முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

எளியவர்களை அடித்து வலியவர்களை தப்பிக்க விடும் திட்டம்

செலவுகள் , நஷ்டம் ஆகியவற்றை கணக்கிட்டு பார்த்து கழித்த பின் ரூபாய் நோட்டு தடையினால் அரசுக்கு கிடைக்கும் லாபம் 58,200 கோடி . ஆனால் 7th pay commission படி அரசு ஊழியர்களுக்கு கொடுக்க வேண்டிய சமபள உயர்வு ஒரு லட்சம் கோடி கூடுதல் செலவை கொண்டு வருகிறது . வங்கிகள் கார்ப்பரேட்டுகளின் வாராக்கடனை தள்ளுபடி செய்ததில் ஏற்பட்ட நஷ்டம் 70,000 கோடி . இது போக நமது பொருளாதாரம் இந்த தடையினால் சந்தித்த பெரும் பின்னடைவு , மக்களுக்கு ஏற்பட்ட சிரமங்கள் , நெருக்கடி ஆகியவற்றை கணக்கிடுகையில் இந்த தடை ஒரு பயனற்ற   கண் துடைப்பு நாடகம் என புரிகிறது .  ஒரு பக்கம் செலவுகளை அதிகப்படுத்துவது , பெருங்கடனாளிகளை தப்ப விடுவது , இன்னொரு பக்கம் கறுப்பு பணத்தை கட்டுப்படுத்துகிறோம் என பாவ்லா பண்ணுவது . சமீபத்தில் கறுப்பு பணம் வைத்திருப்பவர்கள் அதில் 50% அரசுக்கு செலுத்தினால் மீதி பணம் வெள்ளையாகி விடும் எனும் மசோதாவை மைய அரசு கொண்டு வந்துள்ளது . இது கோடிக்கணக்கில் கறுப்பு பணம் வைத்திருப்பவர்களை மறைமுகமாய் தப்ப விடும் மற்றொரு மு...

செக்ஸ் ஒரு சின்ன விசயம் தான்…

”மோகமுள்” நாவலில் யமுனாவுக்காக பல ஆண்டுகளாய் காத்திருந்து இளமையை வீணாக்கி தவித்த பின் பாபுவுக்கு இறுதியில் அவள் மீதான் இச்சை நிறைவேறுகிறது. அவளுடன் கூடிய பின் அவனுக்கு சட்டென தோன்றும் “இது தானா? இதற்காகத் தானா இவ்வளவு ஆண்டுகள் மருகித் தவித்தேன்?” இந்த புணர்ச்சி ஒரு புனிதப்பயணத்தின் போது பாபுவும் யமுனாவும் ஒரு விடுதி அறையில் நிகழ்வதாய் தி.ஜா பொருத்தமாய் அமைத்திருப்பார். ஏனென்றால் பெரும் புனித தேடல்களுக்கு பின்னாலும் நிறைவேறாத காம இச்சை இருக்கிறது. செக்ஸ் ஒரு மிகச்சின்ன விசயம் தான். ஆனால் அது கிடைக்காமல் போகும் போது அது ஒரு தலைவலியாக நம்மை ஆக்கிரமித்துக் கொள்கிறது. அதை தவிர்க்கவே முடியாமல் ஆகிறது. அதை மற்றொரு எரிச்சலாய், உத்வேகமாய், வெறுப்பாய், பல்வேறு நெருக்கடிகளாய் மாற்றும் தேவை ஏற்படுகிறது. நிறைவேறாத இச்சை மனிதனை இரட்டை நாக்கு கொண்டவனாக ஆக்குகிறது. அவன் அடுத்தவர்களின் செக்ஸை கண்காணிக்க துவங்குகிறான். ஒழுக்க காவலன் ஆகிறான். அதிகம் சூடாகி பொங்கும் பால் பாத்திரம் போல் பாசாங்குகளால் நிரம்பி வழிகிறான். ஆனால் செக்ஸ் கிடைத்து விட்டால் அடுத்த நொடியே அவன் அமைதியாகிறான். தெளிவாய் சிரிக்கிறா...

