முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

எழுத்தாளன் என்ற மகான்: சில கற்பனைகள், வேண்டுகோள்கள்

பல வருடங்களுக்கு முன் காதலன் என்றொரு படம் வந்தது. காதலை ஒரு கடமையாக கருதி ஒரு மனதோடு செயல்பட்டால் கவர்னர் பொண்ணையும் கவரலாம் என்பது மையக் கருத்து. பாலகுமாரன் இதை ஒரு பக்தி நிலைக்கே எடுத்து போயிருந்தார். காதலர்கள் ஓடி வந்து கட்டிப் பிடிக்கும் முன் நிதானிக்க, தப்பு நேராமல் இருக்க (?) பத்து வரை எண்ணுவார்கள், அதாவது சூடம் சாம்பிராணி டிங்டிங்டிங் ... நிதானத்தை இங்கு கவனிக்கவும். ஒருவரை ஒருவர் வாரிக் கொள்வது, புறம் பேசுவது, விமர்சிப்பது போன்ற பல 'பது, வதுகள்' எங்கள் அலுவகத்தில் நடக்கும், உடனே மறந்து அடுத்து ஆரம்பிப்போம். ஆனால் இதையே எழுத்தில் செய்வதை தீவிரவாத செயலாக எடுத்துக் கொள்கிறோம். சகஜ வாழ்வில் உங்கள் மனைவி, மேலாளர், சகபயணிகள் உங்கள் 'டேய் முட்டாள்' என்று வெளிப்படையாகவோ அல்லாமலோ அழைப்பதில்லையா? நகரப் போக்குவரத்தோடு அதையும் சகஜமாக எடுத்துக் கொள்ளும் நாம் எழுத்து ஊடகத்தை 'விபத்து நடக்கும் பகுதி, கவனமாக செல்லவும்' என்று அணுகுவது ஏன்? 'மதில்கள்' நாவலில் பஷீர் அரசாங்கத்தை விமர்சித்து எழுதி, ராஜதுரோக குற்றம் சுமத்தப்பட்டு ஜெயிலுக்குப் போகிறார்....

இந்தியா எப்படி 'ஏறக்குறைய' வல்லரசு ஆனது?

ஸ்லம் டாக் மில்லியனர் படத்தின் ஆரம்பத்தில் மேற்கண்ட கேள்வியை சற்று மாற்றிக் கேட்கிறார்கள்: ஜமால் எப்படி மில்லியனர் ஆனான்? இதற்கும் மேல்வரும் 4 தேர்வு வாய்ப்புகள் தாம். ஜமால் மும்பை கால்சென்டரில் தேனீர் வினியோகிக்கும் இளைஞன். அவனுக்கு ஒரு இளம்பருவக் காதலி. அவள் தற்போது ஒரு மாபியா தாதாவின் பிடியில். 'யார் அடுத்த மில்லியனர்' எனும் வினாடி வினா ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவளை எப்படி மீட்கிறான் என்பது அடுத்து வரும் கதை. ஜமால் சேரியில் வளர்ந்தவன் என்பதால் இந்தியாவின் சேறு சகதி குப்பை என மேலோட்டமாக சாம்பிராணி காட்டுகிறார்கள். மேற்சொன்ன கேள்விக்கான பதிலை கடைசிக் காட்சியில் தருகிறார்கள். (ஈ) எழுதப்பட்டது. வரலாற்றின் குழப்படி அல்லது விதி. இந்த பதில் இந்தியாவுக்கும் ஜமாலுக்குமாக தரப்பட்டது. சமீப உலக வரலாற்றில் அதிரடியாய் வளர்ந்து விட்ட இந்திய மத்திய வர்க்கத்தின் குறியீடுதான் ஜமால். 3 காரணங்கள். சேரிப் பின்னணிக்கும் ஜமாலின் ஆங்கில அறிவு, பவிசு மற்றும் தோற்றப் பொலிவுக்கும் தொடர்பில்லை. தனது தேனீர் வினியோக பணிச் சட்டகத்தை மீறி அவன் ஒரு ம.வ. இளைஞனாகவே உலவுகிறான். சேரியிலிர...

