முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

கலைக்கல்லூரிக்குள் ஒரு உத்தராபுர சுவர்

சென்னையின் பிரதான (முண்டாசு, தாடி) கல்லூரியில் ஒரு உத்தராபுர மதிற்சுவர் உள்ளது, சற்று வித்தியாசமான வடிவில். நான் இதைக் கண்டு மலைத்தது ஒரு மழை நாளில் விரிவுரையாள நண்பனைக் காண சென்ற போது. முதுகில் கனத்த பையுடன் வகுப்பிலிருந்து வகுப்புக்கு, அங்கிருந்து காண்டீனுக்கு, பிறகு கழிப்பறைக்கு என சங்கிலித் தொடராக தாவிக் கொண்டிருந்தவனை கைப்பற்றி உரையாடிய போது அவன் முதுகுப் பையை குறிப்பிட்டேன். பதில் சொல்லாமல் "ஓ அதுவா" என்று மாடியேறி அழைத்துப் போய் காட்டினான். அவன் சார்ந்த துறையின் அறைக் கதவில் இரண்டு பூட்டுகள் தொங்கின. வெங்கல மற்றும் எவர் சில்வர் பூட்டுகள். "டிப்பார்ட்மெண்டுக்கு ரெண்டு பூட்டு", சுட்டிக் காட்டி நிதானமாக சொன்னான். "சீனியர்ஸ் கிட்ட ரெண்டு சாவியும் இருக்கும். எங்களைப் போல் மானேஜ்மெண்ட் ஸ்டாஃபுக்கு ஒன்றுதான். சிலருக்கு எந்த சாவியும் கிடையாது. சீனியர்ஸ் எப்போது வெளியே போனாலும் அறையை பூட்டிடுவாங்க. மானேஜ்மெண்ட் ஸ்டாஃபும் வேறுவழியின்றி பையை எடுத்துக் கொண்டு கிளம்பீடுவோம். " "ஏன்?" "ஒருவேளை சீனியர்ஸ் திரும்ப வந்து திறக்காட்டி எங்க பை பொருட்...

ஹெமிங்வேயும் உயிரோசையும்

காக்னிடிவ் பொயடிக்ஸ் காக்னிடிவ் மனவியல் மற்றும் மொழியியலின் கருத்தாக்கங்களைப் பயன்படுத்தி பிரதியை நுணுக்கமாக ஆராயும் ஒரு விமர்சன முறை. ஒரு இலக்கியப் படைப்பில் தோன்றும் பாத்திரங்களை மைய உருவம், பின்புலம் என அடையாளம் கண்டு அணுகுவது இவ்விமர்சனத்தின் ஒரு குறிப்பிட்ட உத்தி. பொதுவாக முப்பரிமாணத்தில் நாம் பார்க்கும் ஒவ்வொரு பொருளுக்கும் பினபுலம் உண்டு. பின்புலம் இன்றி எதையும் நம்மால் தெளிவாகக் காண இயலாது. இந்தப் பத்தியின் எழுத்துக்களைப் பார்க்கக் கணினித் திரையின் வெள்ளைப் பின்புலம் அவசியம். பின்புலத்துக்கும் மையப்பொருளுக்குமான முரண்பாடு நீங்கள் அவற்றைப் பார்த்தறிய ரொம்ப அவசியம். உதாரணமாய், ‘உயிரே ...’ பாடலில் மனிஷா கொய்ராலா குலுங்கக் குலுங்க ஓடி வருவது புலப்பட கோட்டை மதில்கள் மற்றும் மணல் தரை நிலைத்துத் தெரிய வேண்டும். அதாவது அசைவு × நிலைப்பு என்ற முரண் எதிரிடைகள். மனிஷாவுடன் கோட்டை மதிலும் தரையும் குலுங்கினால் உங்களுக்கு கிறுகிறுவென்று இருக்கும். இவ்வாறு மைய உரு × பின்புலம் என்ற அடிப்படையில் பார்க்கும்படி மனித மனம் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஒரு இலக்கியப் படைப்பைப் படித்துப் புரிவதற்கும் இந்தப் ...

பழையன புகுதலும் புதியன கழிதலும்: இர்பான் பதான் -- திராவிட் விவகாரம் தேர்வா சமரசமா?