ஜெயலலிதாவுக்கு அஞ்சலி

ஜெயலலிதாவின் வாழ்க்கை சரிதை ஒன்றை பத்து வருடங்களுக்கு முன்பு படித்தேன். அதில் ஒரு காட்சி என் நெஞ்சை விட்டு நீங்காதது. குழந்தையாய் இருக்கும் போது ஜெயலலிதாவுக்கு விமானப்பணிப்பெண்ணாக பணி புரிந்த தன் அத்தை மீது அன்பும் மதிப்பும் அதிகம். தன் வீட்டிற்கு மேல் விமானம் பறந்தால் அவர் ஓடிச் சென்று மொட்டை மாடியில் நின்று பார்ப்பாராம். வளர்ந்த பின் விமானப்பணிப்பெண் ஆக வேண்டும் என அம்மாவிடம் அடிக்கடி கூறுவாராம். எனக்கு ஜெயலலிதா பற்றி யோசிக்கும் போதெல்லாம் மொட்டைமாடியில் நின்று விமானத்தை தலையுயர்த்தி நோக்கி, அங்கே அதில் தன் அத்தை செல்கிறாரா என கற்பனை செய்யும் ஒரு சிறுமியின் சித்திரம் தான் தோன்றும். வானத்தை எட்டிப் பிடிக்கும் அவா பின்னர் அவர் தமிழகத்தின் அதிகார உச்சத்தில் சிம்மாசனமிட்டு அமர செய்தது. சினிமா, அரசியல் ஆகியவை அவர் கனவுகளில் இருந்ததில்லை. இரண்டிலும் பெரும் வெற்றிகள் அவர் வாழ்வில் பிறகு மிக மிக எதேச்சையாய் தான் நிகழ்ந்தன. அவர் வாழ்வில் மேற்தட்டை அடைய வேண்டும், ஒரு வசதியான நவநாகரிகமான ஸ்டைலான வாழ்க்கை வாழ வேண்டும் என ஏங்கியிருக்கிறார். பின்னர் இந்த ஏக்கம் துணிச்சலாய், கட்டற்ற அதிகார, க...

நன்றியும் அன்பும்

நேற்று இரவில் இருந்தே தொலைபேசியிலும், குறுந்தகவல்கள், மெஸஞ்சர் மூலமாகவும் நூற்றுக்கும் மேற்பட்ட நண்பர்கள் பிறந்த நாள் வாழ்த்தினார்கள். பெரும்பாலானோருடன் பேஸ்...

அட்டைப்பட சர்ச்சை

அட்டைப்படம் ஒரு புத்தகத்தின் தரத்தை மேம்படுத்தும் வாசகனின் கற்பனையை சிறகடிக்க வைக்கும் என்பதாக தமிழில் ஒரு கற்பிதம் உள்ளது. உண்மையில் ஒரு நூலின் பிரதிக்கும் அதன் வடிவமைப்பு, அட்டைப்படம் ஆகியவற்றுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. வெண்முரசு நாவல் வரிசைக்கு சண்முகவேல் அற்புதமான ஓவியங்களை நல்கியிருக்கிறார். அதனால் அந்நாவல்களின் ஆழம் அதிகமாகும் என்றோ வாசகர்கள் அப்படங்களை கொண்டு நாவலை கற்பனை செய்வார்கள் என்றோ நான் நம்பவில்லை. முழுக்க ஜெயமோகனின் எழுத்து வழியாகத் தான் வாசகன் தன் கற்பனை உலகை விரித்துக் கொள்ள முடியும். ஒரு படைப்பு மொழிக்குள் ஆரம்பித்து மொழிக்குள்ளே முடிகிறது. அட்டைப்பட ஓவியம் ஒரு தனி படைப்பு.

இன்மை - புது முகவரி

இன்மையை இனி பிளாகாக படிக்கலாம் . Custom domain ஐ நீக்கி விட்டோம் . இப்போதைக்கு இதழ்களை நேரடியாக கிளிக் செய்ய வேண்டாம் . பக்கவாட்டில் உள்ள பகுப்புகளை கிளிக் செய்து நுழைந்து படைப்புகளை படிக்கலாம் . ( இதழ்கள் இன்னும் பழைய முகவரியின் தொடுப்பில் உள்ளன . அவற்றை விரைவில் சீர் செய்து விடுகிறோம் ) நண்பர்கள் ஆசிரியக் குழுவில் இணைந்து கவிதைகளை தேர்வது , தொகுப்பது , பிரசுரிப்பது ஆகிய பணிகளில் உதவினால் இன்மையை தொடர்ந்து நடத்தலாம் . கடுமையான கால நெருக்கடி காரணமாய் என்னாலோ சர்வோத்தமனாலோ மாதாமாதம் இன்மையை கொணர இயலவில்லை . குறைந்தது ஒரு வாரமாவது தினமும் உழைத்தாலே ஒரு இதழை செம்மையாய் கொணர முடியும் . அது இப்போதைக்கு சாத்தியமில்லை . ஒரு இதழ் தொடர்ந்து வெளிவரும் போது அதற்கு என தனியாக புது எழுத்தாளர்கள் உருவாவார்கள் . அவர்களுக்கு இதழ் ஒரு உயிர்நாடியாக அமையும் . இன்மையிலும் அவ்வாறு சில கவிஞர்கள் இயங்கினார்கள் . இன்மையை நின்று போன பின் அவர்களில் சிலர் வேறெங்கும் எழுதாமல் போனது எனக்கு வருத்தமளித்தது . ஆனால் இதழை மு...