நீண்ட ஆணுறுப்பின் நூதன அமைப்பு மற்றும் கற்பின் வரலாறு

திமிர்த்த மார்புகளை திரும்பிப் பார்க்காதவர்கள், இடை : புட்ட விகிதாச்சாரம் கவனிக்காதவர்கள், ஸ்கூட்டி பெண்ணை அரை மீட்டர் இடைவெளியில் பைக்கில் துரத்தாதவர்கள் இதைப் படிக்க வேண்டாம். காரணத்தை கடைசியில் சொல்கிறேன். மேற்கின் போர்ன் இலக்கியம் மற்றும் திரைப்படங்களில் ஒரு கறுப்பன் தோன்றி நம்மூர் ரித்தேஷ் துப்பாக்கி உருவுவது போல் தன் அண்டுராயர் விலக்கி உறுப்பைக் காட்டுவான். தசாவதாரம் என்பது போல் எதிருலுள்ள பருவப் பெண்ணோ/பதிவிரதையோ நெட்டுயிர்த்து எச்சில் முழுங்கி அவனிடம் சரண் புகுவார்கள். கறுப்பர்களின் நீண்டு விடைத்த குறி பற்றிய மித்துதான் இத்தகைய காட்சிகளுக்கு பின்னணி. என் மாமியார் "காமராஜருக்கு முழங்கால் வரை நீளும் கை" என்று அடிக்கடி பிரதாபிப்பார். நான் கேட்டேன் "என்ன நின்று கொண்டே தேங்காய் பறிக்கவா?" முதலில் சொன்ன மித்தின் வேர் நீளமான உறுப்பு கொண்டு மட்டுமே பெண்ணை திருப்தி அடைய வைக்க முடியும் என்ற பாமரத்தனமான கற்பனைதான். பெண்ணுறுப்பின் அதிஉணர்வு நரம்புப் பின்னல்கள் இரு உள், வெளி உதடுகள் மற்றும் கிளிட்டோரிஸ் எனும் நுண் குறியில் தான் உள்ளன. ஆழத்தில் இந்த உணர்வுகள் இ...

தோல்விக்கு காரணமாகும் வெற்றி: கிரிக்கெட்டிலிருந்து கற்பு வரை

ஒவ்வொரு நட்சத்திர கிரிக்கெட் வீரருக்கும் ஒரு பலவீனம். அந்த ஒரு பந்து போதும் அவர்களை வீட்டுக்கு அனுப்ப. ஆனால் இந்த பலவீன ஆட்ட நாயகர்கள் இந்த பந்தை தவிர்த்து 10 வருடங்களுக்கு மேல் ஆடி தாடி நரைத்து டீ.விக்குள் மைக்கை பிடித்து உட்கார்ந்து விடுகிறார்கள். கிரிக்கெட் அலசலின் மிகப் பெரிய தமாஷ் இந்த மர்ம ஸ்தானம் தான். 04-05-2009 அன்று நடந்த ஆட்டத்தில் ரெய்னாவின் சரவெடி இன்னிங்சை அலசிய ஸ்ரீனாத் மோவாயை உயர்த்தி சொன்னார்: "அவருக்கு பிடித்த இடத்தில் எதிரணியினர் பந்து வீசுகின்றனர். எகிறும் பந்து ரைனாவுக்கு பலவீனம் என்பதை அடுத்த ஆட்டத்திலாவது நியூசிலாந்து உணர வேண்டும்". 'மோவாய் இசைப்' பந்தை (மோவாயை உரசி பந்து பறக்கும் போது கேட்கும் ஸ்வெய்ங்...) வீசினால் ரெய்னாவை வெளியேற்றலாம் என்று என்ன உத்தரவாதம்? இப்படி மர்ம ஸ்தானம் கண்டுபிடித்து எதிராளிக்கு தலைவலி கொடுப்பது கிரிக்கெட்டில் ஒரு சம்பிரதாயம் மட்டுமே. பயன் தரும் என்ற உத்தரவாதம் இல்லை. உதாரணம். ஜெயசூரியாவுக்கு ஆப் ஸ்டம்பில் எகிறும் பந்து. அதை அவர் தூக்கி விளாச பிடிக்க என்று பத்து வருடங்களாய் தவறாமல் தெர்டு மேன் பகுதியில் ஆள் வி...

வெற்றி அடைவது எப்படி -- சில புருடாக்களும், நிஜங்களும்

வெற்றியாளர்களை நமக்கு உள்ளூரப் பிடிக்காது. இதன் காரணம் ஒருவர் தொடர்ந்து வெற்றி பெறுவதில் ஒரு அதர்க்கம் உள்ளது. இந்த அதர்க்கம் வெற்றியாளன் மீது கோபமாக மாறுகிறது. வெற்றியின் காரணங்களாக ஒரு பட்டியல் தரப்படுகிறது. அடிப்படையான உழைப்பு, மனவலிமை, ஒழுக்கம் ... என்று போக இந்த சூத்திரத்தில் நமக்கு அகப்படாத ஒரு கூட்டல் / பெருக்கல் குறி மறைந்துள்ளது. அது என்ன? சரியான சந்தர்பத்தில் சரியான நபர் வலது காலை வைப்பதா? சந்தர்ப்பவாத வெற்றிக்கு ஏகப்பட்ட உதாரண கதைகள். தற்போது வெளியான Luck by Chance இந்திப் படத்தின் கரு இதுதான். ஆனால், அங்கேயும் ஒரு ஓட்டை உள்ளது. சந்தர்ப்பம் (ஒழுக்கமான, கடுமையாய் உழைக்கும், மனவலிமை மிக்க ... ) வெற்றியாளனை ஒரு சக்கர நாற்காலியில் தள்ளிச் செல்வதில்லை. நம் மத்தியில் சந்தர்பங்கள் ஒத்துழைக்காத, சோம்பல் கொண்ட, உள்நடுக்கம் மறைக்கும் பல குழப்பமான வெற்றியாளர்கள் வேறு. மேலும் குழப்பம். வெற்றி எனும் இந்த புதிர் பற்றி எத்தனையோ சுயமுன்னேற்ற புத்தகங்கள். இவை வெற்றியை ஒரு பழக்கம் என்பவை. ஒரே மாதத்தில் வெற்றியாளனாவது எப்படி, வெற்றியாளனுக்கான ஏழு பழக்கங்கள், உங்களுக்குள் இருக்கும் ராட்ச...

