முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

யுவ்ராஜ் தன்னையே வருத்திக் கொள்ள வேண்டுமா?

மனம் வேறெங்கோ! நேற்றைய T20 உலகக் கோப்பை ஆட்ட்த்தில் இந்தியா தோற்க யார் காரணம்? தெரியவில்லை. ஆனால் ஊடகங்களுக்கு ஒரு எளிய பலிகடா மாட்டியுள்ளார். யுவ்ராஜ் சிங். முக்கியமான கட்டத்தில் அவரது 21 பந்து 11 ஓட்டங்கள் இந்தியாவின் மட்டையாட்ட வேகத்தை சறுக்குமர விளையாட்டு போல் ஆக்கியது. ரசிகர்கள் யுவ்ராஜ் சிங்கின் வீட்டின் மேல் கல்லெறிந்து கோபத்தை காட்டி உள்ளார்கள். ஊடகங்களில் அவர் மீது கடும் கண்டனங்கள் எழுகின்றன. இறுதி ஆட்டம் முடிந்ததும் யுவ்ராஜ் ஒவ்வொரு வீர்ராக சென்று கை கொடுத்தார். அப்போது விராத் கோலி மட்டும் கோபத்தில் விலகிச் சென்றாராம்.

புது எழுத்தாளன், இலக்கிய பத்திரிகை மற்றும் வெகுஜன மீடியா

    புது எழுத்தாளர்கள் என நான் கூறுவது இணையம் மற்றும் பேஸ்புக்கில் அல்லது இடைநிலை பத்திரிகைகளில் அதிகம் அறிமுகமாகாதாவர்கள். அந்த வகையில் பல நல்ல எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு சிறுபத்திரிகையில் பிரசுரமாவது கூட அவ்வளவு எளிதல்ல. ஒரு காலத்தில் பிரபல எழுத்தாளர்கள் கூட சின்ன பத்திரிகை வழி தான் நீர்ப்பரப்புக்கு மேல் தலைதூக்கி சுவாசித்தனர். சுஜாதா கூட சிவாஜி எனும் ஊர் பேர் தெரியாத பத்திரிகையில் முதலில் எழுதினார். தன் முதல் கதை பிரசுரமானதும் அவசரமாக இன்னொரு கதை எழுதி சூட்டோடு சூடாக பத்திரிகை ஆசிரியரை தேடி அவர் வீட்டுக்கு போனார். கதவைத் திறந்தவர் வேண்டா வெறுப்பாக “என்ன வேணும்?” எனக் கேட்கிறார். தன் முதல் கதை அவர் பத்திரிகையில் வந்திருக்கிறது, அதனால் இன்னொரு கதையும் தயாரித்து கொண்டு வந்திருப்பதாக கூறுகிறார். தொடர்ந்து எழுத விரும்புவதாக தெரிவிக்கிறார். ஆசிரியருக்கு சுஜாதாவின் உற்சாகம் அபத்தமாக தெரிகிறது. சரி, பார்த்து விட்டு சொல்கிறேன் என சொன்னவர் கதைத் தாளை தன் தோளில் இருந்த குழந்தையின் கையில் கொடுக்கிறார். அடுத்து என்ன நடந்திருக்கும் என நம்மை ஊக்கிக்க சொல்...

கார்ப்பரேட் மயமாகும் உலக கிரிக்கெட்டில் ஒரு இந்திய காட்பாதர்

-     இன்று 14 டெஸ்டுகளை வெளிநாடுகளில் தொடர்ந்து இழந்த நிலையில் தோனியின் மீது கடும் விமர்சன்ங்கள் வைக்கப்படுகிறது. அவரது பதவியை பறிக்க வேண்டும் என இயன் சேப்பல் கோருகிறார். ஆனால் தோனியின் பதவி அவர் கையில் இல்லை. அவர் விரும்பினால் கூட நாற்காலியை காலி செல்ல முடியுமா என்பது சந்தேகமே! தோனியின் எதிர்காலமும் இந்திய கிரிக்கெட் அணியின் நிலையும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அரசியலோடு முன்னெப்போதும் நிகழாத வகையில் லாக் ஆகி உள்ளது. தி.மு . கவுக்கு எதிராக சி . பி . ஐ வழக்குகள் தொடுக்கப்பட்ட போது எப்படி அக்கட்சி காங்கிரசுடன் லாக் ஆனதோ அது போன்றே உள்ளது இந்திய கிரிக்கெட்டின் நிலையும் .

ஆயிரத்தில் ஒருவன்: அசல் தமிழ் சினிமா எது?