ஒவ்வொரு முறை அணி அறிவிக்கும் போதும் தேர்வுக் குழு நம்மை ஆச்சரியப்படுத்த, சில நேரம் சிரிக்க வைக்க, தவறுவதில்லை. இளைஞர்களை ஆதரிக்கிறோம் என இதுவரை சொல்லி வந்த தேர்வுக்குழு இர்பான் பதானை ஊருக்கு அனுப்பி 35 வயதில் டிராவிட்டுக்கு ஒருநாள் கிரிக்கெட் மீண்டும் ஆட டிக்கேட் கொடுத்துள்ளது. இந்நிலையில் தேர்வாளர்களிடம் ஒரு நிலையான தேர்வுத் திட்டம் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுகிறது. ஆனால் அவர்களிடம் எந்த திட்டமும் இல்லை என்பதே உண்மை. சென்னை பிரம்மாரிக்களின் சமையல் போல் சமய சந்தர்ப்பத்திற்கு ஏற்றபடி அவசர கால முடிவுகள் மட்டும் எடுக்கிறார்கள் தேர்வாளர்கள். இந்த விதமான தகிடுதித்த நடவடிக்கைகள் ஸ்ரீகாந்துக்கு சரளமாக வரக்கூடியது என்றாலும், அவரை மட்டுமே நாம் குற்றம் சாட்ட முடியாது. நெருக்கடி நிலையில் ஒரு புது அணித்தலைவர் தேர்வாகும் போதான கட்டாயத்தின் போது மட்டுமே இளைஞர்களை கண்டுபிடித்து ஊக்கமளிப்பது, நிலைமை சீரடைந்ததும், ஸ்திரமான வீரர்களை குளிர்பதனத்தில் பாதுகாப்பதும் இந்தியாவின் நெடுங்கால தேர்வுக் கலாச்சாரம். இக்கலாச்சாரத்தின் கண்ணி மட்டுமே தற்போதைய தேர்வுக்குழு. இளைஞர்களை கலவரப்படுத்தும் ராணுவ வாரியம் வத்...

அரவிந்த அடிகாவின் வெள்ளைப் புலி: அத்தியாயம் 2

ஒரு சில சீன சுயதொழில் முனைவோரை உருவாக்க கற்றறியலாம் என எதிர்பார்க்கிறீர்கள், அதனால் தான் நீங்கள் வருவது. இது என்னை திருப்தி செய்கிறது. சர்வதேச மரபொழுங்குப்படி என் தேசத்தின் பிரதமர் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் உங்களை விமான நிலையத்தில் மலர்செண்டுகள், சிறு கையடக்க சந்தன காந்தி சிலைகள் மற்றும் இந்தியாவின் கடந்த, நிகழ், எதிர்காலங்கள் பற்றின் முழுத்தகவல்களும் அடங்கின சிறுபுத்தகத்துடன் சந்திப்பார்கள் என்பது எனக்கு உறைத்தது. அப்போதுதான் ஆங்கிலத்தில் நான் அதனை சொல்ல வேண்டியிருந்தது, சார். மிக சத்தமாக. அது இரவு 11:37-க்கு. ஐந்து நிமிடங்களுக்கு முன்பு. நான் சும்மா ஏசுவதோ சபிப்பதோ இல்லை. நான் செயல் மற்றும் மாற்றத்தின் ஆள். அப்போதே அங்கேயே உங்களுக்கு கடிதம் எழுத ஆரம்பித்தேன். முதலில் பழமையான சீன தேசத்தின் பாலான என் அபிமானத்தை சொல்ல வேண்டும். வித்தியாச கிழக்கிலிருந்து துடிப்பான கதைகள் எனும், முன்பு பழைய தில்லியின் ஞாயிறு பழைய புத்தக சந்தையில் பொழுது கழித்து சற்று ஞானமைடைய முயன்று கொண்டிருந்த நாட்களில், பாதையோரமாய் நான் கண்டடைந்த, புத்தகத்தில் தான் உங்களது வரலாறு பற்றி படித்தேன். இந்த புத்தகம...

நன்கு வெளிச்சமுள்ள ஒரு சுத்தமான இடம்

நன்கு பிந்தி விட்டிருந்தது. மின்வெளிச்சத்திற்கு குறுக்கே நின்ற மரத்தின் நிழலில் அமர்ந்திருந்த ஒரு முதியவரைத் தவிர அந்த மதுபானக் கடையிலிருந்து யாவரும் வெளியேறி விட்டிருந்தனர். அத்தெருவில் பகலில் தூசு மண்டியிருக்கும்; ஆனால் இரவில் பொழியும் பனியில் தூசி படிந்து விடும்; அம்முதியவர் நேரங்கடந்து அங்கு அமர்ந்திருக்க விரும்பினார் -- ஏனெனில் அவர் செவிடு; மேலும் அப்போது இரவில் அங்கு அமைதியாயிருந்தது; அவர் அந்த வித்தியாசத்தை உணர்ந்தார். மதுபானக் கடையிலிருந்த இரு மேஜைப் பணியாளர்களுக்கு அவர் சற்று போதையில் இருப்பது புரிந்தது. அவர் ஒரு நல்ல வாடிக்கையாளராய் இருந்த போதும், மப்பு ஏறி விட்டால் காசு தராமலேயே போய் விடுவார்; அதனால் அவரை அவர்கள் கண்காணித்தனர். "போன வாரம் அவர் தற்கொலை செஞ்சுக்கப் பார்த்தார்", ஒரு பணியாளன் சொன்னான். "ஏன்?" "அவர் எல்லா நம்பிக்கையையும் இழந்து நொறுங்கிப் போய் விட்டார்" "எதைப் பற்றி?" "ஒன்றும் இல்லை" "ஒன்றும் இல்லை என்று உனகெப்பிடி தெரியும்" "அவரிடம் பூத்த பணம் இருக்கு" கடைக் கதவின் அருகிலுள்ள சுவருக்...

