முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

குறும்பட விமர்சனம்: அதிர்ஷ்டம் ஐந்து கிலோமீட்டரில்

அதிர்ஷ்டம் 5 km-இல் மிக நம்பிக்கையூட்டக் கூடிய ஒரு இயக்குனரை நமக்கு அறிமுகப்படுத்துகிறது: ஸ்ரீராம் பத்மநாபன் (D.F.Tech). ஸ்ரீராமுக்கு ஒரு கதையை தொய்வில்லாமல் சொல்லத் தெரிகிறது. நடிக்க வைக்க முடிகிறது. காட்சிபூர்வ நுண்ணுணர்வு உள்ளது. முக்கியமாய் அவருக்கு ஒரு இயக்குனருக்கான அசலான தேடல் உள்ளது. எந்த பாசாங்கும் இல்லாமல் வாழ்க்கை குறித்த தனது கண்ணோட்டத்தை முன்வைக்கிறார். படத்தின் தலைப்பு ஒரு திகில் படத்தை எதிர்பார்க்கச் செய்யலாம். மிக இயல்பாகவே ஒரு எதிர்பார்ப்பு இழை படம் முழுக்க ஓடினாலும் இது திகில் படம் அல்ல. வைதீஸ்வரன் எனும் ஒரு சராசரி மனிதன் சைக்கிள் ஓட்டியபடியே தன் வாழ்வை அசை போடுகிறான். வாழ்க்கையை மீள்நோக்க பயணம் எப்போதும் ஒரு சிறந்த படிமமாக பயன்படுவது. அவன் ஒரு கடிதத்தை தபாலில் சேர்க்க சென்று கொண்டிருக்கிறான். அந்த கடிதத்தின் நோக்கம் பிற்பாடு வருகிறது. முதலில் அவனைக் குறித்த அறிமுகம். தொடர்ந்து அதிர்ஷ்டத்தால் அலைகழிப்படுபவன். பெண்கள் விசயத்தில் ராசியே இல்லை. பள்ளியில் பக்கத்து இருக்கை பெண்ணில் இருந்து ஆசிரியை வரை துன்புறுத்துகிறார்கள். இப்போது மனைவியும். படிப்பிலும் ஒரு தற்குறியே. மள...

குறும்பட விமர்சனம்

கூடு இணைய இதழுக்காக இளைய இயக்குனர்களின் குறும்படங்களை அறிமுகப்படுத்தி விமர்சித்து வருகிறேன். இம்முறை மூன்று படங்கள். காத்து ... காத்து சிவசங்கர் இயக்கி உள்ள காத்து ... காத்து ஒரு அரசியல், பொருளாதார விமர்சனப் படம். ஒரு எளிய கதை: ஒரு சிறுவன் தனக்கு கிடைக்கும் காசை முதலீடு செய்கிறான். எப்படி? சத்தியமாக நீங்கள் நம்ப மாட்டீர்கள். அவன் ஒரு முட்டை வாங்கி அதன் மீது அடை இருக்கிறான். பாரம் தாங்காமல் முட்டை உடைய திரும்பவும் அதை முயன்று ஏமாற்றம் அடைகிறான். படத்தின் ஆரம்பத்தில் சக்கரவர்த்தி எனும் பொருளாதார நிபுணரின் கருத்து காட்டப்படுகிறது: இந்தியாவின் ஐந்து ஆண்டு திட்டம் வறுமையை ஒழிக்க தவறி விட்டது. தமிழ் சினிமா வெளி பெரும் அரசியல் வறட்சியை கொண்டுள்ள சூழலில் இது கருத்தளவில் ஒரு சுவாரஸ்யமான முயற்சி. ஆனால் காட்சிபூர்வமாய் சிவசங்கர் தன் திறன்களை மெருகேற்ற வேண்டும். ஒரு உச்சபட்ச காட்சிக்கான தயாரிப்பு காட்சிகளை எதிர்பார்ப்பு உருவாக்கும் படி வளர்த்து எடுப்பது குறும்படங்களுக்கு தேவையான முக்கியமான நுட்பம். சுருக்கமாகவும் சுவாரஸ்யமாகவும் மைய காட்சிக்கு பார்வையாளனை அழைத்து செல்ல தெரிய வேண்டும். ஆனால் ’காத்த...