   1965 இல் வெளியான “ ஆயிரத்தில் ஒருவனின் ” டிஜிட்டல் ரீதியாய் மேம்படித்தப்பட்ட வடிவம் வெளியாகி உள்ளது . பொதுவாக சத்யம் திரையரங்களில் அந்த வகையான கூட்டத்தை பார்த்ததில்லை . அவர்கள் எழுபதுகளில் பிறந்தவர்கள் . டிஸைனர் , பிரண்டட் சட்டை போடாதவர்கள் . கறுப்பாய் தொப்பை வைத்தவர்கள் . நளினமாய் தளுக்காய் நடக்க தெரியாதவர்கள் . கள்ளமின்றி முரட்டுத்தனமாய் பேசி பழகுபவர்கள் . படம் ஓடிக் கொண்டிருக்கும் போதே சத்தமாய் அதற்கு எதிர்வினை செய்பவர்கள் . சாந்தம் பால்கனி அவர்களாலே நிரம்பி இருந்தது . மனைவி , பிள்ளைகளையும் அழைத்து வந்திருந்தார்கள் .

“சாதி இன்று”: புது பரிமாணங்களும் விவாதங்களும்

சாதி தவறானது, அநீதியானது என்கிற சின்ன குத்தல் நமக்குள் உள்ளது. அதனாலே இங்கு சாதி குறித்து வெளிப்படையாக பேச தயங்குகிறோம். ஆனால் நம் நண்பர்களும் சுற்றமும் அலுவலக சகமனிதர்களும் என்ன சாதி என்பதை உன்னிப்பாக கவனிக்கிறோம். ஏனென்றால் சாதி என்றால் அதிகாரம் எனபதில் தெளிவாக இருக்கிறோம். அதாவது சாதியின் ஏற்றத்தாழ்வு வேண்டாம், ஆனால் சாதியின் அடையாளம் வேண்டும் என இன்றைய தலைமுறை நினைக்கிறோம். அதற்கான இனவரைவியல் நியாயங்களைக் கூட அளிக்கிறோம். ஆக ரெண்டுமே சாதியின் அச்சாணிகள்: அதிகாரம் மற்றும் அடையாளம். சாதியை வெறுமனே சமத்துவம் மற்றும் நீதியுணர்வு சம்மந்தப்பட்ட பிரச்சனையாக பார்க்க கூடாது என கோருகிறது “சாதி இனி” எனும் புத்தகம்.

நாயைத் துரத்தும் முயல்

நிஷி எனு முயல் மற்றும் ஷிக்கி எனும் பூனை முயல் நாயை துரத்துவதை பார்த்திருக்கிறீர்களா? என் வீட்டில் நடக்கிறது. மனைவி கறிக்கடையில் வைத்திருந்த ஒரு முயல்குட்டியை இரக்கத்தினால் வீட்டிற்கு வாங்கி வந்தாள். மூன்று மாதம் வயதிருக்கும். வீட்டில் நாய் இருப்பதால் சின்னதாய் ஒரு பயம் எங்களுக்கு இருந்தது. ஆனால் முயலுக்கு இல்லை. அது வந்த அடுத்த நாளே நாயை தன் தாயாக பாவிக்க துவங்கி விட்டது.

மோடியும் இந்தியர்களும்: நமக்கு அறத்தில் நம்பிக்கை இல்லையா?

இன்றைய ஹிந்துவில் “ தீமையின் சகஜத்தன்மை ” ( The Banality of Evil ) என்றொரு முக்கிய கட்டுரை வந்துள்ளது. எவ்வளவு எளிதாக நம்மால் இனப்படுகொலைகள், குற்றங்களை மன்னித்து மோடி போன்றவர்களை முன்னேற்றத்தின் பெயரில் ஏற்க முடிகிறது என இக்கட்டுரை வியக்கிறது. இன்றைய காலத்தின் மிகப்பெரிய துரதிஷ்டம் நமக்கு இப்படியெல்லாம் மோடியை நியாயப்படுத்த தோன்றுவது தான். அதேவேளை இது வெறும் ஒரு காலகட்டத்தின் பிரச்சனை என நாம் சுருக்க முடியுமா என நாம் யோசிக்க வேண்டும். மோடியின் குற்றங்களை மட்டுமல்ல ராஜீவ் காந்தியின் கீழ் சீக்கியர்களை காங்கிரசார் எண்பதுகளின் இறுதியில் வேட்டையாடி கொன்றதையும் தான் எளிதில் மன்னித்து கடந்து விட்டோமே என கட்டுரையாளர் நிஸிம் கேட்கிறார். இங்கிருந்து நாம் விவாத்த்தை துவக்க வேண்டும். ஒருவேளை இந்தியர்களுக்கு அடிப்படையில் நீதி, அறம் மீதெல்லாம் நம்பிக்கையோ ஆர்வமோ இல்லையோ? நாம் அறம் என இன்று நினைப்பது ஒரு ஐரோப்பிய அளவுகோலோ?