முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஒரு கத்தியின் அம்மணம்

ஒரு கத்தியை போல் பூமிக்குள் மறைத்துக் கொள்ள வேண்டும் என் உடலை

நிழல்

என் நீண்ட நாள் தோழியும் வகுப்புத் தோழியுமான ஆஷாவின் அம்மா இறந்து போன சேதி அறிந்ததும் எனக்கு அதிர்ச்சியோ வருத்தமோ ஏற்படவில்லை. இந்த செய்தி ஆஷாவை எந்த அளவுக்கு சிதைத்து பிழியப்போகிறது என்பதை கற்பனை செய்து பார்த்தும் கூட என் மனசை எந்தவொரு துக்க அலையும் புரட்டிப் போடவில்லை. எத்தனையோ வருடத்து நெருங்கிய நண்பர்களாய் இருந்தும் அவளது அம்மாவின் மரணம் என் மனதின் நரம்புகளை புடைத்து வீங்க செய்யாமல் வேகமாய் ஓடிக் கலந்தது ஏதோ ஒரு விதத்தில் என்னை நெருக்கி பிசைந்தவாறிருந்தது. இது சார்ந்த சுயபரிசீலனையில் ஆழ்ந்து பயணித்தவாறே வகுப்பறையை அடைந்து விட்டிருந்தேன்.

ஒரு பரிசு

1 குணா வீட்டுக்குள் நுழைந்ததும் வெம்மையை உணர்ந்தான். திரைகளை விலக்கி காற்றை நுழைய விட்டான். உஷ்ணத்தில் திரைகள் விம்மின. அவன் கற்பனையை அது பலவிதங்களில் கிளர்த்தியது. குடியிருப்புக்கு வலமாய் ரயில் தண்டவாளம். அதை சைக்கிள் , பைக் , கால்கள் தயக்கமின்றி குறுக்கிட்டன. ஒரு குழந்தை தண்டவாளத்தில் இருந்து எழுந்திருக்க மாட்டேன் என்று அடம் பிடித்தது. அப்பா மன்றாடி வலுக்கட்டாயமாக தூக்க முயன்று இடுப்பில் வைத்ததில் அது பொத்தென்று விழுந்தது.   நழுவி குதித்ததோ ? ரயில் சைரன். மக்கள் தண்டவாளத்தை சுற்றி கூடினர். குணா திரையை மூடினான்.

ஒரு மழை முடிந்த நாளில்

ஈரமும் சகதியும் சிதறும் வாகன சக்கர சாக்கடையும் மிச்சமுள்ள மழைத்துளிகளும் அடையாளமாகிய இந்நாட்களில் நாங்கள் வீட்டில் அமர்ந்தபடி சதா கொசுக்களை பற்றி எச்சரிக்கையுணர்வுடன் இருக்கிறோம்

இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம்: நான்கு கேள்விகள்

தோனியின் உடல் மொழி தோல்விமனப்பான்மையை காட்டுகிறது. உண்மையா? உண்மை தான். இதற்கு மூன்று காரணங்கள் தோன்றுகிறது. தோனி என்றைக்குமே உணர்ச்சிவசப்பட்டு வெளிப்படையாக ஆதரவு காட்டும் அல்லது கண்டிக்கும் அணித்தலைவர் அல்ல. இந்தியா தொடர்ந்து வெற்றி பெற்று வந்த போது அவரது இந்த அடக்கமும் அக்கறையின்மையும் தான் போற்றப்பட்டன. இப்போது நாம் ஒரு தோதான காரணம் கிடைக்காததால் அதே பாராட்டிய பண்புகளையே குறைகளாக முன் வைக்கிறோம்.

ல‌ஷ்மி மணவண்ணனின் “அப்பாவை புனிதப்படுத்துதல்”: அதிகாரம் எனும் சதுரங்க விளையாட்டு

ல‌ஷ்மி மணிவண்ணன் கவிதைகளை உணர்வெழுச்சிகளால், உருவகங்கள், உவமைகள், குறியீடுகளால், தர்க்கத்தால், எளிய சித்தரிப்புகளால் சீராக கட்டி எழுப்புவதில்லை. ஒட்டுமொத்தமான ஒரு தரிசனத்தை, புதிய கண்ணோட்டத்தை, கண்டுபிடிப்பை தர அவை முனைவதில்லை. ல‌ஷ்மியின் கவிதைகளில் நாம் காண்பது கூர்மையான அவதானிப்புகள், குறிப்பாய் அதிகாரம், கலாச்சார அரசியல், பிம்பங்கள் நம் மனப்பரப்பில் ஏற்படுத்தும் குழப்பம், விழுமியங்களும், அறமும் அதிகாரக் கருவிகளாதல் பற்றியவை.