செலவுகள் , நஷ்டம் ஆகியவற்றை கணக்கிட்டு பார்த்து கழித்த பின் ரூபாய் நோட்டு தடையினால் அரசுக்கு கிடைக்கும் லாபம் 58,200 கோடி . ஆனால் 7th pay commission படி அரசு ஊழியர்களுக்கு கொடுக்க வேண்டிய சமபள உயர்வு ஒரு லட்சம் கோடி கூடுதல் செலவை கொண்டு வருகிறது . வங்கிகள் கார்ப்பரேட்டுகளின் வாராக்கடனை தள்ளுபடி செய்ததில் ஏற்பட்ட நஷ்டம் 70,000 கோடி . இது போக நமது பொருளாதாரம் இந்த தடையினால் சந்தித்த பெரும் பின்னடைவு , மக்களுக்கு ஏற்பட்ட சிரமங்கள் , நெருக்கடி ஆகியவற்றை கணக்கிடுகையில் இந்த தடை ஒரு பயனற்ற கண் துடைப்பு நாடகம் என புரிகிறது . ஒரு பக்கம் செலவுகளை அதிகப்படுத்துவது , பெருங்கடனாளிகளை தப்ப விடுவது , இன்னொரு பக்கம் கறுப்பு பணத்தை கட்டுப்படுத்துகிறோம் என பாவ்லா பண்ணுவது . சமீபத்தில் கறுப்பு பணம் வைத்திருப்பவர்கள் அதில் 50% அரசுக்கு செலுத்தினால் மீதி பணம் வெள்ளையாகி விடும் எனும் மசோதாவை மைய அரசு கொண்டு வந்துள்ளது . இது கோடிக்கணக்கில் கறுப்பு பணம் வைத்திருப்பவர்களை மறைமுகமாய் தப்ப விடும் மற்றொரு மு...