முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

இரவுப் பட்சி எழுத்தாளர்களின் துரதிஷ்டங்கள்

  தொடர்ந்து எழுதுவதன் உடல் சிரமங்களைப் பற்றி யாரும் எழுதிப் படித்ததில்லை (நோய்களைச் சொல்லவில்லை). என்னுடைய முதல் இரு நாவல்களை நான் எழுதும்போது என் வேலைகள் எழுதுவதற்கு ஏற்ப அமைந்திருந்தன. "கால்கள்" நாவலை ஒன்றரை ஆண்டுகள் எழுதினேன். அப்போது என் கல்லூரி வேலை காலையில் 8: 30க்கு ஆரம்பித்து மதியம் 1: 30க்கு முடிந்துவிடும். மதியம் வந்து சாப்பிட்டுத் தூங்கிவிட்டு மாலை 5-6 மணிக்கு மேல் தினமும் எழுதும் பழக்கம் இருந்தது. இதனால் சோர்வடையவில்லை. ஒரே சவால் மதியம் என் நண்பர்களுடன் மதுவருந்தும் பழக்கம். குடித்து சாப்பிட்டுவிட்டு ஆறு மணி வரைப் பேசுவோம். அதன் பிறகு அன்றைய தினம் எழுத்து அம்பேல்தான். அதனால் வேலை முடிந்ததும் எப்படியாவது மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டு வீட்டுக்கு வந்துவிடுவேன். அடுத்த நாவல் "ரசிகன்" எழுதும்போது நான் முழுநேர முனைவர் பட்ட ஆய்வு பண்ணிக் கொண்டிருந்தேன். முழுநேர ஆய்வென்பது எழுத்துக்கு ரொம்ப வசதியானது. முதலாமாண்டு எழுத வேண்டிய அத்தியாயங்களை இரண்டே மாதங்களில் முடித்துவிட்டு மீத பத்து மாதங்களையும் வாசிப்புச் செலவிட்டேன். என் நெறியாளரின் அலுவலகத்தில் அருமையான நூலகம...

ராகுலின் சந்தர்ப்பவாதம்

ராகுல் காந்தி தேர்தல் ஆணைய முறைகேடுகளைக் குறித்து பி.பி.டியுடன் தன் வழக்கமான காக்கி கால்சராய், வெள்ளை டிஷர்ட் சகிதம் ஏதோ பயங்கர கண்டுபிடிப்பை வெளிப்படுத்துகிற தோரணையில் பேசிய பத்திரிகையாளர் சந்திப்பைப் பார்த்தேன். மோடி-கியானேஷ் குமார் ஜோடியைக் கிழித்துத் தொங்கப் போட்டுவிட்டார். அதே நேரம் ராகுலுக்கே உரித்தான சந்தர்ப்பவாதமும் இருந்தது: பாராளுமன்ற தேர்தலிலும் வட இந்திய மாநிலத் தேர்தல்களிலும் தேர்தல் ஆணையம் செய்த முறைகேடுகளைச் சொன்னவர் கவனமாக மே. வங்கம், தமிழ்நாடு, கேரளா ஆகியவற்றைத் தவிர்த்துவிட்டார். ஏனெனில், 1) கேரளாவில் அவரது கட்சி வென்றுவிட்டது. 2) தமிழ்நாட்டில் திமுக தன்னைத் தாண்டிச் செல்கிறது, இந்தியா கூட்டணியில் அதிக மைலேஜ் தேடுகிறது என அவருக்கு ஆரம்பத்தில் இருந்தே ஏற்பட்டிருந்த அதிருப்தி கடந்த தேர்தலில் விஸ்வரூபம் எடுத்து தேர்தல் முடிவுக்கு தன் கூட்டணிக்கு எதிராகப் போனதும் திமுகவை ஒழிப்பதே கூட்டணியைக் காப்பாற்றுவதைவிட முக்கியம் எனக் கருதி தவெகவுடன் அவசரக் கூட்டணி அமைத்து மாட்டிக் கொண்டார். தவெக உடல் காங்கிரஸுக்கு உயிர் பாஜகவுக்கு என்று முடிவெடுத்ததில் இப்போது அவர் தமிழ்நாட்டைப் பற்...

