முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

இறைவனின் ஒன்பது பில்லியன் பெயர்கள் - ஆர்தர் சி கிளார்க்

”இது சற்று விசித்திரமான வேண்டுகோள் தான்”, பாராட்டத்தக்க கட்டுப்பாடு என்று தான் எதிர்பார்த்த ஒன்றுடன் டாக்டர் வாக்னர் கேட்டார். “எனக்கு தெரிந்த வரையில் ஒரு திபத்திய மடாலயத்துக்கு ஆட்டோமெட்டிக் சீக்குவன்ஸ் கணினி வழங்கும்படி கேட்கப்பட்டது இதுவே முதன் முறை. நான் அத்துமீறி ஆர்வம் காட்ட விரும்பவில்லை, ஆனால், உங்கள் உ ...ம்... நிறுவனத்துக்கு இத்தகைய ஒர் எந்திரத்தினால் பயனுண்டு என்று நான் சிறிதும் நினைத்திருக்க மாட்டேன். நீங்கள் அதைக் கொண்டு என்ன செய்ய உத்தேசிக்கிறீர்கள் என்று தயவு கூர்ந்து விளக்க முடியுமா?”

T20 கிரிக்கெட்டும் குஸ்தி பயில்வானின் சங்கடமும்

குறைநீள பந்து வீச்சை ஆடுவது பற்றி நினைவுகூரும் போது சஞ்சய் மஞ்சுரேக்கர் “அப்போதெல்லாம் ஆஸ்திரேலிய, தென்னாப்பிரிக்க மட்டையாளர்களைப் பார்த்தால் எங்களுக்கு அசூயையாக இருக்கும். நாங்கள் குறைநீள பந்திற்கு வெளியேறாமல் எப்படி சமாளிப்பது என்று கவலைப்படுகையில், அவர்களோ அதை ஒரு ஓட்டமெடுக்கும் வாய்ப்பாக கருதி நேர்மறையாக ஆடினர் ” . என்கிறார். சஞ்சய் குறிப்பிடும் தொண்ணூறுகளுக்கு முன்பிருந்தே இந்திய கிரிக்கெட்டர்களுக்கு குறைநீளப் பந்து முதுகில் தொற்றிய முள்ளாகத் தான் இருந்து வந்துள்ளது.

ஆர்.பிரகதீசின் ”உணர்வு”: வெளியேற்றமும் மனவிகாசமும்

திரைக்கதை மற்றும் இயக்கம்: ஆர்.பிரகதீஷ் நடிப்பு: பிரவீன் மற்றும் ஜானி குரல்கள்: ஆர்.பிரகதீஷ் மற்றும் புவனேஷ்வரி ஒளிப்பதிவு: ஆர்.அரவிந்த் படத்தொகுப்பு: டி.சிவமணி ஆர்.பிரகதீசின் இக்குறும்படம், மேலோட்டமாக சொல்வதானால், ஒரு சிறுவனுக்கும் நாய்க்குமான நட்பைப் பற்றியது. இன்னும், அந்நாய் தான் வாழும் தெருவுடன் கொள்ளும் பந்தத்தை பற்றியது. ஒரு மிகச் சின்ன இழையை நுட்பமாகவும் உணர்வுபூர்வமாகவும் திரைக்கதையாக இயக்குநர் பின்னி வளர்த்துள்ளது படத்துக்குள் எளிதில் நுழைந்து அடையாளம் காண, மனம் ஒன்ற பார்வையாளனை தூண்டுகிறது.

என்.டி ராஜ்குமார்: கோமாளி ஆக்கப்பட்ட கோமாளியின் குரல்

என்.டி ராஜ்குமார் தனது உச்சாடன தொனி மற்றும் தனித்துவமான நடைக்காக முதல் தொகுப்பான “ தெறியிலிருந்தே ” கவனிக்கப்பட்டவர். தலித் கவிதை வரலாற்றில் நிலைபெற்ற பெயர். அவரது ஆறாவது கவிதைத் தொகுப்பின் தலைப்பு குட்டிரேவதியின் “பூனையைப் போல் அலையும் வெளிச்சத்தை ” போல் நம்மை நெடுநேரம் அட்டைப் பக்கத்திலேயே நிலைக்க வைப்பது: ” சொட்டுச் சொட்டாய் விழுகின்றன செவ்வரளிப் பூக்கள் ” .

வாக்குமூலம் - புக்காவஸ்கி

மரணத்துக்கு காத்திருக்கிறேன் படுக்கை மேல் தாவும் ஒரு பூனை போல் என் மனைவிக்காக ரொம்ப ரொம்ப இரக்கப்படுகிறேன்

கிளாடிஸ் உணர்கிறாள் -ஜிம் ஹென்ரி

தாமரை இதழில் வெளியான எனது மொழியாக்கம் புல்வெட்டும் எந்திரத்தை புல்லுக்கு குறுக்காய் தள்ளிய போது கிளாடிஸ் அம்மாவை மூச்சுக்குக் கீழ் சபித்துக் கொண்டாள். அவளது சகோதரன் எடி நேர்கோடுகளை எப்போதும் உருவாக்குவான், ஆனால் அதை செய்வது அவளுக்கு சாத்தியமற்றதாகவே படுகிறது. வெக்கை தாங்கவொண்ணா விதம் உள்ளது; கிளாடிஸுக்கு போதை களைப்பு வேறு.

பயணக் குறிப்புகள்: கலையாத சதுரங்கப் பலகையும், கச்சிதமான நூலகமும்

போன மாத இறுதியில் சில சான்றிதழ்களை எடுத்து வர சொந்த ஊரான குமரி மாவட்டத்துக்கு செல்ல வேண்டி இருந்தது; சில தனிப்பட்ட காரணங்களுக்காக அது ஒரு சற்று நீண்ட சுற்றுப் பயணமாக முடிந்தது. பெங்களூர் சென்று அங்கிருந்து ஊருக்கு சென்றேன். அங்கே இருந்த இரண்டு நாட்களில் முடிந்த வரையில் நண்பர்களை சந்தித்தேன். புதுச்சூழலிலோ அல்லது நீண்ட காலம் கழித்தோ சில நண்பர்களை சந்திக்கும் போது வினோதமான ஒன்று புலப்படுகிறது: அவர்கள் அதே சுற்றுப் பாதையில் அதே பாவனைகளுடன் செல்கிறார்கள் என்பது அது. பிரச்சனைகளும், புகார்களும், தீர்வுகளும் மாறுவதே இல்லை.