கதை சொல்ல வாழ்கிறேன் (மார்க்வெஸ்): அத்தியாயம் 16

இது ஒரு திங்கட் கிழமை அன்று நடந்தது. அடுத்து வந்த வாரத்தில் செவ்வாய் கிழமையின் போது, மதிய தூக்க வேளையில், நான் என் நண்பர்களிலேயே மூத்தவரான லூயி கார்மெலோ கொரியாவுடன் பம்பரம் விட்டு கொண்டிருந்த போது பொழுதாகும் முன்னரே தூங்குபவர்கள் எழுந்து ஜன்னலில் இருந்து எட்டிப் பார்ப்பது கண்டு நாங்கள் வியந்தோம்.

பூனையும் காலசக்கரமும்

காலத்துக்கு உதடுகள் உண்டென்றால் அவை சதா புன்னகைத்தபடியே இருக்க வேண்டும். மாற்றங்களின் வீச்சில் அத்தனை வேடிக்கைகள். மனித வரலாற்றில், உங்களது எனது அன்றாட வாழ்வில் இதற்கு எண்ணற்ற உதாரணங்கள் உண்டு. எனினும் ஒரு மாற்றத்துக்கு பூனையிடம் இருந்து ஒரு கதை சொல்கிறேன். எங்கள் வீட்டில் இரண்டாவது பூனை வந்த போது ஏற்கனவே ஒரு முதல் பூனை இருந்திருக்கும் என்பதை இதை படித்து முடிக்கும் முன்னரே ஊகித்திருப்பீர்கள். முதல் பூனை நாட்டு வகை. ஐந்தரை அடி உயர மனிதனின் முழங்கை அளவு நீளம். சராசரி உயரம். பூனை 2 நாலே வாரங்கள். பெண்களின் கைக்குட்டையை கசக்கி வைத்தது போன்ற தோற்றம். நாங்கள் பயந்தது போன்றே பூனை 2 வந்ததும் மூத்ததுக்கு பயங்கர கோபம். குட்டியை நாங்கள் பொத்தி பொத்தி காக்க வேண்டி இருந்தது. அறைக்குள் சதா பூட்டி வைத்தோம். ஆனால் பூனை 1 பல்லைக் காட்டி பாம்பு போல் ஓசை எழுப்பி சீறியது. பார்க்கும் போது எல்லாம் பாய்ந்தது. குட்டிப் பூனைக்கோ மூத்த பூனை தன் தாயை நினைவூட்டி இருக்க வேண்டும். ஆசையாக அருகில் சென்று கடியும் பிறாண்டல்களும் பெற்றது. குட்டிப் பூனை சாப்பாட்டுக் கிண்ணம் அருகே சென்றால் மூத்த பூனை துரத்தியது. கார்ட்போர...

பிராந்தியவாதமும் ஐ.பி.எல்லின் கலப்புமணமும்

ஏப்ரல் 2010 உயிர்மையில் வெளியாகி உள்ள கட்டுரை வினோத பார்வையாளர்கள் முதல் ஐ.பி.எல் ஆரம்பிக்கும் முன் அதன் செய்தியை சொல்லும் விதம் அறிமுகமான விளம்பரங்கள் ரசிகர்களின் பிராந்திய அடிப்படையிலான போட்டி மனப்பான்மையை முன்வைப்பதாக இருந்தன. ஐ.பி.எல் தன் வளர்ச்சிப்படிகளை கடந்த பின் அத்தகைய விளம்பரப் போக்கு கைவிடப் பட்டது. ஐ.பி.எல் அனைத்து தள மக்களுக்குமான ஒரு கேளிக்கையாக அறைகூவப்படுகிறது. ஐ.பி.எல் மூன்றாவதன் சென்னை×டெக்கான் ஆட்டம் சென்னையின் நடந்தது. இப்போட்டியில் சென்னை ஆரம்பம் முதலே ரிவர்ஸ் கியரில் சென்று கொண்டிருந்தது. பொதுவாக தாயக அணியின் ஆட்டம் தோல்வியை நோக்கி செல்லும் போது உள்ளூர் விசிறிகள் மிக அமைதியாக அதிருப்தி காட்டுவார்கள். ஆனால் இந்த ஐ.பி.எல் ஆட்டத்தில் உள்ளூர் ரசிகர்கள் முடிந்தவரை கொண்டாடி விடும் மனநிலையில் தான் இருந்தனர். தொடர்ச்சியான சலசலப்பும் தாவலும் கைதட்டலும் சொந்த ஊர் அணியின் நிச்சய தோல்வி தெரிந்து விட்ட பின்னரான ஜீவனில்லா ஓவர்களிலும் தொடர்ந்தது. இவர்கள் சற்று வினோதமான பார்வையாளர்கள்.

