முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

“மிஷ்கினைத் துப்பறிவோம்”: எதிர்வினைகள்

 Image result for mysskin

இம்மாத உயிர்மையில் வெளியாகியுள்ள எனது கட்டுரை ”மிஷ்கினை துப்பறிவோம்”. அதற்கு உற்சாகமான ஆர்வமுட்டும் எதிர்வினைகள் தொடர்ந்து வருகின்றன. இதழ் வெளியான அன்றே நண்பரும் எழுத்தாளரும் நடிகருமான ஷாஜி என்னை போனில் அழைத்து நீண்ட நேரம் பேசினார். அவர் மிகுந்த உணர்ச்சிகரமான நிலையில் இருந்தார். “மிஷ்கினை நீண்ட காலம் கூட இருந்து அறிந்த ஒருவர் எழுதுகிற விசயத்தை எப்படி அவரை ஒரே ஒருமுறை மட்டுமே சந்தித்த நீங்கள் எழுதினீர்கள்?” என்ற கேள்வியை திரும்பத் திரும்ப கேட்டார். அவரது வியப்பு எனக்கு மேலும் வியப்பாக இருந்தது. அந்தளவுக்கு சிறப்பாகவா எழுதியிருக்கிறேன்? மிஷ்கினின் ஆளுமையைப் பற்றின எனது ஒரு எளிய அவதானிப்பாகவே அதைக் கருதி இருந்தேன். ஒருவிதத்தில் சமீபத்தில் சாருவைப் பற்றி நான் எழுதியதன் நீட்சி தான் இது.
Image result for ஷாஜி

 எப்படியோ ஷாஜிக்கு பிடித்திருந்தது எனக்கு மிகுந்த உவகையும் திருப்தியும் அளித்தது. அவர் கூர்மையான மனிதர். ஆழமான வாசகர். அவருக்கு சரியாகப் பட்டதென்றால் நான் ஒரு நல்ல கட்டுரையைத் தான் எழுதியிருக்கிறேன் எனப் பொருள்! இக்கட்டுரையைப் பற்றி மிஷிகினிடம் அவர் பேசினதாகவும், இதை அவர் மிஷ்கின் வாசிக்கும் பொருட்டு அனுப்பித் தரப் போவதாகவும் சொன்னார். ஷாஜி “துப்பறிவாளன்” படம் பற்றி பல அற்புதமான விசயங்களை என்னிடம் அன்றிரவு பகிர்ந்து கொண்டார். அதையெல்லாம் கேட்டிருந்தது ஒரு அபாரமான அனுபவம்.

ஷாஜியுடனான உரையாடலைத் தொடர்ந்து இந்த மின்னஞ்சல்கள் வந்தது பின்னிருந்து அணைத்து காதலி அளிக்கும் முத்தங்கள் போல் இருந்தன. யமுனைச்செல்வனுக்கும் விஜயகுமாருக்கும் நன்றிகள்! என்னைப் போன்ற ஒரு எளிய எழுத்தாளன் வேறென்ன எதிர்பார்க்க முடியும்? இது போன்ற எதிர்வினைகள் தாம் என்னைத் தொடர்ந்து பித்துப் பிடித்தது போல் எழுதச் செய்கின்றன.

 தொடர்ந்து என்னை இது போல் நேசியுங்கள்!

வணக்கம் அபிலாஷ்.

மிஷ்கினை துப்பறிவோம் கட்டுரை வாசித்தேன். படைப்புகளைக்கொண்டு படைப்பாளனை அணுகுவதில் எனக்கு உடன்பாடில்லை எனினும், கட்டுரை அருமை. ஒரே ஒரு குறை.. கட்டுரை இன்னும் விரிவாக இருந்திருக்கலாம் என்பதே. உள்ளடக்கத்தைச் சொல்லவில்லை. ஒருவேளை எடிட்டிங்கில் சுருக்கப்பட்டிருக்கலாம். இதுபோன்ற கட்டுரைகளை ஆங்கிலத்திலும் நீங்கள் எழுதவேண்டும்.


நன்றி
யமுனைச்செல்வன்

அன்புள்ள அபிலாஷ் அவர்களுக்கு ,

வணக்கம் .
உயிர்மை நவம்பர் கட்டுரையை ஒரே மூச்சில் படித்தேன். நீங்கள் உளவியல் சார்ந்து எழுதும் கட்டுரைகள் வாசிக்க அதிசுவாரஸ்யமாக உள்ளன; பெண்ணுடல் குறித்தும் கோபிகிருஷ்ணன் குறித்தும் நீங்கள் முன்னர் எழுதிய, பேசியவை நினைவுக்கு வருகின்றன. உங்களின் இதைப்போன்ற பொது உளவியல் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு வெளிவரவேண்டும் என விரும்புகிறேன்.


மைக்கேல் ஹென்கேவின் Amour என்ற பிரெஞ்சு படத்தை நேரமிருப்பின் நீங்கள் பார்க்கவேண்டும். அந்தப் படத்திற்கும் கட்டுரைக்கும் தொடர்புண்டு. இது குற்றம் பார்த்தல் அல்ல; மிஷ்கினை எனக்கு மிகவும் பிடிக்கும். நாம் அறிந்த ஒன்றை நமக்குப் பிடித்த ஒருவர் சொல்வதால் வரும் இன்பம்.


The confessions of a mask எழுதிய மிஷிமா தற்கொலை செய்துகொண்டார். அந்த சாமுராய்களின் தற்கொலை முறைக்காட்சியும் படத்தில் இருந்தது. அப்போதும் உணர்ச்சி மிகுந்த ஒரு நிலைக்குச் சென்றேன். இவ்வாறாக இரண்டுமுறை.

