இது “ துப்பறிவாளன் ” குறித்த என் விமர்சனம் அல்ல . அப்படத்தில் என்ன பிடித்தது , என்ன பிடிக்கவில்லை என்பதைப் பற்றி இன்னொரு சந்தர்பத்தில் எழுதுகிறேன் . இப்பதிவு மிஷ்கின் “ துப்பறிவாளனில் ” தீமைக்கும் கருணைக்குமான தொடர்பு பற்றின ஒரு சித்திரத்தை எவ்வளவு துலக்கமாய் மிகக் குறைந்த நேரத்தில் நமக்கு அளிக்கிறார் என்பதைப் பற்றியது . அதே போன்று , மிஷ்கினின் பிரதான பாத்திரங்களின் சுபாவத்தில் , செயல்பாட்டில் தெரியும் பித்தை , அதர்க்கத்தை எப்படி புரிந்து கொள்வது , அதைக் கொண்டு மிஷ்கின் எனும் மனிதனைப் புரிந்து கொள்ள முடியுமா என்றும் அலச முயன்றிருக்கிறேன் . முதலில் , மிஷ்கினின் இதுவரையிலான படங்களில் தீமை எப்படி சித்தரிக்கப்பட்டுள்ளது எனப் பார்ப்போம் .