முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பெண்களைப் பற்றி மட்டுமான கதை (பகுதி 2)

விநோத்தின் மனைவி சுமதியும் ஒரு இலக்கிய வாசகி தான் . அவள் பொதுவாக என்னிடம் எனக்குப் பிடிக்காத சக எழுத்தாளர்களின் கதையைப் பற்றி சிலாகித்துப் பேசுவாள் . என்னைப் பார்த்ததும் வேண்டுமென்றே அப்படி செய்கிறாளா அல்லது அவளுக்கு எதேச்சையாகவே அப்படி வருகிறதா என தெரியவில்லை . ஏதோ என் சகஎழுத்தாளனை என்னிடம் புகழ்ந்தால் நான் மனமகிழ்ந்து போவேன் என அவளுக்குள் ஒரு தவறான மனக்கணக்கு . இதற்கு பேசாமல் என்னை அசிங்கமாக திட்டி விட்டுப் போகலாம் . இது அவளுக்கு புரியவில்லை . சுமதி எனக்கு இட்லி வைக்கும் போதும் நான் டி . வி பார்க்க அமரும் போதும் அறிவார்த்தமாக ஏதாவது பேசுவாள் . “ ஏ ஆண்சமூகமே !” என்று தான் அவளது பேச்சுகளின் தொனி இருக்கும் .

பெண்களைப் பற்றி மட்டுமான கதை (பகுதி 1)

  சில வாசகர்கள் இருக்கிறார்கள் . ஒரு சின்ன குழந்தை ஒரு பிளாஸா அல்லது மால் வாசலில் மிக்கி மௌஸ் வேடம் போட்டு நிற்பவனை வீட்டுக்கு அழைத்து வர வேண்டும் என அடம் பிடிப்பது போல அவர்கள் எழுத்தாளனை தம் வீட்டுக்கு அழைத்து வந்து கூடவே பராமரிக்கிறார்கள் . அல்லது சற்று அருகாமையில் இருத்தி கவனித்துக் கொள்கிறார்கள் . அல்லது சற்று தொலைவில் வைத்து சமாளித்துக் கொள்கிறார்கள் . வினோத் என்னை அப்படித்தான் தன் வீட்டுக்கு அழைத்து வந்தான் . வினோத்துக்கு நான் பாதி நண்பன் , பாதி எழுத்தாளன் , கால்வாசி ஆலோசகன் , கால்வாசி மனிதன் . சிலரிடம் என்னை அண்ணன் என்று அறிமுகப்படுத்துவான் . சிலரிடம் நான் வேலை தேடிக் கொண்டிருக்கிறேன் என சொல்லுவான் . என்னிடம் கேட்டால் அவனை எப்படி அடையாளப்படுத்துவேன் எனத் தெரியாது .

மலக்குழி சாத்தான் (பாதி சிறுகதை)

காலை மூன்று மணிக்கே எழுந்து விட வேண்டும். அப்போது தான் காலைக்கடன்கள் முடித்து பால் கறக்க வரும் சம்முகத்துடன் இருந்து பாலை வாங்கி கடைக்கும் வீடுகளுக்கும் கொடுத்து விட்டு திரும்ப வந்து தொழுவத்தில் சாணி அள்ளி சுத்தம் செய்து கஞ்சு குடித்து பள்ளிக் கூடம் போக நேரம் சரியாக இருக்கும்.  விடிகாலையின் ஒளி என் கண்ணுக்கு வெகுபரிச்சயமானது. நீலமும் சிவப்பும் இருளில் ஊறி இறங்கும் ஒளி. எங்கள் புழக்கடை தோட்டம் பூரா பலவகை மரங்கள். பூக்களும் கனிகளும் அடர் இலை கொப்புகளும் படர்ந்த ஒரு முகப்பு. அதைக் கடந்து வானை சிறு சிறு நட்சத்திர ஜொலிப்புகளாக இடையிடையே மட்டுமே பார்க்க முடியும். மழைக்காலம் என்றால் சேற்றில் மிதித்து நடந்து தவளை கத்தல்களிடையே மௌனமாய் எடுப்பு கக்கூஸ் எனும் அந்த மதில் விளிம்பில் உள்ள குழியருகே குத்திட்டு அமர எனக்கு பிடிக்கும். சாப்பிடுவது, சொக்கி வரும் போது தூங்குவது, ரகசியமாய் கனவில் உள்ளாடை நனைப்பது போல இதுவும் ஒரு சுகமான காரியம் தான். நாற்றம் தான். அதற்கு ஒரு சிகரெட் பற்ற வைப்பேன். பிறகு எனக்கு நானே ஏதாவது ஒரு கதை சொல்ல ஆரம்பிப்பேன். கார்ட்டூன் சாகசங்களும், மாந்திரகமும், பிடித்தம...