வார இறுதி பெங்களூரில்

  வரும் சனிக்கிழமை அன்று பெங்களூரில் ஆர்.வி கல்லூரியில் சிறப்பு விருந்தினராகப் பேசுகிறேன். ரொம்ப நாட்களுக்குப் பிறகு ஒரு கல்லூரியில் பேசுகிறேன். ஒரு கட்டுரையில் வரும் கருத்தை எப்படிப் புனைவாக்கலாம், அதன் சாத்தியங்கள், சவால்கள் என்னவென்று பேசலாம் என ஒரு ஐடியா உள்ளது. இரு பத்திகளை உதாரணம் காட்டி மாணவர்களுடன் கலந்துரையாடலாம்.

கியானேஷ் குமார் தலையின் மேல் நெருப்புப் புகை வளையங்கள்

  தேர்தல் தலைமை ஆணையர் கியானேஷ் குமாருக்கு எதிராக பிற இரு ஆணையர்களான சுக்பீர் சிங் சந்துவும் விவேக் ஜோஷியும் தெரிவித்துள்ள கருத்துக்கள் பெரும் சர்ச்சையை விளைவித்துள்ளன. இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் இதைக் குறித்து ஒரு கட்டுரை வருகிறது. அண்மையில் நடந்து முடிந்த மே. வங்க சட்டமன்றத் தேர்தலில் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் வழியாக 30 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நீக்கப்பட்டிருந்தனர். தேர்தல் முடிந்த பின்னர் அவர்களுடைய நீக்கம் பிழையானது எனத் தெரிய வந்து ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதுவே சர்ச்சையின் துவக்கம். யாருக்காக எதற்காக அவர்கள் வாக்களிக்க ஆணையம் அனுமதிக்கவில்லை? இதே போல நாடு முழுக்க பல மாநிலங்களில் நடந்துள்ளது. தமிழ்நாட்டில் கொளத்தூர் தொகுதில் செய்யப்பட்ட வாக்காளர் நீக்கங்கள் குறிப்பாக விவாதத்துக்குள்ளாகின - ஏனென்றால் திமுக தலைவர் ஸ்டாலினே அதில் தோற்கடிக்கப்பட்டார். இந்த நிலையில் சிறப்புத் தீவிர திருத்தத்துக்கான முடிவை ஆணையர்கள் விவாதித்து ஒருமித்து எடுக்கவில்லை எனும் பேச்சு உலவிக் கொண்டிருந்தது. அதாவது ஒரு வதந்தியாக. இப்போது இரு ஆணையர்களும் தமது ஒப்புதல் இன்றி கியானேஷ் குமார்...

"கதை முடிவுக்கு வந்து விட்டீர்கள்" மற்றும் The Sense of an Ending குறித்து ஒரு கடிதம்

Hello Abilash, I’m Muralidharan from Chennai. I’ve not written or spoken to you before, but I’ve only been interacting with you on your Facebook posts. I wanted to write to you about two things before I continue. I read your novel ‘You’ve Come to the End of the Story’ last year. It was a hard-hitting novel and a good example of straddling the line between crime and literary fiction. The ending felt very surreal and evocative. I’m re-reading the last segments now, after the Tamil Nadu elections, and in some sense, now the ending feels very realistic. I want to write about it separately. I enrolled in the ‘Outlining for Fiction’ workshop but couldn’t attend for personal reasons. Your beat sheet was interesting – I’ve used similar ones for some screenwriting assignments. It was a relief to know that such things can be used in Lit-fic novels as well. Many novels I read in Tamil are unplotted and because of the lack of structure, it’s difficult to reflect on what was the intention behind wr...