படைப்பின் G-spot: எழுத்தும் வாசிப்பும் (பகுதி 1)

என் நண்பன் சார்லஸோடு பெரியாரியம், திருமா என்று மணிக்கணக்காய் வறுத்து விட்டு, தலைப்பு தாவினேன். ரஜினி வசனத்தை திரித்து "காதலிக்கும் போது உன் ஆளுமைக்கு தோதான பெண்ணென்றால் மடக்குவது எளிதாக இருக்கும்" என்ற போது அவன் மேலும் சூடானான்: " அடப்பாவி ... எனக்கு இதுவரை தெரியாம போச்சேடா". பெரும்பாலான மொழியியல் இலக்கிய விமர்சன சித்தாந்தங்கள் கருவிகள் பொறுத்த வரையிலும் இதுவே நிகழ்கிறது. வாசகர்களை எதிர்நோக்கி பயன்படுத்தப்படும் விமர்சனக் கருவிகள் எழுத்தாளனுக்கு கணிசமாய் பயன்படக் கூடியவை. இவை பரிச்சயமானால் நமது முன்னோடிகளின் வெற்றிகளை வடிவ ரீதியில் புரிந்து கொள்ளலாம்; பாணியை பொதுவாய் போலச்செய்யும் விபத்து நேராமல். இதனால் ஒரு சுமாரான கதை அல்லது கவிதையை சிறப்பான ஒன்றாக எழுதலாம். காதலனுக்கே காம நுட்பங்கள் பிரயோசனமானவை. நான் இக்கட்டுரையை என்னைப் போன்ற இளம் எழுத்தாளர்களை நோக்கி முன்வைக்கிறேன். நாம் காக்னிடிவ் பொயடிக்ஸ் (Cognitive Poetics) எனும் விமர்சன முறையிலிருந்து மைய உருவம் (figure) மற்றும் பின்புலம் (ground) ஆகிய கருவிகள் பற்றி விவாதிக்கப் போகிறோம். காக்னிடிவ் பொயடிக்ஸ் காக்னிடிவ் ...

தமிழக கிரிக்கெட் வீரர்களின் நெடுங்காலப் புறக்கணிப்பும் அவசர தேர்வுகளும்

இந்திய கிரிக்கெட் அணியின் பின்வாசல் எச்சக்கலைகள் தமிழக வீரர்கள். ஜார்க்கண்டிலிருந்து ஒருவர் அணித்தலைவர் ஆகும் போது தமிழக வீரர்களால் இதுவரை தேசிய அணியில் நிலைக்கக் கூட முடியவில்லை. ஸ்ரீகாந்த் இந்திய தேர்வாளர் தலைவர் ஆகிட நிலைமை ஒரு U திருப்பம் எடுத்து மீடியனில் மோதி நிற்கிறது. தமிழக வீரர்களின் உதாசீனப் பட்டியல் பெரிசு. தொண்ணூறுகளில் இருந்து தற்போது வரை மாநில அளவிலான சிறந்த மட்டையாட்ட அணிகளில் தமிழகமும் ஒன்று. ஷரத், ரமேஷ், பதானி, ஸ்ரீராமிலிருந்து பரத்வாஜ், விஜய், தினேஷ் கார்த்திக், முகுந்த் வரை அனைவரும் ரன் எந்திரங்கள். இவர்களில் தேசிய அணியில் ஓரளவு பெயர் பெற்றவர்கள் மூவர். ராபின் சிங். 7 ஆண்டு காத்திருப்புக்கு பிறகு ஆறுதல் பூச்செண்டாக ராபின் சிங் தேசிய ஒருநாள்அணியில் சேர்க்கப்பட்டார். இவருக்கு தோதான இடம் எண் 3 தான். அவ்விடத்தில் கிடைத்த குறுகின கால வாய்ப்பில் (இலங்கைத்தொடர்) சதம் அடித்து ஒரு ஆட்டத்தை வென்றார். அந்த தொடரில் இந்தியா அதிக பட்ச ஓட்டங்கள் எடுத்தது அந்த ஆட்டத்தில் மட்டுமே. பிறகு எந்த காரணமும் இன்றி அவரிடமிருந்து மூன்றாவதாய் ஆடும் வாய்ப்பு அடுத்த தொடரிலிருந்து பறிக்கப்...