தமிழ்நாட்டு பட்ஜெட் கிட்டத்தட்ட ஒரு தேர்தல் அறிக்கையைப் போலவே உள்ளது. பல்வேறு கனவுத்திட்டங்கள், நனவுலகுக்கு வருவதற்கன நிதி ஒதுக்கீடு இல்லாத நிலை. அதுவும் முழுக்க முழுக்க சோ கால்ட் சமூக நீதித் திட்டங்களை வைத்து காதில் பூ சுற்றியிருக்கிறார். இவ்விசயத்தில் விஜய்க்கும் வேறு சில மாநில முதல்வர்களுக்கும் உள்ள ஒற்றுமையைக் குறிப்பிட வேண்டும்: சில மாநிலங்கள் மட்டுமே இன்று வளர்ச்சிக்கான திட்டங்களை வகுக்கிறார்கள். ஒன்றிய அரசு கூட சமூக நீதி எனும் பெயரில் ஏழைகளுக்கு ஆறுதல் உதவித் தொகைகளை பல்வேறு வழிகளில் கொடுத்து ஆறுதல்படுத்தவே செய்கிறது. ஏனென்றால் இன்னொரு பக்கம் பணவீக்கமும் வேலையின்மையும் அதிகரித்துக் கொண்டே போகின்றன. கட்சிகள் தம்மை நிலைப்படுத்திக் கொள்ளவும் தேர்தலில் தப்பிப் பிழைக்கவும் தங்க மோதிரம் தருகிறேன், பத்து சிலிண்டர் தருகிறேன், பைக் வாங்கித் தருகிறேன் என்று என்னென்னமோ ஆசை காட்டிக் கொண்டே ஆட்சிக்கு வருகின்றன. தவெகவின் தேர்தல் வாக்குறுதிகளைக் கேட்டால் தலைசுற்றுகிறது. தமிழ்நாட்டுடன் பத்து மாநிலங்களின் நிதியைச் சேர்த்தால் மட்டுமே அவற்றை நிறைவேற்ற முடியும். பட்ஜெட்டிலும் இவ்வாக்குறுதிகளி...