ஒரு கால் நூற்றாண்டு விழா

  எனக்கு ஒரு ஆசை. ஜெயமோகனின் கருத்துக்களுக்கு கண்டனமும் எதிர்ப்பும் தெரிவிப்போர் அதற்கு ஒரு கால் நூற்றாண்டு விழா கொண்டாட வேண்டும். முடிந்தால் சென்னையிலே ஒரு பிரம்மாண்ட விழா ஏற்பாடு செய்ய வேண்டும். அதில் ஒரு சிலரை அங்கீகரித்து கேடயமும் வழங்க வேண்டும். அல்லது இதை ஒரு பகடி நிகழ்வாகவும் நடத்தலாம். ஏனென்றால் அவரை என்னதான் கண்டித்தாலும் விமர்சித்து ஆயிரமாயிரம் பக்கங்கள் எழுதினாலும் அவர் அவற்றில் இருந்து எதையும் பெறுவதோ தன்னைப் பொருட்படுத்துவதோ இல்லை. காதில் வாங்கிக் கொள்வது கூட இல்லை. அவர் தனக்கான ஆற்றலையும் இவ்வாறுதான் உருவாக்கிக் கொள்கிறார். என்ன சொன்னாலும் அவருக்குப் புரியாது என்பது யாருக்கும் புரிவதில்லை (என்னையும் சேர்த்துதான்). அவரது கருத்துக்கள் பொதுவெளியை மாசாக்கிவிடக் கூடாது எனும் அக்கறையிலேயே பலரும் இப்படி தனியே நின்று சண்டை செய்கிறார்கள். இவர்கள்தாம் என்றில்லை, ஜெயமோகன் இதுவரை யாருடனும் கருத்து விவாதமே பண்ணியதில்லை. அவருக்கு அதில் நம்பிக்கை இல்லை. அவர் யாரைக் குறித்தும் எதைக் குறித்தும் இதுவரைக் கேள்வியே எழுப்பியதில்லை என்பதை நீங்கள் கவனித்திருக்க முடியும். அவருக்கு கேள்வியில்...

35 வருடங்களின் சலுகை

பொதுவாக தவெக அரசு குற்றம் செய்தால் ஓராண்டு சலுகை கொடுங்கள் என 'நடுநிலை' ஆதரவாளர்கள் சொல்கிறார்கள். அமைச்சர் ஆனந்தோ 35 ஆண்டு சலுகை கேட்கிறார். அமைச்சர் ஆனந்திடம் அவரது கட்சிப் பெண்கள் சென்று தவெக நிர்வாகிகள் தம்மைப் பாலியல் ரீதியாகச் சுரண்டுவதாகச் சொன்னால் அவர் "நீ சொன்னதுக்கு அவருக்கு எதிரா ஆக்‌ஷன் எடுக்க முடியாதும்மா. அவர் 35 வருசமா கட்சியில இருக்கிறாரு." இதைத்தான் சில எம்.எல்.ஏக்களைப் பற்றியும் அவர் மேடைகளில் சொல்கிறார். கட்சி ஆரம்பிச்சே ரெண்டு வருசம்தானே ஆகுது எனக் கேட்டால் ரசிகர் மன்றமே கட்சிதான் என்கிறார். அதாவது அவர் மனதில் தவெக ஒரு கட்சியே அல்ல. இவ்விசயத்தில் அவர் நேர்மையாக இருக்கிறார் - உண்மையிலே தவெக ஒரு கட்சியே அல்லவென்றுதான் அதில் சிறிது காலம் இருந்து வெளிவந்தவர்களும் சொல்கிறார்கள். அதை நான் மறுக்கவில்லை. ஆனால் அதற்காக விசாரித்து நடவடிக்கை எடுக்க மாட்டோம் என்றால் எப்படி நியாயமாகும்? ஒருவர் 35 வருடங்களாக ஒரு அலுவலகத்தில் பணி செய்கிறார் என்பதால் அவர் ஒரு பாலியல் குற்றமிழைத்தால் நடவடிக்கை இல்லை என எந்த ஊர் சட்டமும் சொல்லவில்லை. ரசிகர் மன்றமோ, ஆன்மீக அமைப்போ எத...