முன்னமே அறிந்து அதைக் காண்பதால் வரும் இன்பம், அறிதலால் வரும் இன்பம்.
அது நாம் கைகோர்க்கும் புள்ளி அல்லவா?!

நன்றி.

அன்பொடு
விஜயகுமார் .


கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
Hi Abolish, trust you are doing well, I'm a avid reader of your blog.wishing you good health and prosperity.. yet to read your article on myshkin..

Cheers..
jkdocdickens இவ்வாறு கூறியுள்ளார்…
அன்புள்ள அபிலாஷ் , இந்த உயிர்மை இதழை வாங்க தவற விட்டு விட்டேன் ... உங்களது கட்டுரை யை வாசிக்க முடியவில்லை ....மிஷ்கின் பற்றிய கட்டுரை .....எப்பொழுது உங்கள் வலைப்பூவில் பதிவேற்றுவீர்கள் ....பதிவேற்ற ஏதேனும் தடை உள்ளதா ?
Stalin இவ்வாறு கூறியுள்ளார்…
சமீபத்தில் நண்பர் ஒருவர் தற்செயலாக எனக்கு பிடித்த எழுத்தாளர் குறித்து கேட்ட போது,உங்கள் பெயரை தான் கூறினேன் அபிலாஷ்.மிகவும் contemporaryயாக உங்கள் எழுத்தை உணர்வதாக காரணம் கூறினேன்.
நண்பர் விஜயகுமார் கூறியதை போல் உளவியல் சார்ந்து வெளிப்படும் கூர்மையான அவதானிப்புகள் தான் உங்கள் எழுத்தை தொடர்ந்து படிப்பதற்கு என்னை ஈர்த்தது.
அதிலும் உங்களின் கடைசி புதினம் மறக்க முடியாத வாசிப்பனுவம்.அது சார்ந்து நடந்த உரையாடல்களை அறிந்துக் கொள்ள நீண்ட நாட்களாகவே விருப்பம்.
ஆர். அபிலாஷ் இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி ஸ்டாலின்!

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு ஏன் க்யானேஷ் குமாருக்கு எதிராகப் பொங்குவதில்லை?

  சினிமா போதையின் பிரச்சினைகளைப் பற்றி தமிழ்நாட்டு எழுத்தாளர்களே தொடர்ந்து அழுது புலம்பி சபித்து சமாதானமாகி இருக்கிறார்கள் இதுவரை. ஆனால் இப்போது முதன்முறையாக வெகுமக்கள் இடையில் சினிமா வெறியர்கள் அரசியல்மயமாவதற்கு எதிர்ப்பு வந்திருக்கிறது. குறிப்பாக 40-70 வயதுக்கு உட்பட்டோர் பேசுவதைக் கேட்டால் புரியும். அரசியல் நோக்கர்களும் இதனால் கசப்படைகிறார்கள். தமிழ்நாட்டினர் எப்படி மூளைச்சலவை செய்யப்பட்டனர் என திருப்பூர் குணாவும், ஜீவாவும், ஆர்.கே. சண்முகவேலும் சேர்ந்து ஒரு புத்தகமே எழுதியிருக்கிறார்கள் ("டிஜிட்டல் போதையில் நாம் யாரையும் தேர்ந்தெடுக்கவில்லை"). அவர்கள் சமூகவலைதளச் செயல்பாடுகளும் தரவுப் பகுப்பாய்வுத் தொழில்நுட்பமும் விஜய்யின் வெற்றிக்கு எப்படிப் பயன்பெற்றன என்றே பிரதானமாகப் பேசினாலும் விஜய்யின் சினிமாப் புகழ் அவரை வைத்து நடந்த டிஜிட்டல் பிரச்சாரத்துக்கு அடிப்படை என்பதை அவர்கள் மறுக்கவில்லை. கடந்த தேர்தலின் போதிருந்தே 'தற்குறி' எனும் சொல் இதற்கென மக்களால் பரவலாகப் பயன்படுத்தப்படுவதையும் பார்க்கிறோம். 'தற்குறி' சினிமா ரசிக மனநிலை, சினிமா மந்தைத்தனம் ஆகியவற்றை...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

மொழியாக்கத்தின் போது நாம் தவற விடும் கவித்துவம்

  இப்போது ஏ.ஐ மொழியாக்கம் குறித்து சர்ச்சைகள் நிகழ்ந்து வரும் வேளையில் நான் கடந்த ஆண்டு ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்குச் செய்யப்பட்டுள்ள மொழியாக்கங்களை ஏ.ஐ மொழியாக்கங்களுடன் ஒப்பிட்டு எழுதிய ஆய்வுக் கட்டுரையை நீங்கள் படித்துப் பார்ப்பது ஆழமான பார்வையை உங்களுக்கு அளிக்கும். உங்களிடம் சந்தா இல்லாத பட்சத்தில் IGI Global இணையதளத்தில் அதைப் படிக்க இயலாது. ஆகையால் ஒரு பகுதியை இங்கே தருகிறேன். இதில் பெருமாள் முருகன் "மாதொரு பாகன்" நாவலை ஆங்கிலப்படுத்திய பகுதியை எடுத்து அதை ஏ.ஐ மொழிபெயர்ப்புடன் ஒப்பிட்டு இந்த மொழியாக்கங்கள் மூல மொழியில் இருந்து எந்தளவுக்கு வேறுபடுகின்றன என்பதை வாக்கிய அமைப்பு, தொனி, உருவகங்களைக் கருத்திற்கொண்டு விவாதித்திருக்கிறேன்: Ponna is left alone by her mother in the middle of the crowd. As she looks around the crowd in confusion, “frozen in fear”, she begins to acutely observe the people around her. Murugan’s poetic description of the men who stand in dark tapestry of shadow and light dots is brilliant. The figure of speech of metaphor that the author uses in ...