முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஸ்டான்லி க டப்பா: குடும்பத்திற்கு அப்பால் உள்ள அம்மா

“ ஸ்டான்லி க டப்பா ” வணிக சினிமாவின் வடிவொழுங்கை ஓரளவு மீற முயலும் படம் என்பதும், குழந்தைகளுக்கு க்ற்பனை மீசை ஒட்டி பேச வைக்காத படம் என்பதும், குழந்தைகளின் பெயரில் அமீர்க்கான் போன்றவர்கள் “ரஜினி அங்கிள் ” வேசம் போடாத படம் என்பதும் காட்சிகள் ஓடத் துவங்கின கொஞ்ச நேரத்திலே உங்களுக்கு புரிந்து விடும்.

லில்லிபுட் தேசத்தில் கிரிக்கெட்

ஐ.பி.எல்லை கட்டுப்படுத்த வேண்டும், அதற்கான விதிமுறைகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உருவாக்க வேண்டும் என்று ஆரம்பத்தில் இருந்தே இயன் சேப்பல் கூறி வந்தார். ஐ.பி.எல்லை ஏன் கட்டுப்படுத்த வேண்டும்? அது ஒரு நல்ல பொழுதுபோக்காக, விளம்பர நிறுவனங்களின் வேட்டைக்களனாக, உள்ளூர் வீரர்கள் மற்றும் ஓய்வு பெறப் போகும் வீரர்களின் எதிர்காலத்தை பத்திரப்படுத்தும் மார்க்கமாக பல பரிமாணங்கள் கொண்டுள்ளது. ஏன் ஐ.பி.எல் வேண்டும் என்று ஒரு எளிய இந்திய கிரிக்கெட் ஆதரவாளர் கூட மூச்சுவிடாமல் பேச முடியும். ஆனாலும் நமது கண்ணாடியை கழற்றி விட்டு பார்த்தால் அது உலகக் கிரிக்கெட்டின் சத்தை உறிஞ்சி சக்கையாக்குவது புரியும்.

போனபார்ட்டின் பின்னடைவு - சார்லஸ் புக்காவஸ்கி

அவரை பிரெட் என்று தான் அழைத்தார்கள் அவர் எப்போதுமே பாரின் கடைசி இருக்கையில் கதவருகே இருந்தார். திறப்பதில் இருந்து மூடும் வரை அவர் எப்போதுமே அங்கே தான் இருந்து கொண்டிருப்பார். என்னை விட அதிகமாகவே அங்கே அவர் இருந்தார், அது ஒன்றும் சாதாரண விசயமல்ல.

வேற்றுகிரக வாசிகள் - புக்காவஸ்கி

நீங்கள் நம்ப மாட்டீர்கள் மிகக் குறைந்த சச்சரவு அல்லது துயரத்துடன் வாழ்ந்து செல்லும் நபர்கள் உள்ளார்கள். நன்றாக ஆடை அணிவார்கள், உண்பார்கள் தூங்குவார்கள். தாம்பத்திய வாழ்வில் திருப்தியாக இருப்பார்கள்.

கனிமொழியும் நவீன சட்டாம்பிள்ளைகளும்

கனிமொழியின் ஜெயில் வாசத்தின் போது வரும் எதிர்வினைகளும் நக்கல்களும் வக்கிரமாக உள்ளன. அவர் பாலியல் ரீதியாய் ஒழுக்கங் கெட்டவர் என்பதில் இருந்து அவரது குளியலறை ஜெயிலுக்குள் எங்கிருக்கும் என்று வினவுவதை வரை இவை கனிமொழியை ஒரு விபச்சாரி போல் சித்தரிக்கின்றன.

மகாஎழுத்தாளர்களின் வரலாறு

தமிழில் ஆரம்பத்தில் ஒரே ஒரு மகாகவிஞன் இருந்தான் அவன் பெருந்தனிமையில் ஒரு துர்கனவில் தனக்குத்தானே பேசி தன்னிடமே முரண்பட்டு தன்னையே மன்னித்து மறைவாய் தனக்கே குழி பறித்து கடவுளிடம் தன்னை காப்பாற்ற மன்றாடினான்

நட்சத்திர பார்வையாளன் - - லூயிஸ் மக்நீஸ்

நாற்பது வருடங்களுக்கு முன்பு (வேறு யாருக்கும் இல்லையென்றாலும், எனக்கு இந்த எண் சற்று ஈர்ப்புடையது) அது ஒரு அற்புதமான நட்சத்திர இரவு