரு வருடம் முழுநேரமும் வேறு கவலையின்றி எழுதலாம் .  இப்போட்டியின் நோக்கமென்ன ? இது யாருக்கானது ?