முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

வாங்க இங்கிலிஷ் பேசலாம் – பாகம் 1

கடந்த மூன்று வருடங்களாய் தினமணி இளைஞர் மணியில் வெளிவரும் “ வாங்க இங்கிலிஷ் பேசலாம் ” தொடரின் நூல் வடிவம் பெறுகிறது . Climate க்கும் Weather குமான வித்தியாசம் என்ன , சென்னை கிளைமெட் வர வர மோசம் என்று சொல்வது சரியா தப்பா , News என்பதை பன்மையில் many news என சொல்வது சரியா , Deluge என்பதை எப்படி உச்சரிப்பது , இப்படியான பல சுவாரஸ்யமான தகவல்களை நூல் கொண்டுள்ளது . எளிய முறையில் ஆங்கிலம் கற்பதற்கும் , புதுப்புது சொற்றொடர்கள் , இலக்கண விதிமுறைகளை அறிவதற்கும் , ஒரு ஆர்வமூட்டும் புனைவாக வாசிப்பதற்கும் இடம் அளிக்கிறது இது .

MeToo – சில விமர்சனங்கள்

சினிமா பிரபலம் சின்மயி துவங்கி இலக்கியவாதி லீனா மணிமேகலை வரை மீ டூவில் புயலை கிளப்பினார்கள் . இந்திய அளவில் சேத்தன் பகத் , நானா படேகர் , விகாஸ் பாஹ்ல் , ரஜத் கபூர் என பலரும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட்டார்கள் . ஒரு பக்கம் சினிமாத் துறையில் பெண்கள் மீதான ஒடுக்குமுறை , அவர்களின் பாதுகாப்பின்மை குறித்த கேள்விகளை மீ டூ இயக்கம் ஒருபுறம் இயக்கியது . அதே நேரம் சமூக வலைதளங்களில் எந்த முறைமையும் இன்றி நடத்தப்படும் மீ டூ கட்டப்பஞ்சாயத்துகளின் பாதகங்கள் , பாதிப்புகள் என்ன ? அறம் என்ன ? 

கணேஷ் சார்

இம்மாத இறுதியில் வெளியாகப் போகும் “வாங்க இங்கிலிஷ் பேசலாம்” நூலின் நான்கு பகுதிகளைப் பற்றி பேராசிரியர் கணேஷ் பேச இருக்கிறார். கணேஷ் சார் எம்.ஸி.ஸியில் நான் முதுகலை ஆங்கிலம் படிக்கும் போது எனது பேராசிரியர். தற்போது அவர் அங்கு துறைத்தலைவர்.

“மீ-டூ – சில விமர்சனங்கள்” – நூல் வெளியீடு

நண்பர்களே! இம்மாதம் 29 இல் தேவநேய பாவாணர் அரங்கில் வெளியாகும் எனது மற்றொரு நூல் “மீ-டூ – சில விமர்சனங்கள்”. கடந்த இரு மாதங்களில் மீ-டூ சர்ச்சை தலைவிரித்தாடிய சந்தர்பங்களில் நான் தொடர்ந்து அது குறித்து எனது மாற்றுப் பார்வையை வெளியிட்டு வந்ததை அறிவீர்கள். எனது பிளாகிலும், மின்னம்பலம், தீராநதி ஆகிய இதழ்களிலும் தொடர்ந்து எனது விமர்சனங்களை பிரசுரித்தேன். இந்த இயக்கம் ஆண்-பெண் பிளவை அதிகப்படுத்துவதாக, வெறுப்பு அரசியலை முன்னெடுப்பதாக, மறைமுக ஒழுக்கவாதத்தை முன்னிலைப்படுத்துவதாக, கும்பல் மனப்பான்மையையும், விசாரிக்காமல் ஆராயாமல் ஒருவரை கரும்புள்ளி செம்புள்ளி குத்தும் ஆவேசத்தையும் ஊக்குவிப்பதாக எப்படி செயல்படுகிறது, இந்த சிக்கல்களின் அரசியல்-பண்பாட்டு வேர்கள் என்ன என இந்நூலில் விவரித்திருக்கிறேன்.

வாங்க இங்கிலிஷ் பேசலாம் - நான்கு நூல்கள் வெளியீடு

நண்பர்களே! இம்மாதம் 29 இல் தேவநேய பாவாணர் அரங்கில் எனது “வாங்க இங்கிலிஷ் பேசலாம்” நூலின் நான்கு பகுதிகளும் வெளியாகின்றன. வாங்க சந்திப்போம்!

செல்பி புள்ளயின் உளவியல்

எங்கள் பல்கலைக்கழகத்தில் ஓர் ஆய்வரங்கில் என் நண்பரான மெல்ஜோ எனும் ஆசிரியர் ஒரு கட்டுரை வாசித்தார். தற்படங்கள் இன்று ஒரு சமூக சுயமாக, தன்னிலையாக மாறிவருகிறது என்பதே அவரது கருதுகோள். அதாவது, நாம் ஒவ்வொருவரும் சமூக அங்கீகாரத்துக்காகத் தற்படங்களை எடுத்துச் சமூக வலைதளங்களில் வெளியிடுகிறோம். இது மிகையாக மாறும்போது தற்பட விரும்பிகளுக்குச் சமநிலை குலைகிறது. பல எடிட்டிங் ஆப்கள் மூலம் தம் தோற்றத்தை மெருகேற்றிப் பொய்யான பிரதியை அவர்கள் வெளியிடுகிறார்கள். இதற்கு விருப்பக் குறிகள் அதிகமாக ஆக, உண்மைக்கும் பொய்க்கும் இடையே இடைவெளி அதிகமாகிறது. ஒரு நண்பர் இதை வேறுவிதமாய் முன்வைத்தார். நாம் அனைவரும் ஒரு குறிப்பிட்ட உடல் தோற்றத்தை மரபியல் ரீதியாய்ப் பெற்றிருக்கிறோம். இத்தோற்றத்தோடு உடன்பட முடியாமல் போகும்போது, மாற்று சுயத்தைக் கற்பிக்கும் வண்ணம் நாம் தற்படங்களை எடுத்து வெளியிடுகிறோம்; அதைச் சமூக வலைதளங்களில் நண்பர்கள் அங்கீகரிக்கும்போது புளகாங்கிதம் அடைகிறோம் என்றார்.

ஹீரோவாகும் இயக்குநர்கள்: கட்டியங்காரன் மனப்பான்மை (5)

கட்டியங்காரன் பாடி பார்வையாளர்களை கட்டிப் போடுகிறான் , வேடிக்கையாய் பேசி சிரிக்க வைக்கிறான் . ஆக இந்த மரபு வழி வரும் நாம் நம்மையறியாமலே இயக்குநர் , இசையமைப்பாளர் , பாடகர்கள் மற்றும் நகைச்சுவையாளர்களை கதைசொல்லி எனும் ஒருவரது பல வடிவங்களாக காணத் துவங்குகிறோம் – நாயகனுக்கு இணையாகவும் இவர்கள் மாறுகிறார்கள் . கட்டியங்காரன் எடுக்கும் பல தோற்றங்களாகிறார்கள் இவர்கள் . நமது தமிழ் சினிமாவில் கூத்தின் தாக்கம் வலுவாக இன்னும் உள்ளதற்கு இந்த இயக்குநர்கள் துவங்கி இசைக்கலைஞர் , விதூஷகன் வரையிலானவர்களின் நாயக பரிணாமம் ஒரு அத்தாட்சி .