செல்லப் பிராணி வளர்த்தல்: ஒரு மேக்ரோ குடும்ப பயிற்சி

சின்ன வயதில் எல்லாருக்கும் ஏதாவது பிராணிகள், பறவைகள் அல்லது ஒரு பூஞ்செடி ஏனும் வளர்த்த அனுபவம் இருக்கும். வளர்ந்து வரும் ஒரு குழந்தைக்கு தனக்கென ஒரு குடும்பத்தை (ஒரு மேக்ரோ சமூகத்தை) கட்டியெடுப்பும் உந்துதல் இயல்பாகவே ஏற்படுகிறது. சிறுவயதில் இதற்காக நாம் ஈடுபடும் பல்வேறு நடவடிக்கைகளில் ஒன்று இப்படி செல்ல உயிர்களை வளர்த்து உருவாக்குவது; குழந்தைப் பருவத்தில் நமக்கு பிராணிகளை வளர்க்கும் மனமுதிர்ச்சி போதாது என்னும். இது வெறுமனவே அன்புக்கான ஒரு வடிகால் மட்டும் அல்ல. செல்ல உயிர்களை வளர்ப்பவர்கள் அனைவரும் பிறழ்வு மனப்பான்மை கொண்டவர்கள் என்ற ஜெயமோகன் போன்றவர்களின் கருத்து சரியானது அல்ல. தன்னந்தனியானவர்களுக்கும், கைவிடப்பட்டவர்களுக்கும் செல்லப்பிராணிகள் குடும்ப உறுப்பினருக்கு பதிலியாக இருப்பதும் உண்மைதான் என்றாலும் இதனை பொதுமைப்படுத்துவது ஆரோக்கியமானது அல்ல. உதாரணமாக் என் நண்பன் ஒரு நாய்ப் பிரியன். சதா அவன் நாயோடு விளையாடி நாயோடி உறவாடிக் கொண்டிருப்பது கண்டால் உடனே அம்மா சொல்வாராம்: ”ஒரு கல்யாணம் பண்ணிக் கொண்டு குழந்தை குட்டி பெற்றுக் கொள் என்றால் கேட்டால் தானே. எப்போ பார்த்தாலும் இந்த சனியனோடு...

நோய்மை: விழிப்புணர்வின் பாரம்

சர்க்கரை உபாதைக்கு கணையம் பாதிப்பு ஒரு முக்கிய காரணம். ஆனால் இந்த தகவல் யுகத்தில் மிதமிஞ்சிய விழிப்புணர்வு கணைய சிதைவை விட அபாயகரமானது. நீரிழிவின் பாதக விளைவுகள் குறித்து ஏராளமான தகவல்கள் இன்று கிடைக்கின்றன. நீரிழிவு கால் பாதத்தில் இருந்து மூளை வரை பல்வேறு உறுப்புகளை பாதிக்கக் கூடியது குறி விறைப்பை கூட அது விட்டு வைப்பது இல்லையாம் ... சர்க்கரை உபாதையை கட்டுப்படுத்த அது குறித்த அறிவை விருத்திப்படுத்துவது நல்லதா? ஏனென்றால் எய்ட்ஸுக்கு அடுத்து வேறெந்த உடல் கோளாறையும்\ நோயையும் விட அதிக விழிப்புணர்வு பிரச்சாரம் நீரிழிவுக்கு தான் செய்யப்படுகிறது. நமது தலைமுறையினரில் உழைப்பாற்றல் மிக்க இளைஞர்களில் பலரை இக்கோளாறு மிக வேகமாக தாக்கி அழித்து வருவது இதற்கு ஒரு முக்கிய காரணம். அடுத்த காரணம், நீரிழிவாளர்கள் சாமியார்களை விட அதிக சுயகட்டுப்பாடுகளுடன் வாழ வேண்டியிருப்பது. நீரிழிவு பற்றி நாம் கேள்விப்படும் செய்திகளில் மிக சுவாரஸ்யமானது இது தான். தனது ரத்த சர்க்கரையின் அளவை நீரிழிவாளர் அடிக்கடி அறிந்து கொள்வது முக்கியம் என்று கருதப்படுகிறது. இதனை சுயமாக தெரிந்து கொள்ள Acucheck போன்ற கையளவு கிளைக்கோமீட்...