முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

என்னுடைய சிறுகதை ஆங்கிலத்தில்

  என்னுடைய "மாடிப்படிகள்" சிறுகதை பேராசிரியர் ப. மங்களம் அவர்களால் நேர்த்தியாக ஆங்கிலமாக்கப்பட்டு Literary and Cultural Disability Studies: A Primer எனும் தொகைநூலில் சேர்க்கப்பட்டுள்ளது. அதில் என்னுடைய புனைவெழுத்து குறித்த அலசலும் மங்களம் அவர்களால் எழுதப்பட்டுள்ளது. அவருக்கு என் நன்றியும் அன்பும்.

"நாவல் வகுப்பு 2025" - ஜூலை-ஆகஸ்டில்

  நீங்கள் ஒரு கவிஞராகவோ சிறுகதையாளராகவோ சமூகவலைதளப் பதிவராகவோ இருக்கலாம். மனத்தில் வரும் எண்ணங்களை, உணர்வுகளை, பிம்பங்களை உங்களால் சொற்களில் வடிக்க முடியுமெனில் உங்களால் நாவல் எழுதவும் முடியும். எல்லார் இதயத்துள்ளும் ஒரு நாவல் உண்டு, ஆனால் அது அங்கே இருப்பதுதான் நல்லது என கிறிஸ்டபர் ஹிட்சன்ஸ் சொன்னார். ஆனால் ஒரு படைப்பாளிக்குள் புதைந்திருக்கும் படைப்பை அடையாளம் கண்டு, அதை நெறிப்படுத்த வகுப்புகளும், தகுதியான ஆசிரியரும் உதவ முடியும். என்னுடைய நாவல் வகுப்பில் சேர்ந்து மூவர் தம் நாவல்களை முழுமையாக முடித்திருக்கிறார்கள். இரண்டு நாவல்கள் பிரசுரமாகி உள்ளன. மேலும் பலர் 50% மேல் எழுதியிருக்கிறார்கள். இரு மாத காலத்திற்கு இது கவனிக்கத்தக்க சாதனை. உங்களில் எதிர்கால நாவலாசிரியர்கள் உண்டெனில் ஜூலை-ஆகஸ்டில் நிகழவிருக்கும் என் ஆன்லைன் வகுப்பில் இணையுங்கள். தொடர்புக்கு 9790929153 எண்ணில் வாட்ஸாப் பண்ணுங்கள். அல்லது இன்பாக்ஸில் தொடர்பு கொள்ளுங்கள்.

கண்கள் - ஆர். அபிலாஷ்

  கடும் தலைவலியினூடாக அவனுக்குத் தோன்றியது கண் மருத்துவர்   சுமாராகத்தான் இருக்கிறார் என்று . அறை இருட்டு . பல்லைக் கடித்து முனகும் ஏஸி எந்திரம் . ரத்தம் வடிந்த தம் வெளிறி உடலின் வழியாக ஆன்மாவைப் பாய்ச்சும் நீள்சதுரக் குழல் விளக்குகளின் ஆத்ம தரிசனம் . வலி தன் மீது   ராட்சதத் துளை தோண்டும் எந்திரத்தைப் போல இறங்கி பூமிக்குள் பாய்வதாக அவனுக்குத் தோன்றியது . சுற்றிலும் வெளிச்சச் சிறகுகள் பறக்க அமானுஷ்ய தோற்றங்கள் . மரணம் நெருங்கிவிட்டதாகவும் அன்றாடத்தின் துன்பங்களில் இருந்து விடுதலை கிடைக்கப் போகிறதென ஒரு நம்பிக்கை , அதைக் குறித்த அவநம்பிக்கை அடுத்து , தப்பிக்கவே முடியாது எனும்   எச்சரிக்கை சமிக்ஞைதான் இவ்வலி . அம்மாவின் கையில் இருந்து பறிக்கப்படும் குழந்தையின் கதறல்கள் . அம்மாவிடம் செல்வதே   முழுமையான நிம்மதியான துயில் . கண்மருத்துவர் மீண்டும் அவனைத் தனது மோவாவை சிறிய வளைவான தட்டில் வைத்து நேராகப் பார்க்கக் கேட்டார் . அவர் தன் காதை கவனிக்கச் சொன்னார் . இடக்காது . உருகிய சுடர் . இருளைத் திரையென அ...