அமைதியும் வன்முறையும்

சுவர்க்க வாசல் ஈழப்போரில் சிதறின பாலகர்களின் அடுக்கான வரிசைகள் கைதெறித்தவர்கள் காலிழந்தவர்கள் வயிறு கிழித்து வீசப்பட்ட முகம் சிதைந்த சிசுக்கள் முன்னவரில் பின்னவர் சாய்ந்து தவழ தேவன் கட்டளையிட்டார் பூமியில் மறுபடி உயிர்த்தெழுந்து கருணை மொழி சொல்லித் தர வரிசை கலைய எதிர்பட்ட சாத்தான் ஆறுமாத சிசு ஒன்றின் முதிராத இதயத்திடம் உதடு வைத்து கேட்டான் "உங்கள் தாய்மொழி என்ன?" யாருக்கும் தெரியவில்லை. மௌனம் இறுகி காற்று நின்றது. "ஏதாவது பேசுங்களேன்" கசியும் குருதியை சிசு தொட்டுக் காட்ட சாத்தான் மறைந்தான். குருதி காயும் தொறும் தோன்றிச் சொன்னான் "கேளுங்கள் கேள்விதான் உங்கள் மொழி" ரத்தத்தின் குழந்தைகள் நிற்கவே இல்லை கடைசிச் சொட்டு குருதியை போட்டல் பூமி உறிஞ்சும்வரை. வரிசையில் எஞ்சினவன் ஒரு பாலகன். வடுவற்ற முழு உடலாய் தேவன் திரும்பினார் தீர்ப்பு நாளன்று குருதி காணாமல் வறண்ட பூமி வெடித்தது தேவன் உடல் சுருங்கிற்று உயிர் வற்றியது அக்கணம் சிறு விரலால் அவர் நெஞ்சைப் பிறாண்டினான் இறுதி பாலகன் தேவன் உயிர்த்தார் முதற்சொட்டு மழையை அறிந்தது வானம் பூமி தளும்பியது மானிடம் வ...

பொதுமையாக்கல் அரசியலும் மெரீனா கவியரங்கமும்

"இலங்கை போரின் காயம் இன்னும் ஆறாத நிலையில் தமிழக எழுத்தாளர்கள் ஈழத்தை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை நுட்பமாக கேள்விக்கு உட்படுத்தும் இக்கட்டுரை நம் வாசிப்புக்கு அவசியமானது." 07-12-2008 அன்று மெரீனாவில் நடைபெற்ற இலங்கைத் தமிழர் இனப்படுகொலை கண்டனக் கவியரங்கில் கலந்து கொண்டு திரும்புகையில் நடைபாதை கடையொன்றில் லஷ்மி மணிவண்ணனின் "குழந்தைகளுக்கு சாத்தான், பெரியவர்களுக்கு கடவுள்" நூலைப் பொறுக்கினேன். இதில் முதல் கட்டுரை "பேச முடியாமல் போகிற பேச்சு" அதிகார மைய அரசியலால் பொதுமையாக்கப்படும் தீவிர எழுத்தாளர்களைக் கண்டிக்கிறது. அன்றைய கவியரங்க மனநிலையோடு ஒட்டி வாசிக்க வேண்டிய கட்டுரை இது. அன்று பெரும்பான்மையாய் ஒலிக்கப்பட்ட ஆதங்கம் பேச்சு சுதந்திரம், அதிகார மைய கண்காணிப்பு, கட்டுப்பாடு பற்றியது. லஷ்மி இந்த குரல் ஒடுக்கத்தை, குரல் இழப்பைப் பற்றிப் பேசுகிறார். கவியரங்க பங்கேற்பாளரில் ஒருசாராரின் நிலைப்பாட்டை புரிய இந்த கட்டுரை உதவும். உலகமயமாதல் சூழலில் தனி அடையாளம் பொது அடையாளத்துக்கு, பொதுமைப்படுத்தலுக்கு பலியாகிறது. பொதுவிருப்புகள், தேர்வுகள் வணிக லாபத்த...