ஒரு ஆடையின் நாள்

ஒரு பிரத்யேகமான ஆடையை அணிந்தேன் இன்று. ஒரு அரசியல் தலைவரை நினைவுபடுத்துவதாய் சொன்னாள் மனைவி. ஆர்வமாகி பல்வேறு கோணங்களில் பாவனைகளில் செல்போனில் படம் பிடித்துக் கொண்டேன்.

ரசிகன் வெளியீடு

இன்று கவிக்கோ மன்றம் அரங்கில் நடந்த வெளியீட்டில் “ரசிகன்” நாவலை வெளியீட்டு பேசின அழகிய பெரியவன் அது இவ்வருடம் வெளியாகும் சிறந்த நாவல்களில் ஒன்று எனக் கூறினார். எனக்கு மகிழ்ச்சியாகவும் கூச்சமாகவும் இருந்தது. புத்தகத்தின் நிறைகுறைகளை சுட்டிக் காட்டி அழகாக அவர் பேசினது நிறைவாக இருந்தது.  நிகழ்ச்சியில் புத்தகம் வெளியாகும் ஒவ்வொரு எழுத்தாளனிடம் இரண்டு கேள்விகளை கேட்டது ஒரு நல்ல சேர்க்கையாக இருந்தது. அது நிகழ்ச்சியை கலகலப்பாக்கி புதுப்பித்தது. என்னிடம் தொகுப்பாளினி “உங்கள் வாசகர்கள் யார்?” எனக் கேட்டார். “என் வாசகர்கள் யார் என எனக்கு உண்மையிலேயே தெரியாது” என்றேன். எனக்கு அப்படியான குழப்பம் எப்போதுமே உண்டு. வாசகர்கள் அவ்வாறு தொகுக்க முடியாத அடையாளம் கொண்டவர்கள் தாம். வாசகர் வட்டம் அமைத்து அவர்களை கார்ப்பரேட் சாமியார்களின் சீடர்கள் போல் பழக்கி ஒரு தனிகுணம் கொண்டவர்களாக மாற்றலாம். ஆனால் எப்படி ஒரு காலத்தில் உண்மையான வாசகன் விலகிப் போய் இன்னொரு அடையாளம் பெற்று விடுவான்.

ஆறாவடு: ஷோபாசக்தியும் சயந்தனும்

சயந்தனை ஷோபாசக்தியின் குட்டித்தம்பி என்று சொல்லலாம். ஒரே உலகம். ஒரே பார்வை. நாவலின் கதைக்களனும் மையப்பாத்திரமும் கூட கிட்டத்தட்ட ஒன்று தான். ஈழப் போர். ஒரு பக்கம் புலிகளும் இன்னபிற சிறு போராட்ட குழுக்களும். இன்னொரு பக்கம் சிங்கள ராணுவம். இடையில் அரசியலற்ற ஒரு மக்கள் திரள். அவர்கள் இலங்கைப் படை மற்றும் போராட்ட குழுக்கள் மத்தியில் மாட்டிக் கொண்டவர்கள். ஆற்றில் ஒழுக்கில் இழுத்துக் கொண்டு போகப்படும் மரத்துண்டை போன்றவர்கள்.

புத்தக விலையின் இரு சிக்கல்கள்

புத்தக விலையை ஏன் குறைக்கக் கூடாது என்பது பற்றி ஒரு சர்ச்சை பேஸ்புக்கில் பரவலாக நடந்து கொண்டிருக்கிறது. இது ஒரு முடிவற்ற விவாதமாக தோன்றுகிறது. ஏனென்றால் இரண்டு எதிர்முனைகளில் இருந்து ஆட்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஒன்று லட்சியத்தின் முனை. இன்னொன்று வணிகத்தின் முனை. எந்த புறச்செயலும் நிகழ இரண்டு முனைகளும் ஏதோ ஒரு புள்ளியில் சந்திக்க வேண்டும். ஆனால் அது நிகழ்வதில் ஒரு சிக்கல் உள்ளது.