முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பிராமணர்கள் + தலித்துகள்

தலித் இலக்கியத்திலும் சினிமாவிலும் பிராமணர்கள் மீதான பெரும்பாலும் விமர்சனமே இராது. தலித்திய ஆய்வுகள் உருப்பெறும் காலத்தில் இருந்து அதற்கு பிராமணர்கள் குறிப்பிடத்தக்க ஆதரவு அளித்திருக்கிறார்கள். இன்றும் தலித்தியம் பற்றி பேசும் போதும் பிராமணர்களின் கண்கள் சுடர்வதை கண்டிருக்கிறேன். அதே போல பிராமணர்கள் என்ன தான் தம் சாதியத்தை இறுக்க பற்றியிருந்தாலும், அதை வெளிப்படையாய் பறைசாற்றினாலும் அவர்களுடன் இணக்கமாய் செயல்படுவதில் தலித்துகளுக்கு சிக்கலே இருந்ததும் இல்லை, இருப்பதும் இல்லை.

எழுத்தும் மரணமும்

நான் சமீபமாய் உடல் நலமின்மை காரணமாய் எழுதுவதை படிப்படியாய் குறைக்க முடிவெடுத்தேன். கொஞ்ச காலம் எழுத்தில் இருந்து விலகி இருப்பதே என் ஆரோக்கியத்துக்கு நல்லது என நம்பினேன். இதைப் பற்றி நான் ஒரு பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டேன். அப்போது நண்பர் விநாயக முருகன் பின்னூட்டத்தில் எழுதினார் “எழுதுவதை நிறுத்தினால் நீங்கள் செத்து விடுவீர்கள்.” ஆனால் சிலர் எழுத்தை குறைப்பது எனக்கு நலம் பயக்கும் என இன்னொரு பக்கம் குறிப்பிட்டனர். தமிழில் இது சம்மந்தமாய் இரண்டு முகாம்கள் உள்ளன:

கதை முடிவுக்கு வந்து விட்டீர்கள் பற்றி பெருமாள் கருப்பையா

இந்த கபாலி விவாதத்தால் டயர்டாகி, இன்று ஒரே மூச்சில் உங்கள் " கதை முடிவுக்கு வந்து விட்டீர்கள்" படித்து முடித்தேன், இடையிடையே பதட்டத்துடன் தான்! அபாரம்! ராஜேஷ்குமார்...

கபாலியும் காந்தியும்

எம்.ஜி.ஆரின் மிகப்பெரிய அரசியல் வெற்றிக்கு காரணம் சினிமா பிம்பத்தையும் தனிப்பட்ட அடையாளத்தையும் இணைத்தது தான் என பலரும் பேசி இருக்கிறார்கள். ஒரு அரசியல்வாதி வீரதீரமாய், உணர்ச்சிப்பிழம்பாய், நீதிப் போராளியாய் உரை நிகழ்த்தும் போது அந்த பேச்சு தான் அவர் ஆளுமை என நம் மனம் உடனே நம்பி விடுகிறது. இது மனித மனத்தின் ஒரு பிரத்யேக குணம். இருட்டான இடத்தில் மாட்டிக் கொள்கிறோம். அங்கு ஒரு தப்பி வந்த புலி பதுங்கி இருப்பதாய் சொல்கிறார்கள். பின்னால் லேசாய் ஒரு ஒலி. உடனே அங்கு புலி வந்து விட்டதாய் பதறுவோம். நின்ற இடத்திலே தாவுவோம். உண்மையில் அங்கு ஒரு சருகு அசைந்திருக்கும்.

கபாலி – இலக்கற்ற சினிமா

கபாலி பற்றி பேசுவோர் மூன்று முகாம்களாய் பிரிந்துள்ளார்கள். ஒரு முகாம், ரஜினி என்ன செய்தாலும் அற்புதம், அவருக்காகவே பார்க்கலாம் என்கிறது. இன்னொன்று ரஞ்சித்தின் படத்தை விமர்சிக்கிறவர்கள் சாதி வெறியர்கள், தலித் வெறுப்பாளர்கள் என்கிறது. இறுதியாய் எளிய சினிமா ரசிகர்களின் முகாம். அவர்களுக்கு இப்படம் ஏமாற்றமே. அந்த கோபத்தை பகடியாய் வெளிப்படுத்துகிறார்கள். அந்த பகடியில் அவர்கள் ரஜினி மற்றும் ரஞ்சித் மீது எவ்வளவு எதிர்பார்ப்பும் மரியாதையும் வைத்திருக்கிறார்கள் என்றும் தெரிகிறது. இந்த படத்தை அவர்களால் ஒரு சாதாரண வணிகப் படத்தின் தோல்வி என பார்க்க இயலவில்லை.

ஆலமர விழுதாக உன்னை புணர்வேன்

”கூடல் நகர்” படத்தில் வரும் ”என்னை உனக்குத் தருவேன்” என்ற பாடலை கேட்ட நினைவில்லை. அதை தேன்மொழி தாஸ் தன் பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து போது தான் அவர் எழுதியது என கவனித்தேன். எவ்வளவு அழகான வரிகள்: “ஆலமர விழுதாட்டம்  காலச்சுத்தி இருப்பேன்”

மஞ்சள் நிறமே மஞ்சள் நிறமே!

  “கடலும் கிழவனும்” நாவல் பற்றி அருள் ஸ்காட் எழுதிய இந்த பதிவை ரசித்தேன். அந்த நாவலில் மஞ்சள் நிறம் எப்படி ஒரு குறியீடாக செயல்படுகிறது என அவர் சுட்டுவது எனக்கு புது புரிதலை அளித்தது. மஞ்சள் நோய்மையின், மரணத்தின் நிறம். எழுபது, எண்பதுகளின் தமிழ் கவிதையில் இந்நிறம் அடிக்கடி வரும். இந்நாவலில் கடலில், கீழவனின் உணவில் எங்கும் மஞ்சள் வியாபிக்கிறது. இன்னொரு விசயம் கடலை நெருங்கிப் பார்க்கையில் அது பழுப்பு நிறமானது என்பது. ஆக இது இயல்பாகவும் கதையில் பொருந்துகிறது. ஒரு படைப்பை திரும்ப படிக்கையில் அது குறித்து பேசுகையில் சட்டென ஒரு புதிய அவதானிப்பு கிடைப்பது சிலாக்கியமானது. இந்நாவலையும் நண்பர்கள் கூடி வாசித்து உரையாடும் போது தான் அருளுக்கு இந்த கருத்துக்களும் தூண்டுதலும் கிடைக்கிறது. இலக்கியம் தனியாய் வாசிக்க வேண்டியதல்ல. சினிமா, நாடகம் போல் கூட்டமாய் அமர்ந்து ரசிக்க வேண்டிய ஒன்றும்